விநியோகிக்கப்பட்டன. கடற்கரையோர கிராமங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். ஆங்காங்கே இந்துக்கள் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ வெறியூட்டப்பட்ட மீனவர்களால் கடலில்
கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். முதல் சுற்று தாக்குதலில் இந்துக்கள் பல கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டு தென்னந்தோப்புகள், அரசு பள்ளிகள் போன்றவற்றில்
அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.
மாவட்டம் -மண்டைக்காடு கிராமத்தில் கிறித்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக நடைபெற்ற சம்பவங்களின் தொடர்பாக 1-3-1982 மற்றம் 15-3-1982 ஆகிய தினங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி திரு. பி. வேணுகோபால் ஆணைக் குழுவின் அறிக்கை - முடிவுகள் - ஏற்கப்படுகின்றன - ஆணை - வெளியிடப்படுகிறது. ஆணை:- கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு கிராமத்தில்கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்களின் விளைவாக நடைபெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து 1-3-1982 மற்றும் 15-3-1982 ஆகிய நாட்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை செய்ய மேற்கண்ட அரசாணையில் 1952-ஆம் ஆண்டு ஆணைக் குழு சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற நீதிபதி வேணுகோபால் அவர்களை ஒரு நபர் ஆணைக் குழுவாக அரசு நியமித்தது.
விசாரணைக் குழுவின் ஆய்வு வரம்பு வருமாறு (அ) கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் 22-3-1981-லிருந்து 22-3-1982 வரை ஓராண்டு காலத்திற்கு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே பதட்ட நிலை உருவாகுவதற்கு ஏதுவான சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் ஆராய்ந்து விசாரணை செய்யவும்; (ஆ)1-3-1982 அன்று மண்டைக்காடு பகுதியில் காவல் துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததின் விளைவாக 6 பேர் மரணமடைந்ததால், இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றி விசாரணை செய்யவும் (இ) 15-3-1982 அன்று மேல்மணல்குடி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்ததற்குக் காரணமான சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றி விசாரணை செய்யவும் (உ) இம்மாதிரி கலவரங்கள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பரிந்துரைகள் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது; 2. தன்முன் அளிக்கப்பட்ட பல்வேறு சாட்சியங்களின் வாக்கு மூலங்களை ஆராய்ந்து பார்த்த விசாரணைக் குழு கீழ்க்கண்டவாறு தனது பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளது 1) மத மாற்றத்தால் இனக் கலவரங்கள் ஏற்படுவதாலும், சட்டம்- ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுவதாலும், மத்தியப் பிரதேசம், ஒரிசா, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வன்முறை, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் அல்லது பொருளுதவி என்ற போர்வையில் மத மாற்றத்தைத் தூண்டுதல் என்பன போன்ற காரணங்களால் செய்யப்படும் மத மாற்ற்றத்தைத்தடை செய்து சட்டம் இயற்ற்றியுள்ள்ளது போல், தமிழ்நாட்டிலும் இதனைப் பின்பற்றி ஓர் சட்டம் இயற்றலாம். (2) வேவ்வேறு மதத்தினர் வழிபடும் ஆலயங்கள் மற்றும் பொது வழிபாடுகள் மிகவும் அருகருகே உருவாவதைத் தடை செய்யலாம். (3) இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மத வேறுபாடின்றி ஓர் பொதுவான சிவில் நடைமுறை விதி தொகுப்பு வழங்கப்படலாம். அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவில் கண்டுள்ள வழிகாட்டி நெறிகளைப் பின்பற்றி பொது சிவில் நடைமுறை விதித் தொகுப்பு (Civil Code) ஒன்றினை உருவாக்கி இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என்ற மதப் பாகுபாடின்றி இந்தியக் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கலாம். (4) இருதரப்பட்ட மதவழிபாடு ஆலயங்களில் ஒலிபெருக்கி அமைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த ஒலி பெருக்கிகளால் இனக் கலவரங்களும், பதட்ட நிலைகளும் ஏற்பட ஏதுவாக உள்ளதால் இதனை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் காவல் துறைச் சட்டத்தினைத் திருத்தி அமைக்கலாம். மற்றும் பதட்ட நிலை உருவாகுவதைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைச் சட்டத்தில் தக்க திருத்தம் கொண்டு வரலாம். (5) மதச் சார்புடைய ஊர்வலங்கள், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதிகளில் செல்ல அனுமதிக்காமல் தடை செய்யலாம்.
