Tuesday, January 20, 2026

வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க மேப்: ட்ரம்ப் வெளியிட்டார்

வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க Map: ட்ரம்ப் வெளியிட்டார் 21 Jan 2026

வாஷிங்டன்: வெனிசுலா, கனடா மற்​றும் கிரீன்​லாந்தை அமெரிக்​கப் பகு​தி​களாகக் காட்டும் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளி​யிட்​டுள்​ளார். 

உலகின் அதிக எண்​ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கப் படைகள், அந்​நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்​றது. மேலும், அந்​நாட்டை அமெரிக்கா நிர்​வாகம் செய்​யும் என்​றும் அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

இதைத் தொடர்ந்​து, டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்​சிப் பகு​தி​யாக விளங்​கும் கிரீன்​லாந்தை முழு​வது​மாக அமெரிக்கா ஆக்​கிரமிக்க வேண்​டும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வரு​கிறார்.

அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்கு கிரீன்​லாந்து மிக​வும் முக்​கி​யம். நாங்​கள் இந்த கிரீன்​லாந்தை கைப்​பற்​றா​விட்​டால் சீனா அல்​லது ரஷ்யா கைப்​பற்​றி​விடும் என்று அதிபர் ட்ரம்ப் கூறி வரு​கிறார். இதற்கு கிரீன்​லாந்து மற்​றும் டென்​மார்க் மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். ஆனால் ட்ரம்ப் அரசு தனது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக உள்​ளது. அமெரிக்​கா​வின் இந்த முடிவுக்​கு, டென்​மார்க் மற்​றும் ஏராள​மான ஐரோப்​பிய நாடு​களின் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வெனிசுலா, கனடா நாடு​கள் மற்​றும் கிரீன்​லாந்தை அமெரிக்​கா​வின் பகு​தி​களாகக் குறிப்​பிட்டு செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப்​பட்ட வரை​படத்தை அதிபர் ட்ரம்ப் நேற்று சமூக வலைதளத்தில் வெளி​யிட்டுள்​ளார்.

பிரிட்​ட​னுக்கு கண்​டனம்: அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “இந்​தி​யப் பெருங்​கடலில் உள்ள சாகோஸ் தீவில், கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல ஆண்​டு​களாக அமெரிக்​கா​வின் கடற்​படை தளம் செயல்​பட்டு வரு​கிறது. இந்நிலையில், சாகோஸ் தீவை, மொரீசி​யஸிடம் ஒப்​படைக்​கும் பிரிட்​டனின் முடிவு அதிர்ச்சி அளிக்​கிறது. இந்த முடிவு சீனா​வுக்​கும்​, ரஷ்​யா​வுக்​கும்​ சாதக​மானதாக இருக்​கும்​” என்​றார்​.

போர் விமானங்கள் நிறுத்தம்: கிரீன்​லாந்து தீவை அமெரிக்​கா​விடம் ஒப்​படைப்​ப​தற்கு டென்​மார்க் மறுப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், அந்த பிராந்​தி​யத்​தில் தனது பிடியை வலுப்​படுத்த அமெரிக்கா ராணுவ நடவடிக்​கை​களில் இறங்​கி​யுள்​ளது. குறிப்பாக, ஆர்க்​டிக் பகு​தி​யில் அமெரிக்கா தனது போர் விமானங்​களை நிலைநிறுத்​தி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் இந்த நடவடிக்கை நேட்​டோ கூட்​டணி நாடு​களிடையே பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​

உள்​ளது.

இதற்கு பதிலடி​யாக கூடு​தல் போர் தளவாடங்​களை​யும், சிறப்​புப்படைப் பிரி​வினரை​யும் டென்​மார்க் கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்​துள்​ளது. இதற்​கு, ஐரோப்​பிய நாடு​கள் தரப்​பிலும் ஆதரவு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆர்க்​டிக் பிராந்​தி​யத்​தில் தற்​காப்பு நடவடிக்​கைகளை வலுப்​படுத்​தவே இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக டென்​மார்க் ராணுவ வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இரு தரப்​பிலும் ராணுவ நகர்​வு​கள் அதி​கரித்​துள்​ள​தால், நேட்டோ உறுப்பு நாடு​களுக்கு இடையே​யான உறவில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment