Monday, October 26, 2020

திருமா- தமிழ் முஸ்லிம் பகுத்தறிவாளர் கோரிக்கை- ஷரியாத், குரான் தடை கோரிக்கை- துணை நிற்பாரா

 ( குரானும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற நூற்களும் )

உங்க மத நூலில்.ஒன்றான மனு ஸ்மிருதி யை நீங்கள் எரிக்க நாங்கள் ஆதரவு தருகிறோம் களத்திலும் வந்து நிற்கிறோம் சாதி,மத மறுப்பாளர்கள், எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில் அதேப்போல் நாங்கள் குரான் ஹதீஸ் நூற்களை எரிக்கும்போது அல்லது அவ்வற்றை அரசுதடை செய்யவேண்டும் என வலியுறுத்தும்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதை இங்கே வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறோம் .நீங்கள் மனூவை நினைவு கூறும் அளவிற்கு பார்ப்பனர்கள் நினைவு கொள்ளவில்லை .பார்பணர்களே மனு ஸ்மிருதி யை மறந்துவிட்டார்கள், பாப்பாத்திகள் மாற்று சமூக ஆண்களை மணந்து கலப்பினத்திற்கு வழி கொடுத்து விட்டார்கள் ஆனால் “தங்களுக்கு ஆதரவான நூலை பார்பணர்கள் எப்படி மறப்பார்கள்? ஏன் மறந்தார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது இன்றைய பார்பண இளையோர்களில் எத்துனை பேருக்கு மனுஸ்மிருதி பற்றி தெரியும்? ஆனால் குரானும் ஹதீஸும் அப்படி அல்ல இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது .பார்ப்பனர்களே மறந்துப்போன,கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்காத மனூவை நீங்கள் எரிக்கனும் என்று ஆதங்கப்படுவதின் காரணம்? மனு பார்பணர்கள் அல்லாத மக்களை கேவலப்படுத்துகிறது ,வர்ண பேதத்தை கட்டமைக்கிறது அந்த வர்ணபேதமே சாதிய கட்டமைப்பை வளர்த்தெடுக்கிறது என்ற காரணம் தானே (கூடுதலா கருத மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. என்பதையும் இத்துடன் இணைக்கலாம்)அதையேத்தான் குரானும் செய்கிறது இது உங்களுக்கும் தெரியும் அதனால்தான் முஸ்லிம்கள் பல முறை உங்களை மத மாற்ற முயற்சிகளை பிரியாணி அண்டாவாக கிண்டியும் அவர்களின் "பாட்சா" உங்களிடம் பலிக்கவில்லை எதோ நோன்பு கஞ்சி குடிச்சோமா பெருநாள் வாழ்த்து சொன்னோமா என்று சென்று கொண்டிருக்கும் உங்களை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் முஹம்மது(நபி)வே மீண்டும் வந்து சொன்னாலும் இஸ்லாத்திற்கு செல்லமாட்டீர்கள் என்று அதனால்தான் உங்களிடம் ஆதரவு கேட்கிறோம் ...சரி மனுவிற்கும் முஹம்மதின் குரான் ஹதீஸிற்கும் இருக்கும் பொருத்தத்தை காண்போம் ...
வருணாசிரமம் மனிதனை நான்காகப்பிரிக்கிறது. அதாவது
பிராமணன் - துறவி
சத்திரியன் - அரசாள்வோன்
வைசியன் - வணிகன்
சூத்திரன் - சேவையாளன் மனுவின் அடிப்படையில் கீதை இப்படி கூறுகிறது
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை
இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,
நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். என்கிறது கீதை
இதையே முஹம்மதின் இஸ்லாம் சற்று மாற்றி இப்படி கூறுகிறது
"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளும் பொருட்டு உங்களைஇன சமூகங்களாகவும்,சாதிய கோத்திரங்களாகவும் பிரித்தோம் . உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13) இவ்வசனம் படைப்பின் ஒரு பார்ட்டை பேசுகிறது.மனுவையும் குரான் ஹதீஸ் மதஹப் நூற்களையும் அளவிட்டால் இவைகள் முழுமையான பார்ப்பனியத்தை தான் போதிக்கிறது .
இவை இரண்டுக்கும் வேறு ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா நிச்சயம் முடியாது எல்லோரும் முஸ்லிமாக இருக்க முடியும் ஆனால் எல்லோரும் முஹம்மதாக ஆக முடியாது எல்லோரும் கலிஃபா அபுபக்கராகவோ உமராகவோ ஆக முடியாது .
பார்பனியத்தின் நான்கு வர்ணம் போலவே முஹம்மதின் இஸ்லாமும் ஆதத்தின் மகன்களை நான்காக பிரிக்கிறது
1)மூஃமீன்
8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் "முஃமின்" களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்./
உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்” எனும் திருக்குர்ஆனின் வசனத்தை நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.
ஸஹீஹ் புகாரி 63:3926, 2:29:1889, ஸஹீஹ் முஸ்லிம் 15:2667, திருக்குர்ஆன் 8:2
/அதாவது மூமின் என்றால் பார்ப்பான் என்று அர்த்தபடுத்தலாம்
அடுத்தது முஸ்லிம்
2) முஸ்லிம்
"நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ (மூமின் )என கிராமப்புற அரபிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், ‘நாம் கட்டுப்பட்டோம்’ (முஸ்லிம்)என்று கூறுங்கள் என (நபியே!) நீர் கூறுவீராக! உங்களது உள்ளங்களில் ஈமான் இன்னும் நுழையவில்லை. மேலும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதனையும் உங்களுக்கு அவன் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.’ (49:14)
ஸோ ...மூமின் வேறு முஸ்லிம் வேறு குரானின் அத்தியாயங்களின் பெயர்களில் கூட முஃமினூன் (23) மூமீன்(40)என்று தான் இருக்கிறது முஸ்லிம் என்று இல்லை மாடு, சோற்று தட்டு என்றெல்லாம் தலைப்பு வைத்தவர்கள் முஸ்லிம் என்ற தலைப்பை ஏன் வைக்கவில்லை முனாஃபிகூன் (63)இருக்கு காஃபீரூன் (109)என்ற தலைப்புக்கூட குரானில் உண்டு ஆனால் முஸ்லிம் என்ற தலைப்பே குரானில் இல்லை .
அடுத்து
"மக்களில் சிலர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈமான் கொண்ட முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 5:55)
இஸ்லாம் மனிதனை நான்கு வகை படுத்துகிறது 1)மூஃமீன்
2)முஸ்லிம்
3)முஷ்ரீக்
4)காஃபீர்
இதில் கலந்த இன்னொருவகை முனாஃபிக் இதில் முதல் இரண்டு வகை மூஃமீன் முஸ்லிம் ஏற்புடையது அடுத்த முஷ்ரீக் மனம் மாறி மதம் மாறிக்கொள்ளலாம் வாய்ப்பு உண்டு மாறாத காஃபிருக்கும் முனாஃபிக்கிற்கும் மரணம் தான் எப்படி பிரம்மாவிலிருந்து நான்கு பேதம் வருகிறதோ அதேப்போல் இங்கும் ஆதத்திலிருந்து நான்கு பேதம் துவங்குகிறது இவை வர்ணம் போல்தொழில் பதவி அதிகாரம் கல்வி சார்ந்த பிரிவுகள் அல்ல கட்டுப்படுதல் எதிர்த்து நிற்பது மறுத்து வழிபடுவது என்பதற்குள் அடங்கிவிடும் .


முஹம்மதின் இஸ்லாம் போலவே மனுவும் கடவுள் கொள்கையை பேசுகிறான் இல்லை ...இல்லை... மனு போலவே இஸ்லாமும் கடவுள்கொள்கையை பேசுகிறது மனுவிற்கும் இஸ்லாத்திற்கும் கால இடைவெளி மிகவும் அதிகம் முஹம்மதின் இஸ்லாம் எல்லா மதங்களுக்கும் பின்பு வந்தது அதனால் அதில் பல மத கருத்துக்கள் மலிந்து காணப்படுகிறது சுருக்கமாக சொல்வதென்றால் பற்பல நூற்களை காப்பி செய்து முஹம்மதுவும் அவரின் குழுவினரும் இஸ்லாத்தை சமைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
விஷயத்திற்கு வருகிறேன் .
கடவுள் கொள்கை பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது முதல் அத்தியாயம் 10 வது ஸ்லோகம்
“ ஜலமானது நரன் (கேடில்லாதவன்) என்கிற பெயரையுடைய பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்த பரமாத்மாவுக்கு “நாராயண “னென்று பெயர்.
கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர், தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுகிறான் . ( 1- 8 முதல் 10 வரை).
அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அர்ஷு தண்ணீரின் மேல் இருந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அல்ஆஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5160)
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418.
மனுவும் குரானும் கடவுள் ரீதியான ஒரே கருத்தையே கொண்டிருக்கிறது அல்லது மனுவின் கருத்தை முஹம்மதும் ஏற்றுக்கொள்கிறார்.
அடுத்த அதிரடி


"மனைவி, மகன், அடிமை, சீடன், உடன் பிறந்த தம்பி ஆகிய இவர்கள் தவறு செய்தால் கயிறு அல்லது பிரம்பின் மூலம் அடிக்கலாம். (மனுஸ்மிருதி - 8:299) இதை நாம் விமர்சிக்கிறோம் ஆனால் முஹம்மது இதைவிட ஒரு படி மேலே போய்விட்டார்.
"பிணக்கு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்(பெண்)களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!
குர்ஆன் 4:34
இப்படி பெண்களை அடிக்கலாம் என்பதை திருமா அவர்கள் ஏற்கிறார்களா? இதைவிட மோசமானது அடுத்த வசனம்
"உங்கள் பெண்கள் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்,குர்ஆன்2:223
பெண்களை முஹம்மதின் கடவுள் விளைநிலம் என்கிறான் எப்படி வேண்டுமாலும் உழுதுக்கொள் என்கிறான் திருமா அவர்கள் இதை முழுமையாக ஏற்கிறாரா? மனு இன்று எந்த பார்ப்பானின் வீட்டிற்குள்ளும் நடைமுறையில் இல்லை ஆனால் குரான் நடைமுறையில் இருக்கிறது என்பதை திருமா. அவர்கள் மறந்துவிட வேண்டாம் .
(பெண்களே)நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டு திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33)
பெண்கள் அடங்கி வீட்டிலேயே இருக்க வேண்டுமாம் மனுவிற்கும் குரானுக்கும் எதாவது வித்தியாசம் தெரிகிறதா உங்களுக்கு?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330.
இதில் முஹம்மது ஒட்டு மொத்த பெண்களையும் சாடுகிறார் அதாவது அனைத்து பெண்களும் கணவரை ஏமாற்றும் பெண்கள்தானாம் .
"அவர்கள் எத்தகையோரென்றால் தமது கலவி உறுப்புகளைபாதுகாத்துக் கொள்வார்கள், தமது துணைவியரிடமோ அல்லது தமது அடிமை கொண்டவர்களிடமோ தவிர; நிச்சயமாக‌ அவர்கள் தண்டிக்கப்படுபவர்களல்லர்.”(முஃமினூன்:5-6)
அதாவது ஒரு முஸ்லிம் ஆண் தன் அடிமை பெண்னுடன் புணரலாம் என்பதைதான் இப்படி குரான் சொல்கிறது இன்று காஃபீர்களால் அடிமை முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது இல்லாவிட்டால் ?
.. .. .. பிரிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட "எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை;"
மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவும் பொருளும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். "இருவரும் சமமாவாரா? ".. .. .. குரான் 16:75
...மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியவையாகும். "அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும். '(புஹாரி: 2203சுருக்கம்)
அடிமையின் மகனும் அடிமையே என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
"ஸம் ஆ என்பவருடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த மகன் எனக்குப் பிறந்தவன் எனவே நீ அவனைக் கைப்பற்றிக் கொள் என்று உத்பா என்பவர் தன்னுடைய மரண வேளையில் சகோதரனிடம் கூறுகிறார். அந்த சகோதரரும் அவ்வாறே கைப்பற்றிக் கொள்ள அவருக்கும் ஸம் ஆவுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த வழக்கு முகம்மதிடம் வருகிறது. முகம்மது அளிக்கும் தீர்ப்பு என்ன? உத்பா என்பவர் வேறொருவனின் அடிமையுடன் உடலுறவு கொண்டதால் அது விபச்சாரம் என்றும் யாருடைய ஆளுமைக்கு கீழே அந்த அடிமைப் பெண் இருக்கிறாளோ அந்த ஆண்டைக்கே மகன் அடிமைப்பட்டவன் என்றும் தீர்ப்பளிக்கிறார். இந்த ஹதீஸ் புஹாரி 2053 ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விபச்சாரத்திற்கான தண்டனை அளிக்கப்படவில்லை. அடிமைக்கு குழந்தை பிறந்ததால் அவள் விடுவிக்கப்படவும் இல்லை. மாறாக, அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்பது உறுதி செய்யப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (கலவி)உறவு கொள்வீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 5204 கவனிக்க அடிமையை அடிப்பது போன்று.....
"உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
மேலே மனுவுக்கு நிகராக குரான் வசனங்களும் ஹதீஸ்களும் இருப்பதை ஆதாரப்படுத்தி காட்டியிருக்கிறேன் அண்ணன் திருமா அவர்களே மக்களிடம் நடைமுறையில் இல்லாத வழக்கொழிந்து போன மனூவை ஒழிக்க நீங்கள் முயற்சிகள் செய்து வெற்றிப்பெற்று விட்டீர்கள் .மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் பார்ப்பனர்கள் உங்களை பார்த்து பம்முகிறார்கள் .


நாங்கள் நடைமுறையில் இருந்து சமூகத்தை பதம்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அரேபிய கொடுவாளுக்கு எதிராக கருத்துப்போராட்டம் நடத்தி வருகிறோம் ஆதரிப்பீர்களா? எங்களை திருமா அவர்களே
"ஆண்கள் மேலுள்ள ஆசையினாலும், சலனப்புத்தியினாலும், இயல்பாகவே இதயமில்லாதவர்களாக இருப்பதனாலும், பெண்களை அவர்களின் கணவன்மார்கள் எவ்வளவுதான் பாதுகாப்புடன் காத்து வந்தாலும் துரோகமே இழைப்பார்கள். (மனுஸ்மிருதி - 9:15)
என்கிறது மனு
எங்க முஹம்மது மட்டும் என்ன தக்காளி தொக்கா ? ஒரு நஜீஸ் காஃபீர் மனுவே இப்படியெல்லாம் யோசித்து சொல்லியிருக்கும்போது ஹலால் பிராண்ட் உள்ள முஹம்மதால் சொல்ல முடியாதா ?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள்" விபச்சாரியாவாள். "
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036) ஆனால் முஹம்மது பிறர் நுகர்வதற்காக பூசலாம் முஸ்லிம் ஆண்கள் பூசலாம் அதை பெண்களும் நுகரலாம் .
