Saturday, October 5, 2024

டுபாக்கூர் நக்கீரன் -டுபாக்கூர் மகாவிஷ்ணுவின் மறுபக்கம்!

 நக்கீரன் -டுபாக்கூர் மகாவிஷ்ணுவின் மறுபக்கம்!

டுபாங மகாவிஷ்ணு ஒரு பக்கா போர்ஜரி,420 என்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர் ஒரு கொலையிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக் கால கட்டத்தில் கோவை பகுதிகளில் ஈமு கோழி வளர்ப்பு என்கிற டிரேடிங் மோசடி தலைவிரித்தாடியது. அப்பொழுது பிரபல மான பதஞ்சலி, ரெயின் ட்ரீ கம்பெனிகள் போன்ற புகழ்பெற்ற கம்பெனிகள் பெயரில் போலியாக மோசடி கம்பெனியை உரு வாக்கினான். அந்த டுபாக்கூர் கம்பெனியை நடத்தியவர்கள் ஜெயராம் ரமேஷ் மற்றும் இந்த மகாவிஷ்ணு. இயற்கைப் பொருட் களால் உருவான சோப்பு, பவுடர் போன்ற பொருள்களை விநியோகிக்கும் கம்பெனி தான் அது. இந்த கம்பெனியில் பணம் போட்டால் ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் பதினைந் தாயிரம் கொடுக்கப்படும் என விளம்பரம் செய்து ஆருத்ரா மோசடி பாணியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த கம்பெனி சிட்பண்டுகளையும் நடத் தியது. கம்பெனியின் உரிமையாளர் என அறியப் னபட்ட ஜெயராம் ரமேஷ் சென்னையில் ஒரு ஓட்டலில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். ஜெயராம் ரமேசுக்கு அடுத்த நிலையில் செயல்பட்ட மகாவிஷ்ணு மற்றும் கார்த்திக் ஆகியோர் போலீசில் பிடிபடவில்லை. அவர்கள் தலைமறைவாகினர். இரண்டு வருடம் நடைபெற்ற இந்த மோசடிக் கம்பெனியில் சுமார் 2000 கோடி பணம் திரட்டப்பட்டது. இந்த வழக்கில் சிக்காமல் இருக்க திருப்பூரை சேர்ந்த அருண் என்பவர் மூலம் அ.தி.மு.க.வுக்கு மிக நெருக்கமான ஈஷா யோக மையத்தில் புகுந்து அங்கேயே தங்கி ஜக்கி வாசுதேவின் சிஷ்யர்களில் ஒருவராக தன்னை காட்டிக்கொண்டு தப்பித்தான் மகாவிஷ்ணு. இந்த சோப்பு, பவுடர் பொருட்களை பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தும்போது சீனர்கள் போல தோற்றமளிக்கும் இரண்டு வெளி நாட்டினரைக் கூட்டிவந்து நட்சத்திர ஓட்டலில் வைத்து அறிமுகப் படுத்தினான் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் மாமா ஒருவர்தான் இந்த மோசடிக்கெல்லாம் மூளையாக இருந்தார். நன்றாக வாயாடக் கூடிய மகாவிஷ்ணு சொன்னதைக் கேட்டு ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தங்கள் சொத்துக்களை முதலீடு செய்தார்கள். ஜெயராம் ரமேஷ் இறந்துபோனதும் ஜக்கி வாசுதேவின் தயவால் மகாவிஷ்ணுவும், கார்த்தியும் தப்பித்தார்கள். அந்த கார்த்தி இன்றளவிலும் மகாவிஷ்ணுவின் உதவியாளராக சுற்றி வருகிறான். வழக்கிலிருந்து தப்பித்ததும் திருப்போரூருக்கு வந்து திருப்போரூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியனின் சிஷ்யர் ஆனான். வள்ளலாரின் நெறியைப் பின்பற்றும் சுப்பிரமணியனுக்கு பல சர்வதேச தொடர்புகள் உண்டு. அவரது தொடர்புகளை கையிலெடுத்த மகாவிஷ்ணு, சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னை சாமியாராகக் காட்டிக்கொண்டு அல்வாவாக ஆப்பிள் கொடுத்து மயக்க ஆரம்பித்தான். பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த நந்தகுமார் என்கிற ஆர்.எஸ்.எஸ். அனுதாபி மூலம் பள்ளிக் கல்வித் துறையில் சொற்பொழிவாளராக உள்ளே நுழைந்தான். காக்கர்லா உஷா, நந்தகுமார், இளம் பகவத் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழக அரசுக்கு மிக நெருக்கமான உதயசந்திரன் ஐ.ஏ. எஸ்.சுக்கு வேண்டப்பட்டவர்கள். பள்ளிகளில் பேசும் சில பேச்சாளர்கள் மாணவர்களை அழ வைக்கிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்தபோது அவர்களுக்குப் பதிலாக மகாவிஷ்ணுவை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரம் முடிவு செய்து விஷ்ணுவை பள்ளிகளில் களமிறக்கியது. ஜக்கி வாசுதேவ் மூலம் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்புகொண்ட மகாவிஷ்ணு, பொதுமக்கள் மத்தியில் பிரபலமாவதற்காக, சமூக வலைத்தளங் களையும் பள்ளி, கல்லூரி பேச்சுகளையும் பயன்படுத்தினான். ஜக்கி வாசுதேவின் யோகக் கலைகளில் ஒன்றான வலிகளைக் குணப் படுத்தும் முறையை நித்தி ஸ்டைலில் சிறப்பு வகுப்புகள் எடுத்தான். ஒரு வகுப்புக்கு பத்தாயிரம் ரூபாய் என வசூலில் கொட்டிய பணத்தோடு மோசடி கம்பெனியில் சம்பாதித்த பணத்தையும் சேர்த்து ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், இலங்கை போன்ற நாடுகளில் பெரிய தொழிலதிபராக வலம் வருகிறான் என்கிறார்கள் இவனை நன்கு தெரிந்தவர்கள். இவன் அடிக்கடி பைத்தியக்காரன் போல் வேஷம் போட்டு தெருக்களில் சுற்றி வருவானாம். அவன் போகும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உயர்ந்த தரத்தில் கேமராக்கள் மற்றும் லைட்டிங் செட்டப்புகளோடு சென்று அந்த நிகழ்ச்சிகளைப் படமெடுக்கச் செய்வான்.
“நடிகர் தாமு உரையாற்ற வேண்டிய சைதாப்பேட்டை, அசோக்நகர் பள்ளிகளின் வாய்ப்பு இவனுக்கு கிடைத்தது. அங்கு ஏடாகூடமாக இவன் வாயாடிப் பேச, அதை தமிழாசிரியர் சங்கர் எதிர்த்துக் கேள்வி கேட்க, அமெரிக்காவிலிருக்கும் முதல்வர் அதைப் பார்த்து தலைமைச் செயலாளர், கல்வி அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கோபமாகக் கடிந்து கொள்ளும் நிலையை அவன் உருவாக்கிவிட்டான் என்கிறார்கள் அரசுக்கு நெருக்கமானவர்கள்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...