Tuesday, October 1, 2024

Scripted TV shows - விஜய் டிவி -நீயா நானா & ஜீ தமிழ் -தமிழா தமிழா 2 ஷோக்களிலும் சிதம்பரம் ஜோடி

ubramanyan Venkatram  நேற்று ஒளிபரப்பான நீயா நானா ( விஜய் டிவி) , தமிழா தமிழா ( ஜீ தமிழ்) இரண்டு ஷோக்களிலும் இந்த ஜோடி பங்கேற்றது. சிதம்பரத்தில் உள்ளவர்களாம்..


முதல் ஷோவில்  சண்டை போடும் மாமனார் மாமியார் என்ற தலைப்பிலும்,

இரண்டாவது ஷோவில் கிராமத்தில் வசிக்க விரும்பும் பெற்றோர்கள், அவர்களை நகரத்திற்கு நகர்த்த முயலும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் பேசினர்...

எத்தனை ஷோக்களில் வேண்டுமானாலும் பேசட்டும்..அதுவல்ல பிரச்சனை..ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரண்டு ஷோக்களிலும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்...

முன்னதில், அவர் சிதம்பரத்தில் இருப்பதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதாகவும் அந்த அம்மா தான் சென்னையில் பையனோட வீட்டில் ஐந்து வருடங்களாக இருப்பதாகவும் இதனால் இருவருக்கும் சண்டை வருவதாகவும் பேசுறாங்க..

இரண்டாவது ஷோவில், பத்து வருடங்களாக இருவரும் சென்னையில் இருப்பதாகவும் , சிதம்பரத்திற்கு வர துடியாய் துடிப்பதாகவும் அவரது செலவுகளுக்கு மகன் இருபதாயிரம் வரை பணம் கொடுப்பதாகவும் பேசுகின்றனர்.

இரண்டு ஷோக்களிலும்  மருமகள் வேற சாட்சி..

இப்படி ஸ்க்ரிப்ட் ஷோக்களால்  நல்லா நம்மளை ஏமாத்துறாங்க....

என்னத்த சொல்றது.....

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...