Saturday, October 5, 2024

டுமீலர் கவிஞர்-மகுடேஸ்வர்ன் தமிழ் பற்று வெழுத்ததே

 Marirajan Rajan

ஆத்தீ..
கவிஞர் இவ்வளவு கோபக்காரர இருக்காப்ள..
சரியானத் தகவல் ஒன்றை பின்னூட்டமிட்டதால் எரிச்சலுற்று தூக்கிட்டாப்ள..
தமிழ் என்பதை முன்னொட்டாகக் கொண்ட பெயர்கள் பற்றிய அவரது பதிவு. பாண்டியனுக்கு மட்டுமே தமிழ்நாடன் என்ற முன்னொட்டு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இராஜராஜனுக்கு தண்டமிழ் நாடன் என்னும் பெயர் முன்னொட்டு இருந்ததைக் கல்வெட்டுச் செய்தியுடன் பின்னூட்டமிட்டேன். மேலும் காரைக்கால் அம்மையார் முதல் கோப்பெருஞ்சிங்கர் வரை தமிழ் என்னும் பெயர் முன்னொட்டாக இருப்பதை பின்னூட்டமிட்டேன். இது ஒரு குத்தம் என்று கவிஞர் பிளாக் செய்துட்டார்.
நான் கொடுத்த பின்னூட்டம் ..👇🏼
---------------------------
கி.பி.5 ஆம் நூற்றாண்டு. காரைக்கால் அம்மையார். மூத்தத் திருப்பதிகங்கள் பாடியவர். இவர் தான் பாடிய பாடல்களை செந்தமிழிலால் பாடினேன் என்று சொல்லி தன்னை செந்தமிழ் அம்மை என்று அடையாளப்படுத்துகிறார்.
கி.பி.7 ஆம் நூற்றாண்டு. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர். இவர் தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று கையொப்பமிடுகிறார்.
கி.பி.8 ஆம் நூற்றாண்டு.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரம்.
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்.
இவர் தன்னை தீந்தமிழால் காதுகழுவினேன் என்கிறார். மேலும் தன் பெயரை தமிழாபரணன் என்றும் அறிவிக்கிறார்.
தமிழ் மொழியை ஆபரணமாக அணிந்தாராம்.
( சின்னமனூர்ச் செப்பேடு )
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
தமிழுக்காக தன் உயிரை தானமாகக் கொடுத்த பல்லவன் நந்திவர்மன்.
( நந்திக்கலம்பகம்)
கி.பி.10 ஆம் நூற்றாண்டு. சோழப் பெருவேந்தர் இராஜராஜச் சோழர்.
தன் பெயரை
தண்டமிழ் நாடன் என்று சொல்கிறார்.
( திருக்கோவிலூர் கல்வெட்டு)
கி.பி.12 ஆம் நூற்றாண்டு. இரண்டாம் இராஜராஜர். தன்னை முத்தமிழ் தலைவன் என்கிறார்.
கி.பி.1251.
முதலாம் சடைவர்மன் சுந்தர பாண்டியன். தன்னை செழுந்தமிழ் தென்னவன் என்கிறார்.
( சிதம்பரம் கல்வெட்டு)
கி.பி.13.
காடவ குல வேந்தர்.
கோப்பெருஞ்சிங்கர்.
தன்னை தமிழ்நாடு காத்த பெருமான் என்கிறார். மேலும் பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன் என்றும் கல்வெட்டில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறாக..
தமிழ் மொழியை தன் பெயருடன் கொண்ட வரலாறு தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது..
----------------------------------------
இந்தப் பின்னூட்டத்தில் என்ன தவறு என்றோ, இந்தப் பின்னூட்டத்தால் கவிஞருக்கு என்ன பிரச்சனை என்றோ தெரியவில்லை.
பாகூரிக்குண்டு, பழமுரித்தண்டு என்ற அவரது தமிழ்படுத்தல் பதிவில்
நாம் செல்வதே இல்லை.
வரலாற்றுப் பதிவு என்பதாலேயே ஆர்வக்கோளாரில் எட்டிப்பார்த்து கருத்து சொல்வதுண்டு.
மாற்றுக்கருத்து கூறினால் பிளாக்தான் என்பது பெரியதலைகளின் வழக்கம்போலும்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0FSRXUzFmWrnQhqC2VcmSsNYXJbRxF3aCiqZ2D8phrFzAAinsydae8L9W3mv6917jl&id=100007187348472&__cft__[0]=AZV9J1cwEwjcFjzNaK1ctR8ieCYxfTypa5wUOcdzbglmPdkeImJp33dHE1zuCgA-vOhk8DRCu41IwRSwpuJ0-aLRtZV2ZwxzrbcYfGhDoyNF1KlIanOorkrQSWJqhOShzFWjFJiCb8gysQQUNxe7TuT8BeCzcWzzgX8sXzNJiwdlNg&__tn__=%2CO%2CP-R

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...