''தன் மதத்துக்கு தான் முக்கியத்துவம் தர்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்தில் இருக்கிற எல்லா பாலிடெக்னிக் கல்லுாரியிலும் புதுசா, 'ஆன்லைன்' திறன் பயிற்சியை நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுச்சு... இந்த பயிற்சி அளிக்கும் வாய்ப்பை, சினிமா இசையமைப்பாளர் மற்றும் நடிகரா இருக்கிறவரின் சகோதரிக்கு குடுத்திருக்காங்க...
''இவங்க ஏற்கனவே, 'ஆன்லைன்'ல மாணவ - மாணவியருக்கு ஊக்கம் தரும் பயிற்சி குடுத்துட்டு இருக்காங்க... இப்ப, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஒரு நாளைக்கு, 67,000 ரூபாய் சம்பளம் பேசியிருக்காங்க...
''மொத்தம், 10 நாள் பயிற்சிக்கு 6.70 லட்சம் ரூபாய் வருது... ஏற்கனவே, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின், 'அப்பாவி' பெண் அதிகாரி, தான் சார்ந்த மதத்துக்கு முக்கியத்துவம் தர்றதா அரசல்புரசலா பேசிக்கிறாங்க...
''ஏற்கனவே நடந்த சென்னை அண்ணா பல்கலை ஊழியர்கள் நியமனத்திலும் இந்த புகார் எழுந்துச்சு... இப்ப மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், தன் மதத்துக்கே முக்கியத்துவம் தந்திருக்கிறதா புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''திவ்யாவும், ஜெயா பாபுவும் கார்த்தாலேயே ஆபீஸ் கிளம்பிட்டாங்க பாருங்கோ...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

No comments:
Post a Comment