(6) மத மாற்றத்திற்கு, பெரும்பாலான அயல்நாட்டுப் பணம், நிதியுதவி என்ற போர்வையில் மத மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதால், இதனைக் கட்டுப்படுத்த அயல்நாட்டு நன்கொடை (முறை ப்படுத்தல்) சட்டம் தகுந்த முறையில் திருத்தப்பட நடவடிக்கை எடுக்கலாம்.
(7) இனக் கலவரங்களின் போது ஏற்படும் மோதல்களின் தொடர்பாக பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளை சாதாரண நீதிமன்றங்களில் விசாரணை நடத்தாமல் விசேட நீதிமன்றங்கள் அல்லது டிரிபியூனல் மூலம் துரிதமாக நடத்தத் தேவையான சட்டம் இயற்றப்படலாம். (8) 1952-ஆம் ஆண்டு விசாரணைக் கமிஷன் சட்டத்தினை இம்மாதிரி விசேஷ நீதிமன்றங்கள் அல்லது டிரிபியூனல்கள் அமைக்கும் அதிகாரம் கொடுக்கும் வகையில் திருத்தியமைக்கலாம். (9) கமிஷன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கலவரத்தின் தொடர்பாக நடைபெற்று வரும் குற்ற வழக்குகளை நிறுத்தாமல் உடனடியாக புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். (10) இனக்கலவரத்தைத் தூண்டுவோரை அடக்கவும் கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் பிரத்தியேக பயிற்சி அளிக்கப்பெற்ற ஆயுதப்படைக் காவல் படையினரை நியமிக்கலாம். (11) இனக் கலவரங்களின் போது நடு நிலைமை வகித்தும், சார்பற்றமுறையிலும் நடந்து கொள்ளப் போதுமான அனுபவமிக்க பொது மக்களின் ஒத்துழைப்பை நாடும் அதிகாரிகளை இனக் கலவரங்களினால் பதட்ட நிலை ஏற்படும் இடங்களில் நியமிக்கலாம் (12) பிரத்தியேக புலனாய்வுப் படைகளில், இனக் கலவரங்களின் போது நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க திறமை வாய்ந்த நேர்மையான அதிகாரிகளை நியமிக்கலாம். (13) வன்முறை மற்றும் இனக் கலவரங்களைத் தூண்டும் ஆட்சேபகரமான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், சுற்றாரிக்கைகள் போன்றவைகளைப் பறிமுதல் செய்தும், தடை செய்தும் குற்றம் மற்றும் தேர்தல் (திருத்தம்) சட்டங்களின் கீழ் வழக்குத் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்காலம். (14) ஈத்தாமொழி, கடையாலுமூடு, அஞ்சுகிராமம், மேலக்கிருஷ்ணன் புதூர் மற்றும் சித்திரன்கோடு ஆகிய இடங்களில் மீண்டும் இம்மாதிரி இனக்கலவரங்கள் ஏற்படாவண்ணம் தடுக்கும் பொருட்டு புதிய காவல் நிலையங்கள் அல்லது புறக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தலாம். (15) கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவர்களில் தகுதிபெற்ற படித்தவர்களில் சிலரைக் காவல் துறை பணியில் சேர்ப்பதால், உள்ளூர் மீனவ சமுதாயத்தினரை கலவரங்களின்போது ஓரளவு கட்டுப்படுத்தலாம். (16) கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் முறையாகப் பயற்சி பெற்ற திறமை வாய்ந்த காவலர்களை கலவரம் உருவாகாமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தலாம். (17) இனக் கலவரம் நடைபெற வாய்ப்பு உள்ள பகுதிகளில் நுண்ணறிவு புலனாய்வுக் காவல் துறையினர் மூலம் முன்கூட்டியே வதந்திகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றைச் சேகரித்து, முன்னெச்சரிக்கையான இனக் கலவரம் ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். (18) விசேட