Saturday, January 24, 2026

கோவை வடவள்ளி சட்டவிரோத சர்ச்: கட்ட முயன்ற புகார் – பாதிரி+அதிகாரிகள் கூட்டுச்சதி? - பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை வடவள்ளி சட்டவிரோத சர்ச்:  கட்ட முயன்ற புகார் – பொதுமக்கள் எதிர்ப்பு - subha Jan 20, 2026, 

கோவை வடவள்ளி சின்மயா நகர் அருகே அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் சர்ச் கட்ட அடிக்கல் நாட்ட முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 

சுமார் 30 செண்ட் விவசாய நிலத்தில் இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு முழக்கமிட்டனர். குடியிருப்பு பகுதியில் சர்ச் கட்டினால் எதிர்காலத்தில் மத மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அருகிலுள்ள விநாயகர் கோயில் வழிபாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். 

மேலும் அதனை கட்டுவதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி வாங்கிய நிலையில் தற்பொழுது சர்ச் கட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அது குறித்து மாவட்ட ஆட்சியர் இடமும் மனு அளித்தனர்.

 
https://www.youtube.com/watch?v=zpdhqCBIZmw

இது குறித்து பேசிய சர்ச் நிர்வாகத்தினர் அனைத்து ஆவணங்களும் அனுமதி கடிதமும் NOC சர்டிபிகேட் களும் பெற்று தான் அதனை கட்டுவதாகவும் ஆனால் அதற்கு எதிர்ப்புகள் வருவதாக தெரிவித்தனர். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதற்காக நாங்கள் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment