Wednesday, October 28, 2020

மனு ஸ்ம்ருதி: திருமாவளவனின் பொய்களும் உண்மைகளும்

 மனு ஸ்ம்ருதி: திருமாவளவனின் பொய்களும் உண்மைகளும் Ananda the vAnara

மனு ஸ்மிருதிக்கு எதிராகத் திருமாவளவன் நடத்திய போராட்ட வீடியோ: https://www.facebook.com/1719083471684346/videos/346090326669790

அந்த வீடியோவில் 25ம் நிமிடத்தில் இருந்து மனு ஸ்ம்ருதியில் உள்ள விஷயங்களை திருமாவளவன் மேற்கோள் காட்ட ஆரம்பிக்கிறார். ஆரம்பிக்கும்போதே பிராமணர்களுக்கு இயல்பிலேயே புத்திசாலித்தனம் கிடையாது என்று சொல்லி கேஸ்ட்டிஸ வெறியை கொட்டுகிறார். அதாவது, ஜீன் அடிப்படையில் பிராமணர்களுக்கு புத்திசாலித்தனம் சாத்தியமே இல்லை என்பதே அவர் சொல்வது. அவர்கள் வெறும் படிப்பாளிகள்தான் என்கிறார்.

வரிசையாக அவர் சொல்லும் பொய்களும், உண்மைகளும்:

பொய் 1. பெண்கள் மேல் பெற்றோரும், குடும்பத்தாரும் வைக்கும் கட்டுப்பாடுகளுக்குக் காரணம் பிற சாதியினரோடு பெண்கள் பழகி, உடல் உறவு கொண்டு, ஜீன் கலப்பு ஏற்படுவதை தடுக்கவே. இனக் கலப்பு/மதக் கலப்பு/சாதிக் கலப்பு ஏற்படக் கூடாது என்கிற இந்த நிலைப்பாடு மனு ஸ்ம்ருதியால்தான் மக்களுக்கு வருகிறது.

உண்மை: இது ஏன் பொய் என்பதை மனு ஸ்ம்ருதி மூலமே பார்ப்போம். அதிலும், திருமாவளவன் மேற்கோள் காட்டும் பகுதிகளில் இருந்தே பார்ப்போம்.

பொய் 2. மனு ஸ்ம்ருதி 9ம் சேப்டர்.

திருமாவளவன் சொல்வது: பெண்கள் மனதுக்கு இனியவற்றை பார்க்கவோ, கேட்கவோ, பயன்படுத்தவோ கூடாது என மனு சொல்கிறார். அதற்குக் காரணம் பெண்கள் பிற சாதி ஆண்கள் மேல் காதல் வயப்பட்டு விடுவார்கள்.

உண்மை: 13, 14, 15, 17, ஸ்லோகங்களையும் இந்த வீடியோவில் திருமாவளவன் கூட்டத்திற்கு வாசித்து காட்டுகிறார்.

அங்கனம் தனித்தனியாக வாசித்து பொருள் புரிந்து கொள்வது சரியான முறை அல்ல. ஒவ்வொரு ஸ்லோகமும் மற்ற ஸ்லோகங்களுடன் கொண்டுள்ள உறவினை புரிந்து கொண்டு விளக்குவதே சரியான முறை.

[இதில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகம் குறித்தும், அவற்றின் தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுத நேரம் இன்மையால் இங்கே இந்த 9ம் அத்யாயம் சொல்வது என்ன என்பதை சுருக்கமாகத் தருகிறேன்.]

9ம் அத்யாயமானது சமூகத்தை பரிபாலிக்கும் அரசனின் கடமைகள் குறித்தது. இதில் திருமாவளவன் வாசித்த முதல்ப் பகுதி கணவன் – மனைவி இருவருக்குமானது.

அதாவது, மனைவிக்கு மட்டுமோ அல்லது கணவனுக்கு மட்டுமோ சொல்லப்பட்ட தனித்த அடிமைப் படுத்தும் விதிகள் அல்ல இவை.

இவை சொல்பவை என்ன ?

1. பெண்கள் பொருளாதார விஷயங்களை விரும்புபவர்கள் (ஸ்லோகம் 17). அந்த விஷயங்கள் கிடைக்காவிட்டால் கோபமும், பொறாமையும், பேராசையும், பிடிக்காத வகையில் நடந்து கொள்வதுமாக இருப்பார்கள் (ஸ்லோகம் 17). இந்த கோப தாபங்களால்,  நல்லவன் போல நடிப்பவர்களை நம்பி அவர்கள் ஏமாந்தால் அவர்களுடைய பெற்ற வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் கெட்ட பெயர் கிடைக்கும் (ஸ்லோகம் 5). அதனால் தீய விருப்பங்கள் குறித்து “பெண்கள்” மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறு விஷயம்தானே என்று ஒதுக்கினால்கூட, தீய விருப்பம் உடையவர்களால், தீய விருப்பங்களால் பெண்களுக்கு தீமை நடந்துவிடும் (ஸ்லோகம் 5).

2. எனவே, தீய எண்ணங்கள் கொண்டவர்களிடம் இருந்து “பெண்களே” எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமாவளவன் சொல்வது போல, ஆண்கள் அச்சம் கொண்டு பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்று இங்கு சொல்லப்படவில்லை. பெண்கள் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மனு. இங்கனம் தன்னை தானே பெண்கள் பாதுகாக்க வேண்டும் என்பதையும், அங்கனம் பாதுகாத்துக் கொள்ள ஆண்கள் உதவ வேண்டும் என்பதையுமே மனு வலியுறுத்துகிறார்.

3. பெண்களின் பெண்மைக்கு களங்கம் கற்பிக்கும் சூழல் ஏற்படாத வண்ணம் காக்க வேண்டியது ஆண்களின் கடமை (ஸ்லோகம் 2). உலக இன்பங்கள் மேல் பெண்களுக்கு நாட்டம் ஏற்படுமாயின் அந்த நாட்டத்தையும் “பெண்களே” தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் (ஸ்லோகம் 2).

4. பெண்களை இழிவிற்கு கொண்டு போய்விடும் சூழல்கள் ஆறு. அவை: 1. மது அருந்துதல் போன்ற போதை தரும் வழக்கங்கள், 2. தீய நடத்தை கொண்ட கெட்டவர்களுடன் சகவாசம், 3. கணவனை விட்டு தனியாகப் பிரிந்து வாழ்தல், 4. யாரிடம் என்ன பேசுகிறோம் என்கிற விவேகம் இன்றி, அந்தப் பேச்சுக்களை பயன்படுத்தி தனக்கு தீமை செய்பவர்களிடம் போய் எல்லாவற்றையும் உளறிக் கொட்டுவது, 5. இடம் பொருள் காலம் கவனிக்காமல் தன்னை மறந்து தூங்கிப் போய் தீயவர்களின் நோக்கத்திற்கு அறியாமல் பலியாவது, 6. வேறு ஒரு ஆணின் வீட்டில் வாழ்வது (ஸ்லோகம் 13).

இந்த ஸ்லோகத்தைத்தான் திருமாவளவன் திரித்து பெண்கள் இவற்றை செய்ய விரும்புபவர்கள் என்று பெண் இனத்தையே இழிவாக்குகிறார். மனு ஸ்ம்ருதியோ, பெண்கள் விரும்பாவிட்டாலும் இந்தச் சூழல்களால் அவர்களுக்கு தீமை நடந்துவிடும் என்கிறார்.

இதற்கு உரை எழுதும் மேதாதிதி (Medhatithi) மிகத் தெளிவாகச் சொல்கிறார். “வீட்டுக்குள்தானே மது அருந்திவிட்டு தன்னை மறந்து உறங்குகிறாள். அதனால் அவளுக்கு ஆபத்து ஏற்படாது என ஆண்கள் எண்ணிவிடக் கூடாது. அவர்கள் அங்கனம் மதி மயங்கிய நிலையில் வீட்டுக்குள் இருந்தாலும் அந்தப் பெண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பது ஆண்களின் கடமை.”

மேதாதிதியின் இந்த உரைக்கு விளக்கம் சொல்லும் கங்காதர் ஜா (Ganganath Jha)வும் மிகத் தெளிவாகச் சொல்கிறார். “இந்த ஸ்லோகத்தின் பொருள் அழகு பொருட்கள், சுவையான உணவுகள் போன்ற லௌகீக இன்பங்கள் பெண்களுக்கு தடை செய்யப்படவேண்டும் ‘என்பது அல்ல’. அவற்றை பெண்கள் அனுபவிக்கும் போது, அந்தப் பெண்களுக்கு தீங்கு வந்துவிடாமல் காக்க வேண்டிய கடமை ஆண்களுடையது.”

மனு ஸ்ம்ருதி ஒரு சட்ட நூல் அல்ல. சட்ட நூல்களுக்கு வழிகாட்டும் ஒரு நீதிபரிபாலன நூல். இது போன்ற ஸ்ம்ருதிகளை வைத்துக் கொண்டுதான் ஹிந்து சமூக சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உதாரணமாக, மிதாக்‌ஷாரம் எனும் ஹிந்து சமூக சட்டம். இதனை தற்கால இந்திய சமூக சட்டங்களோடு (civil laws) ஒப்பிடலாம். அந்த மிதாக்‌ஷாரம் மனு ஸ்ம்ருதியின் இந்த குறிப்பிட்ட ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு கணவன் மனைவியருக்கு இடையேயான வழக்கினை ஒரு அரசன் எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்கிறது. அதன் கூற்றுப்படி, “அரசன் அந்த இருவரையும் மீண்டும் சந்தோஷமாக ஒன்றிணைந்து தர்மத்தின் வழியில் வாழவே வழி செய்ய வேண்டும். பிரித்துவிடக் கூடாது.”

பார்க்க: https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc201360.html

பெண்களின் பெருமையை அழிக்கும் அந்த 6 வித சூழல்களுக்கு தள்ளப்பட்ட பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட துயர நிலை காரணமாக எந்த ஆணையும் நம்பிவிடுவார்கள். அந்த ஆணின் அழகோ, தகுதியோ அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல (ஸ்லோகம் 14). அவனை நம்பி தன்னை ஒப்படைத்தும் விடுவார்கள். இதனால் அவர்களுக்கு மேலும் மேலும் சீரழிவே உண்டாகிறது.

இந்தச் சூழல்களில் இருக்கும் பெண்கள், இந்தச் சூழல்களினால் எழுந்த கோப தாப உணர்ச்சிகளால் தங்களின் கணவருக்கு நேர்மையாக இருக்க மாட்டார்கள். என்னதான் அந்தக் கணவன் தன் வீட்டுக்குள் வைத்து அந்தப் பெண்ணை பாதுகாத்தாலும் (ஸ்லோகம் 15).

இங்கனம் பெண்கள் இழிவுபடுத்தும் சூழல்கள் இருப்பதால், அவற்றில் இருந்து அந்தப் பெண்களை பாதுகாக்கும் கடமை உணர்ச்சியை உழைக்கும் விழைவே ஆண்களுக்கு இறை விதித்துள்ளது (ஸ்லோகம் 16). அதாவது, தன் வீட்டுப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என இயல்பாகவே ஆண்களுக்கு கடமை உணர்வு வரும் என்கிறார் மனு.

திருமாவளவன் சொல்வது போல, பெண்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் என்பதால் அவர்களை போலீஸ்க்காரன் திருடனை பாதுகாப்பது போலப் பாதுகாக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவு இடுவது போல மனு உத்தரவு இடவில்லை.

மனு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் இயல்பு தன் வீட்டுப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு. இந்த இயல்பான உணர்வையே மனு சுட்டுகிறார்.

இந்த 6 தீய சூழல்களால் பெண்களுக்கு தீமை ஏற்பட்டுவிடும் என்பதால் பெண்களின் பொருளாதார ஆவல்கள், அவை தடைப்பட்டால் எழும் கோபதாபங்கள் குறித்து மனு விதிகளை பெண்களுக்காகச் செய்தார் (ஸ்லோகம் 17). அதாவது காப்பதற்கான விதிகளைத்தான் மனு ஸ்ம்ருதி முன்வைக்கிறது. இதனை திருமாவளவன் உல்ட்டா செய்து, பெண்கள் இயல்பிலேயே தீயவர்கள் என்று மனு சொல்வதாகச் சொல்கிறார்.

அதாவது, ஸ்லோகங்கள் 13, 14, 15, 16, 17 ஆகியவை சொல்வது பெண்களை இழிவுக்குள் தள்ளிவிடும் சூழல்களால் பெண்களுக்கு ஏற்பட்டு விடும் தீங்குகள் குறித்தவை. பிறப்பிலேயே பெண்களுக்கு இந்த இயல்புதான் என மனு சொல்வதாக, இதனை திருமாவளவன் திரித்துப் பொய் சொல்கிறார்.

