Saturday, October 5, 2024

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் : திமுக அரசு ஊழல் 15000

 மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் : திமுக அரசு ஊழல் செஞ்சிடுச்சி - பாஜக குற்றச்சாட்டு!

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil21 Sep 2024

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் திமுக அரசு ஊழல் செய்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

 ஹைலைட்ஸ்:
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம்
திமுக அரசு ஊழல் செய்துவிட்டது
பாஜக பகீர் குற்றச்சாட்டு
தமிழக அரசின் மீது நாள்தோறும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாஜக முன்வைத்து வருகிறது. அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பு வரை நாள்தோறும் தமிழக அரசை விமர்சித்து ஒரு அறிக்கையாவது வந்துவிடும். அண்ணாமலைக்குப் பதிலாக தற்போது ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

 தமிழக அரசின் மீது நாள்தோறும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாஜக முன்வைத்து வருகிறது. அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பு வரை நாள்தோறும் தமிழக அரசை விமர்சித்து ஒரு அறிக்கையாவது வந்துவிடும். அண்ணாமலைக்குப் பதிலாக தற்போது ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது
https://timesofindia.indiatimes.com/city/chennai/one-crore-rural-households-in-tamil-nadu-have-tap-water-connections/articleshow/107561026.cms
இந்த நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசு மீது விமர்சனம் முன்வைத்துள்ளது. அதில், “பிரதமர் மோடி பெண்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும், "ஜல் ஜீவன்" திட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

ஆனால், அதனை செயல்படுத்த வேண்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு, திருச்சி மாவட்டம் புங்கனூரில் ஜல்ஜீவன் திட்டத்தை நிறைவேற்றும் போர்வையில், 100 வீடுகளுக்கு ஒரு அடி ஆழத்தில் குடிநீர் இணைப்பற்ற வெறும் குழாய்களை மட்டும் நட்டு சென்றிருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளது.
https://thecommunemag.com/tamil-nadu-youth-booked-for-video-alleging-irregularities-in-tap-water-connection-work/


https://www.youtube.com/watch?v=5zOqhhhHxLI



உள்ளாட்சி அமைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் இந்த கீழ்த்தரமான செயல்பாடு, திமுக ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ள பாஜக, “ஜல் ஜீவன் திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்றுக் கொண்டு, வெறும் குழாய்களை மட்டும் நட்டுவிட்டு திட்டம் நிறைவு பெற்றது போல ஒரு மாயை உருவாக்க முயற்சித்துள்ளனர். அப்பட்டமான ஊழல் நடந்திருப்பதையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “இவை அனைத்தும் திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையைக் காட்டிலும், ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நிறுவுகிறது. மாநில நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தனது ஊரில், அதுவும் தனது துறையில் நடைபெற்ற இவ்வெட்கக்கேடான செயலை செய்தவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுப்பாரா ?

இல்லையெனில் இதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றும் சர்வாதிகார விடியல் ஆட்சி என்று மக்கள் இறுதி முடிவே செய்து விடலாமா?” என்று காட்டமாக கேள்வியை முன்வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து விரைவில் பதிலடி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா தேர் - உயரத்தைக் குறைக்கணுமாம்

  நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்ட...