Thursday, October 3, 2024

சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது: விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது: விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு ADDED : அக் 04, 2024 12:01 AM





புதுடில்லி: தமிழகம் உட்பட 11 மாநில சிறைகளில் கைதிகளுக்கு, ஜாதி அடிப்படையில் பணிகளும், அறைகளும் ஒதுக்கப்படுவதை கண்டித்த உச்ச நீதிமன்றம், அதை ஊக்குவிக்கும் சிறை கையேட்டை மூன்று மாதங்களுக்குள் திருத்தும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. 

மஹாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர், சிறைகளில் ஜாதி அடிப்படையில் கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன் விபரம்:

சில மாநிலங்களின் சிறைகளில், குறிப்பிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும், தொடர் குற்றப் பின்னணி உடைய நபர்களுக்கும் சிறைப்பணி ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது.

குறிப்பாக தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சிறைக் கையேடுகள், கைதிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மேலும் சிறைக் கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, சிறைக் கையேடுகளில் இடம்பெற்றுள்ள தவறான விதிகளை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் 11 மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.


No comments:

Post a Comment

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...