அடுத்ததாக, இந்த சூழல்களில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டி, பெண்களுக்கு கணவனோடு சேர்ந்துதான் வேதச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட விதி என்கிறார் மனு (ஸ்லோகம் 18). இந்த 6 சூழல்களால் பலவீனமாகிப் போன, வேத நூல்கள் குறித்த ஆர்வமின்மையால் அவை குறித்த அறிவு இல்லாத பெண்கள் பொய்மைகளே என்கிறார் அவர் (ஸ்லோகம் 18).

இந்த 6 தீய சூழல்களுக்கு உட்பட்ட பெண்களுக்கு தீர்வே இல்லையா ? அவர்கள் மீட்கப்பட வாய்ப்பே இல்லையா ?

இல்லவே இல்லை என்கிறார் திருமாவளவன். ஆனால், மனுவோ அவர்களுக்கான தீர்வுகளையே 19ம் ஸ்லோகத்தில் இருந்து பிற ஸ்லோகங்கள் சொல்கிறார். அதாவது, தீய சுழல்களால் பாதிக்கப்படுவது குறித்த ஸ்லோகங்களைவிட நல்ல சூழல்களால் பாதுகாக்கப்பட பெண்கள் எப்படி எல்லாம் உயர்வடைகிறார்கள் என்பதை மிக அதிக அளவு ஸ்லோகங்களில் சொல்கிறார்.

திருமாவளவனோ, பெண்கள் பிற சாதி ஆண்களுடன் கலந்துவிடக் கூடாது என மனு சொல்வதாகச் சொல்கிறார். ஆனால், மனுவோ இந்த 6 சூழல்களில் பிறந்துவிட்ட ஒரு பெண்கூட ஒரு நல்ல ஆணை திருமணம் செய்து கொண்டால் போற்றப்படும் உயர்ந்த நிலையை அடைகிறாள் என்கிறார். அதற்கு உதாரணமாக வஸிஷ்டரை திருமணம் செய்து கொண்ட அக்ஷமாலாவினை சுட்டுகிறார். இவர்களுக்கு இடையே நடந்தது கலப்பு திருமணமே. இருவரின் சாதியும் வேறு வேறு. வஸிஷ்டர் பிராமணர். அக்ஷமாலா தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.

எனவே, கலப்பு திருமணத்திற்கு மனு எதிரி என்கிற திருமாவளவனின் வாதத்தை மனுவே பொய் என்று நிரூபித்து விடுகிறார் !

இங்கே அக்ஷமாலா சாதியால் தாழ்ந்தவள் என மனு சொல்லவே இல்லை. இந்த 6 சூழல்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டவள் என்றே அவர் குறிப்பிடுகிறார்.

அவர் சாதியை குறிப்பிடவில்லை என்பதற்கு ஆதாரமாக அதே மனுவின் ஸ்லோகத்தில் மண்டபால ரிஷியை திருமணம் செய்துகொண்ட பெண்மான் உயர்வு அடைந்ததையும் குறிக்கிறார். திருமாவளவன் முன்வைக்கும் கேஸ்ட் உயர்வு தாழ்வுகள் மனிதர்களுக்குத்தான். மான்களுக்கு இல்லை. அதனால், மிகத் தெளிவாகவே உறுதியாவது மனு வர்ண/ஜாதி அடிப்படையில் எந்த உயர்வு தாழ்வையும் முன்வைக்கவில்லை என்பது. வர்ண/ஜாதி அடிப்படையில் மட்டும் அல்ல மனிதர் விலங்குகள் அடிப்படையில்கூட அவர் உயர்வு தாழ்வினை முன்வைக்கவில்லை. அவர் சொல்வதெல்லாம் ஒவ்வொரு படைப்பும் இயல்பில் எங்கனம் இருக்கின்றன. அவற்றை உயர்த்துவது எப்படி என்கிற கையேட்டிற்கான விஷயங்கள் மட்டுமே.

இதனை திரிக்க திருமாவளவன் போன்ற பொய் சொல்லக் கூசாத  சோரம் போன தரம் அற்றவர்களுக்கே சாத்தியம்.