நடமாடும் காவல் படைப் பிரிவு ஒன்று அமைத்து இனக்கலவரங்கள் மற்றும் பதட்ட நிலை உள்ள இடங்களுக்கு விரைந்து சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள வழி செய்யலாம். (19) மணவாளக்குறிச்சியில் ஏற்றுமதி செய்யப்படும் விசேட மண்ரகத்தை, வெளியேற்றாமல் உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம். (20) இதனால் வெளியே ஏற்றுமதி செய்யப்படும் தரமான (மானோசைட டைட்டானியம்) இம் மண்ணைக் கொண்டு தொழிற்சாலைகள் ஆரம்பித்தால் வேலை வாய்ப்புப் பெருக வாய்ப்பு உண்டாகலாம். (21) பொதுத் துறை நிறுவனம் (அல்லது) கூட்டுத் துறை மூலம் ரப்பர் தொழிற் சாலைகள் இம் மாவட்டத்தில் துவங்கினால் பொருளாதார வளர்ச்சி மேம்படலாம். (22) கயிறு திரிக்கும் தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்தினால் ஏற்றுமதியை அதிகரிக்க வகை செய்யலாம். (23) மீன் பிடிக்கும் தொழிலை நவீனப் படுத்தினால் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க வகை செய்யலாம். (24) தோவாளை வட்டத்தில் சிமெண்ட் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் கிடைப்பதால், இங்கு ஒரு சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம். (25) ரப்பர் போர்டு கடனுதவி அளிப்பது போன்று, முந்திரித் தோட்டம் வைத்து இருப்பவர்களுக்கும் கடனுதவி அளிக்கலாம். முந்திரி கார்ப்பரேஷன் மூலம் கன்னியாகுமரியில் இயங்கும் முந்திரி சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா முந்திரி கிடைக்க வகை செய்யலாம்.
(26) கொல்லங்கோட்டிலிருந்து மணக்குடி வரை உள்ள கடற்கரை சாலைகளை செம்மைப்படுத்தி போக்குவரத்தைத் துரிதப்படுத்தலாம். இதனால் சட்டம் - ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு, விரைவில் தடையின்றிச் செல்ல ஏதுவாகும். (27) இந்த மாவட்டத்தில் உள்ள வட்டங்களின் பரப்பளவு தற்பொழுது அதிகப்படியாக உள்ளதால் அவற்றை சிறு வட்டங்களாகப் பிரித்தால், மாவட்ட நிர்வாகம் திறமையாக நடைபெற ஏதுவாகலாம். (28) மீனவர்களுக்கு எல்லா பருவ நிலையிலும் தொழில் நடத்த முழு அளவில் வாய்ப்பில்லாததால், அவர்களுக்கு மேற்கொண்டு வேலைவாய்ப்பு ஏற்பாடுகள் செய்யலாம். (29) மீனவர்கள் தற்பொழுது கடலோரப் பகுதியில் தனித்து வாழ்வதைத் தவிர்த்து எல்லோருடனும் உள்ளூரில் சேர்ந்து வாழும் வகையில் ஏற்பாடுகள் செய்தும், அரசுப் பணிகளில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தியும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தலாம். (30) மீனவர்கள் தங்கள் குறைகளை அரசுக்கு எடுத்துக்காட்ட ஏதுவாக மீனவ சமுதாயத்துக்கு என்று ஓர் சட்டமன்றப் பேரவைத் தொகுதி ஒதுக்கலாம். (31) கன்னியாகுமரி மாவட்டத்தில் இன ஒற்றுமையும் அமைதியும் முன்னர் இருந்து வந்துள்ளது. எனினும் ஒரு இயக்கதின் தீவிர மதப்பிரச்சாரத்தினால் பெருமளவு இனக் கலவரங்க்க்கள் ஏற்ப்ப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்மாதிரி இயக்கத்தினர் தீவிர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், எச்சரிக்கையாக தேவையானால் தடுக்க வேண்டியும், தக்க வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். இம்மாதிரி இயக்கங்கள், ஆயுதம் தாங்க்கி