அண்ணன் திருமா அவர்களே வாசனை திரவியங்கள் பூசி பெண்களை முஹம்மது விபச்சாரி என்கிறார் இதில் அவர் சாதி மதம்.பார்த்து கூறவில்லை முஸ்லிம் பெண்களுக்காக கூற வில்லை ஒட்டு மொத்தமாக வாசனை திரவியம் பூசும் அனைத்து பெண்களுக்கும் விபச்சாரி பட்டங்களை வாரி வழங்குகிறார் என்பதை நீங்க கவனிப்பீர்கள் என்று கருதுகிறேன் .
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள். உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (4300)
முஹம்மதின் வியற்வை வாசனை திரவியமாம் அதை எடுத்தது ஒரு பெண் ஆனால் அதை அவள் பூசிக்கொண்டால் அவள் விபச்சாரி என்ன நகைசுவையா இருக்கே என்று கடந்து விடாதீர்கள்.அத்துணையும் பெண்கள் மீது வீசப்பட்ட விஷம் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (675)
இரவும், பகலும் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தங்கள் கண்காணிப்பிலேயே ஆண்கள் வைத்திருக்கவேண்டும். அவர்கள் புலன் இன்பங்களில் தோய்ந்தவர்கள் ஆதலால், ஒருவர் கண்காணிப்பின் கீழ்தான் அவர்கள் இருக்க வேண்டும். (மனுஸ்மிருதி - 9:2)
ஒரு பெண் ஆண் துணை கண்டிப்பாக இருக்கவேண்டும்.என்றார் மனு
அதை கொளுத்த வேண்டும்.என்றார் திருமா மனு கூஉருவாக்கிதைதான் இஸ்லாமும் கூறுகிறது பயன் பாட்டில் இல்லாத மனுவை கொளுத்துவது அறிவுடமை என்றால் பயனீட்டிலிருக்கும் குரான் ஹதீஸ் நூற்களை எரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?
"உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.”
(புகாரி, முஸ்லிம்)
"அன்சாரி குலத்தை சேர்ந்த உம்மு ஹராம் என்ற நபி தோழியரின் வீட்டுக்கு ஒரு நாள் நபி ஸல் அவர்கள் சென்று அவர்கள். அந்த நபி தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித் தோழியர் நபி ஸல் அவர்களுக்கு தலையில் பேன் பார்ப்பார்கள், உணவளிப்பார்கள் “நபி ஸல் உம்மு ஹராம் ரலி அவர்களின் மடியில் உறங்குவதாகவும் குறிப்புகள் உண்டு மேலும் உம்மு ஹராம் தனி பெண்ணோ விதவையோ அல்ல . அவள் உபாதத் இப்னு சாமித்தின் மனிவிதான் உம்மு ஹராம் .
புஹாரி செய்தியாகும் (2895 2789 ....)
மனுவையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டால் முஹம்மதின் இஸ்லாம் மனுவைவிட கேவலமானதாகும்.
பெண்களை இழிவுபடுத்திய (!?)அதே மனுதான் இப்படியும் கூறுகிறான்
"பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரியதாய், சிறியதாய் இவர்களிடத்தில் தன் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும். ஆனால் தாய் இவர்களைவிட உயர்ந்தவள்" மனுஸ்ம்ருதி (2-138)
"தனது வருணத்தில் திருமணம் செய்துகொண்ட அண்ணன் மனைவி மன்னி / அண்ணியை நாள்தோறும் வணங்கவேண்டும் மனு ஸ்மிருதி 2-132 )
என்கிறான் மனு ஆனால் முஹம்மதோ ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ”அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் "மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232
காமத்திற்கு பாசத்திற்கும் வித்தியாசப்படுத்தி காட்டுவதே மனிதன் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் உறவு முறை அரண் தான் முஹம்மது அதையே நிராகரிக்கிறார்.
ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225 மனுவால் நூறு பணம் மட்டுமே அபராதம் விதிக்க முடிந்தது ஆனால் நம்ம அரேபிய அல்லாஹ்வின் தூதரோ
"ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.(குரான் 24:4) என்கிறார் 😀 நாலு சாட்சி வெச்சுண்டா வன்புணர்ச்சியோ விபச்சாரமோ செய்வானா/ளா? ...1400 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது 4 சாட்சி வழக்கு வரவே இல்லை .
"கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
பாடம் : 20 ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது.
Book : 16
புரிகிறதா ஏன் குரான் ஹதீஸ்கள் எரிக்கப்படவேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறோம் என்று ?குரான் ஹதீஸ்களுக்கே இந்த நிலை என்றால் அடுத்த கட்டத்தில் இருக்கும் மதஹப் நூற்களை நோண்டினால் ?? இங்கு கூட பெண்கள் பற்றிய பிரச்சனைகளில் ஒன்றிரண்டு மட்டுமே சுட்டிக்காட்டியிருக்கிறேன் இவை அல்லாத பல தீண்டாமைகள் கொடுஞ்சட்டங்கள் இருக்கிறது.
நீங்கள் கூறலாம் அதே குரான் ஹதீஸ்களில் நல்ல கருத்துக்களும் இருக்கிறெதே என்று ..
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;(49:11)
ஒருவர் மற்றவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்-இறைமறுப்பாளன்'' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி.) இப்படியெல்லாம் இருக்கும் நூற்களை எரிப்பது என்பதை எப்படி ஏற்க முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் அதே கருத்தை மனுவிலும் கேட்க முடியும் ஒரு துளி விஷம் ஒரு குட பாலில் கலந்தாலும் அது விஷம் தான் பாழாகிபோனது பாலாக மாறாது இது மறந்து போன மனுவுக்கும் மட்டுமல்ல வழக்கில் இருக்கும் குரான் ஹதீஸ்களுக்கும் பொருந்தும் மனுவிலும் நல்ல கருத்துக்கள் இப்படி இருக்கிறது .
"ஒருவன் துன்பத்தினை அடைந்திருந்தாலும் அந்நியனை பார்த்து துன்பம் வரும்படி பேசக்கூடாது. செய்கையாலும் மனதாலும் ஒருவனுக்கும் துரோகம் செய்யக்கூடாது. கொடுமையான அமங்கலமான வார்த்தைகளை சொன்னால் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை அடையமாட்டான். (மனுஸ்ம்ருதி 2-161)
" பிராமணன் தனக்கு அயலான் செய்கின்ற மரியாதையை விஷத்தினை போல நினைத்து அஞ்சவேண்டும். அவமானத்தினை அம்ருதம் போல் விரும்பவேண்டும். (மனு ஸ்ம்ருதி 2-162)
மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இல்லை, மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே சமத்துவமின்மை உள்ள வர்ணாசிரம கருத்துக்கள் இல்லை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவை,சமத்துவத்திற்கு, பாமர மக்களுக்கு எதிரானவை, மனித நேயத்திற்கு எதிரானவை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே எதிர்க்கப் பட வேண்டியவை.
எப்படி சனாதன தர்மத்தை நூற்களை ஏற்க முடியாதோ அப்படியே இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டுதல் நூற்களையும் ஏற்க முடியாது.
50 வருடங்களுக்கு முன் இருந்த சட்டங்கள் சில இன்று பொருத்தமில்லை என்று நீக்குகிறோம். ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த மனு ஸ்மிருதியின் ஸ்லோகங்கள் சொல்லும் சட்டங்கள் எப்படி இன்று பொருந்தும்/என கூறும் சனாதன வாதிகளைபோன்றே முஸ்லிம் மௌலவிகளும் குரானின் சட்டம் யுக முடிவுவரை பொருந்தும் என பொருமிக்கொண்டு இருக்கிறார்கள் இஸ்லாம் பற்றி எழுத இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளது பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன் அண்ணா உங்களின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் Exமுஸ்லிம்களின் சார்பாக
சாதிக் சமத்

No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...