பொய் 3: அவரது அமைப்பினர் தாங்கிப் பிடித்து இருக்கும் போஸ்ட்டரில் உள்ள மனு ஸ்ம்ருதி மேற்கோள்:

மனு ஸ்ம்ருதி 2:213

स्वभाव एष नारीणां नराणामिह दूषणम्।

अतोऽर्थान्न प्रमाद्यन्ति प्रमदासु विपश्चितः॥ (Manu Smriti.2-213)

இதனை ஸம்ஸ்கிருதத்தில் இருந்து இங்க்லீஷில் மொழி பெயர்ப்பவர்கள், ஸ்ம்ருதிகளிலோ ஸ்ம்ருதிகள் குறித்த பாரம்பரிய விளக்கங்களோ அறியாதவர்கள். அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கிறார்கள்:

“It is the nature of women to seduce men in this world; for that reason the learned are never unguarded in the company of females”.

இந்தத் தவறான இங்க்லீஷ் மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் இப்படி மொழி பெயர்க்கிறார்கள்:

  “இந்த உலகில் உள்ள ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பாக இருக்கிறது. அதனால் கற்றோர்கள் பெண்களிடம் சகவாசம் கொள்ளும்போது எச்சரிக்கையை கைவிடுவது இல்லை.”

  இந்த மொழி பெயர்ப்பை வைத்துத்தான் திருமாவளவன் உள்ளிட்ட “பெண்களை வெறுப்பவர்கள்” இந்த ஸ்லோகத்தின் தவறான மொழிபெயர்ப்பையே பயன்படுத்துகின்றனர்.

  இதன் பொருளாக திருமாவளவன் சொல்வது, “பெண்கள் எல்லாரும் ஆண்களை மயக்குபவர்கள் என மனு ஸ்ம்ருதி சொல்கிறது” என்பதே.

  உண்மை என்ன ?

  மனு ஸ்ம்ருதியின் அதிகாரம் 1, படைப்பு பற்றியும், படைத்த ப்ரஹ்மம் எனும் தெய்வம் பற்றியும் பேசுகிறது. அதில், இந்த தெய்வம் படைத்த வழியில் நால் வர்ணத்தாரின் கடமைகளும் பேசப்படுகின்றன. அதிகாரம் 2ல் பேசப்படுவது, அந்த தெய்வத்தை அறிவதற்கான அறிவின் மூலங்கள் பற்றியும், அந்த தெய்வீக வாழ்வை வாழ ஆன்மீகக் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் செய்ய வேண்டியவை குறித்தும்.

  அதாவது, திருமாவளவன் சொல்வது போல, தன் வீட்டில் உள்ள பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்கிற போதனை இங்கு பேசப்படவே இல்லை. கலப்பு திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக பெண்களை சிறைப்படுத்த வேண்டும் என்பதற்காக பெண்கள் காமவெறி கொண்டவர்கள் என்று இந்த ஸ்லோகம் சொல்லவே இல்லை.

  இங்கு பேசப்படுவது ஆன்மீக மாணவர்கள் நன்கு கல்வி பயில, அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தது. இந்த ஸ்லோகம் சொல்லப்படும் அத்யாயத்தின் தலைப்பே இதுதான்:

  “மதம்”-சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்

  இதற்கு உரை எழுதும் மேதாதிதி (Medhatithi) இவ்வரிகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார்:

  “एषा प्रकृतिः स्त्रीणां यत् नराणाम धैर्यव्यावर्तसङ्गान् हि स्त्रियः पुरुषान् व्रताच्च अवयेयुः। अतः अर्थात् अस्मात् हेतोः न प्रमाद्यन्ति = दूरतः एव स्त्रियः परिहरन्ति। प्रमादः स्पर्शादिकरणं वस्तुस्वभावः अयं यत् तरुणी स्पृष्टा कामकृतं चित्तसंक्षोभं जनयति। यत्र चित्तसंक्षोभः अपि प्रतिषिद्धः, तिष्ठतु तावत् अपरो ग्राम्यधर्मसम्भ्रमः। प्रमदाः=स्त्रियः”

  இதன் பொருள்,

  “மிக உறுதியான நடத்தை உடைய ஆண்களைக் கூட பெண்களின் அருகாமை சபலம் அடையச் செய்துவிடுகிறது. இதனால், கற்றவர்கள் பெண்களின் அருகாமையை தவிர்க்கிறார்கள். प्रमादः [ப்ரமாதஹ] என்பதன் பொருள் தொடுதல் போன்றவை. உலகம் அறிந்த உண்மை எதுவெனில், பெண்களை தொட்டால் ஆண்களுக்கு மனம் ஆசையினால் சஞ்சலம் ஏற்படும் என்பதே. மனதில் எழும் சஞ்சலமே [மதக் கல்வி பயிலும் மாணவருக்கு] தடை செய்யப்பட்ட ஒன்று எனும்போது, பெண்களுடன் உடலுறவு (ग्राम्यधर्मः) கொள்வது பற்றி சொல்வானேன் ?”