பயிற்சி அளிக்கும் இடங்க்களைக் கண்காணித்து வன்முறை ஏற்படாதவண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் (32) தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் பொருட்டு, இம்மாதிரியான இயக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியமாகும். கடந்த காலத்தில், இந்து மதம் ஏராளமான அன்னிய மதங்களின் ஆதிக்கத்தின் போது எவ்வித ஆக்கிரமிப்புக்கும் இடமளிக்காமல் அழியாது நிலைபெற்றிருந்ததால், இந்து மதத்தைக் காக்க தனி இயக்கங்கள் ஏதும் தேவையில்லை என்றுறு கருதப்ப்படுகிறது. எனவே, இம்மாதிரி இயக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். (33) கன்னியாகுமரி மாவட்டத்தில் மதச் சார்பான மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் அடிக்கடி நடைபெறுவதால், காவல் துறையினர் தக்க எச்சரி க்கையுடன் கண்காணித்து இனக்கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். (34) பலதரப்பட்ட சாதி அடிப்படைகளில் ஏராளமான சங்கங்கள் தோன்றி வருவது இனக் கலவரங்களைத் தூண்டுவதற்கு ஒரு படியாக அமைகிறது. எனவே, இம்மாதிரி சங்கங்களின் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் அரசு தரப்பிலோ மக்கள் பிரதிநிதிகளின் தரப்பிலோ பங்கேற்று கலந்து கொள்வதைத்தவிர்க்கலாம். 35. ஆணைக்குழுவின் சட்ட ரிதியான பரிந்துரைகளையும், நீதி, நிர்வாகம் மற்றும் காவல் துறை சம்பந்தப்பட்ட பரிந்துரைகளையும், சமுதாய,பொருளாதார மாற்றங்கள் தவறான அடிப்படையில் அதாவது,வன்முறையால், பொருளுதவியால், ஏமாற்றத்தால், இன்னபிற காரணங்களால் நிகழும்போது, அதனைத் தடை செய்ய சட்டம் ஒன்று ஒரிசா, மத்தியப்பிரதேசம், திரிபுரா மற்றும் அருணாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது போன்று தமிழ் நாட்டிலும் இயற்றலாம் என்ற பரிந்துரையையும், இன ஒற்றுமையைக் குலைக்கும் அமைப்புகளின் தீவிர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய - பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது. மத, இன அரசியல் பிரச்சினைகள் பிணைந்து இருக்கும் சூழ்நிலையில் இவற்றைக் கவனமாகப்பரிசீலித்து ஒரு முடிவான அமைப்பை (Lasting Solution) ஏற்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையாக சில உயர்மட்ட அதிகரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, அக்குழுவின் முழுமையான அறிக்கை பெற்று, அதன் பரிந்துரைகளை ஆராயலாம் என அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிலையில், விசாரணைக்குழுவின் கண்டு பிடிப்புகளின்படி 1-3-1982 அன்று மண்டைக்காடு பகுதியிலும், 15-3-1982 அன்று மேல்மணல்குடியிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காவலர்களின் உயிர் களுக்கும்,உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூ ழ்நிலை உருவானதால் அச்சமயம் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு நியாயமானதே என்ற விசாரணைக்குழுவின் முடிவினை அரசு ஏற்றுக் கொள்கிறது. (ஆளுநரின் ஆணைப்படி) டி.வி. அந்தோணி, (அரசு தலைமைச் செயலர்) தொகுப்பு டாக்டர் D.பீட்டர் http://marshallnesamony.blogspot.com/2019/08/blog-post.html?
No comments:
Post a Comment