Thursday, October 3, 2024

மோகன் ஜGக்கு மன்னிப்பு கேட்டு விளம்பரம் & பழனி சேவை-ஐகோர்ட் பீப் லட்டு எனக் கீழ்த்தரமாக சொன்னவருக்கு தண்டனை இல்லை

மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடுங்க.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க.. மோகன் ஜிக்கு ஐகோர்ட் உத்தரவு! By Vignesh Selvaraj Updated: Monday, September 30, 2024, 19:13 [IST] Subscribe to Oneindia Tamil 

https://tamil.oneindia.com/news/madurai/high-court-orders-mohan-g-to-say-apology-and-advice-to-service-palani-temple-642811.html

மதுரை: பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்த வலைதளத்தில் மன்னிப்பு கேட்கவும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடவும் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

 தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. அரசியல் தொடர்பாக அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். இயக்குநர் மோகன் ஜி, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது வழக்கம். அந்த வகையில் அண்மையில் பேசிய ஒரு விஷயத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார். 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, "நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக நான் செவி வழியாக கேள்விப்படிருக்கிறேன். இதுகுறித்த செய்தியே வெளியே வராமல், வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையே அழித்துவிட்டதாககூட நான் கேள்வி பட்டிருக்கிறேன்" எனக் கூறினார். 

அங்கே பணி புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் என்னிடத்தில் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்கள்" என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் தான் கடந்த 24 ஆம் தேதி திருச்சி போலீசார் இயக்குநர் மோகன் ஜி யை கைது செய்தனர். இந்து மக்களை புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இயக்குநர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. 

இதையடுத்து இயக்குநர் மோகன் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது பழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்வதை தவிர்ப்பதற்காக முன் ஜாமீன் கோரி இயக்குநர் மோகன் ஜி மனு தாக்கல் செய்தார்.

 மோகன் ஜி குண்டு வைத்தாரா? கொலை செய்தாரா? ஏன் இப்படி? பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்! Exclusive அந்த மனுவில், "இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான் ஒரு முருக பக்தன். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை. செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதையே பேசினேன். ஆகவே, பழனி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் மோகனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். பழனி பஞ்சாமிர்தம் குறித்து மோகன் ஜி கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். 

அதோடு, பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது. திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா தேர் - உயரத்தைக் குறைக்கணுமாம்

  நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்ட...