Monday, September 14, 2015

சனல் இடமருகு- ஏசு சிலையில் சாக்கடை நீர், நிருபித்தவர், சர்ச்சிற்கு பயந்து பின்லாந்தில் வாழ்கிறார்.

கேரளாவில் தோமாவால் மாற்றப்பட்ட எனச் சொல்லிக்கொள்ளும் வமசத்தில் பிறந்தவர் சனல் இடமருகு, இவர் குடும்பத்தில் பலர் பாதிரிகள். இவர் ஏசு என ஒருவர் வாழவில்லை என்பவர், மதர் தெரசாவின் பொய்மையைக் கிழித்தவர்.
    
CHRISTIANS PREPARE FOR POPE'S VISIT
 VISITImage result for church of our lady of velankanni mumbai


A statue of Christ in Mumbai. Local people declared a miracle when 'tears' trickled down the statue at the Church of Our Lady of Velan Kanni. Photograph: Sherwin Crasto/Associated Press
2012 மார்ச் மாதத்தில், மும்பையில் உள்ள அன்னை வேளாங்கன்னி  தேவாலயத்தில் உள்ள, சிலுவையில்   தொங்கும் ஏசுவின் சிலை பாதங்களில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது என்ற செய்தி நாடெங்கும் தீயாய்ப் பரவியது. சனல் இடமருகு, மும்பை சென்ற அந்தச் சிலுவையைப் பரிசோதித்தார். சிலுவையுடன் இணைக்கப் பட்டிருந்த சாக்கடை தண்ணீர்க் குழாயில் இருந்து நீர்க்கசிவு மூலம், ஏசுவின் பாதங்களில் இருந்து நீர் சொட்டுகிறது என்று உண்மையைக் கண்டறிந்து, தெய்வீக நீர் எனும் கிறிஸ்துவ மோசடியை அம்பலப்படுத்தினார்.

இடமருகு மீது மும்பையின் எல்லாக் காவல் நிலையங்களிலும் மதநிந்தனை (blasphemy) செய்ததாகக் கூறிப் பாதிரியார்கள் புகார் அளித்தனர். அவரைக் கைது
செய்து சிறையில் அடைக்கக் கோரினர். ஆட்சியாளர்களுக்குப் பெரும் நிர்ப்பந்தம் அளித்தனர்.  கிறித்துவம் பெரும் செல்வாக்குடன் இருக்கும் மாநிலங்களில்
கேரளமும் ஒன்று. இங்கு பாதிரியார்களின் அதிகாரம் வரம்பற்றது.   தமது சொந்த மாநிலத்தில், உயிர் வேட்டையாடும் கிறித்துவ மத வெறியர்களின் நடுவில் வாழ முடியாத சூழலில், சனல் இடமருகு பின்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து, அங்கு வாழ்ந்து வருகிறார்.

ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதே பயித்தறிவு என்போர் - மதச்சார்பின்மைக் காவலர்களும் பயித்தறிவுப் போராளிகளும்  இடமருகுவுக்கு ஆதரவாக  குரல் கொடுக்கவில்லை. 

http://www.theguardian.com/world/2012/nov/23/india-blasphemy-jesus-tears

No comments:

Post a Comment