  ஆதாரம்: https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc199689.html

  மிகத் தெளிவாக இந்த ஸ்லோகம் சொல்பவை கீழே:

  1. இது ஆண்களுக்குக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. பெண்களுக்கு அடிமைத்தனத்தை விதிக்கவில்லை.

2. இது ”மதக்” கல்வி கற்கும், ஆன்மீக வாழ்க்கை வாழும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. [மற்ற வகை லௌகீகக் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இந்த அறிவுரை உபயோகம் ஆகும் என்றாலும், ] இது ஆன்மீகப் பாதையில் வாழ விரும்பி அந்தக் கல்வியை கற்பவர்களுக்குச் சொல்லப்பட்ட ஒன்றே.

  3. மாணவர்கள் மனம் சஞ்சலம் அடைந்து கல்வியில் இருந்து கவனம் சிதறிவிடக் கூடாது என்பதே இந்த விதியின் பொருள்.

  4. பெண்களை தொட்டுப் பேசக் கூடாது என்று இந்த ஸ்லோகம் ஆன்மீகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விதிக்கிறது. அதாவது ஆன்மீக வாழ்க்கை வாழ விழையும் மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் கலவி பயிலக் கூடாது என்கிறது.

  திருமாவளவன் சொல்வதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இல்லாத ஒரு பொய்யை திருமாவளவன் மக்களிடம் பரப்பி, பண்டைய இந்தியாவின் ஆகச் சிறந்த அறிவுரையை பொய்யாகத் திரிக்கிறார்.

  இந்துக்களை இகழ்வதன் மூலம், தன் முன்னோர்களின் உயர் குணத்தையும் சந்தேகித்து, அவருடைய மூதாதையரும்கூட பெண்களை வெறும் காமப் பண்டமாகக் கருதினார்கள், அடிமை செய்தார்கள் என்கிறார். அவருடைய மூதாதையரை மட்டும் அல்ல. அவர் சமூகத்தில் உள்ள அனைவரின் மூதாதையரையுமே அவர் இகழ்கிறார்.

  இந்தியப் பெண்கள் அனைவர் மேலும் அவர் சொல்லும் இகழ்வுச் சொல் குறிக்கும் எனும் மிகப் பெரிய பழிச் சொல் இது. இவ்வளவு பெரிய பழிச்சொல்லை எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒருவர் சொல்லலாமா ?

  இது குறித்து கற்று அறிந்தவர்களோடு உரையாடி, உண்மை என்ன என்கிற தெளிவை அவர் பெற்று இருக்க வேண்டும். அதை செய்வதற்கு அவருக்கு எம்.பி. பதவியும், அவரிடம் உண்மையை சொல்ல பாரம்பரிய அறிவுடையவர்களும் சுற்றி இருக்கிறார்கள். தயக்கம் இன்றி உண்மை என்ன என்பதை அவருக்கு அவர்கள் சொல்லி இருப்பார்கள். அவர் கேட்டிருந்தால். இருப்பினும், அதனை அவர் செய்யவில்லை.

காரணம், உண்மை என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்பவே இல்லை. அவரது நோக்கம், இந்துப் பெண்களை முக்கியமாக அவர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதுதான். அப்படிப் பேசுவதன் மூலம், “ஆண்ட சாதிகள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் மகிழ்வார்கள் என்கிற எண்ணத்தில்தான் அவர் அப்படிப் பேசுகிறார். அவருடைய பேச்சிலே “தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களும் கூட வேசிகள்” என்று அவர் குறிப்பிட வேறு காரணம் என்ன இருக்க முடியும் ?

  எதனால்  “ஆண்டை சாதிப் பெண்களும்கூட வேசிகள்” என்று திருமாவளவன் சொல்லவில்லை ? ஏனென்றால், அந்த சாதியார்கள் இவருடைய பேச்சைக் கேட்டு, இவர் தன் சமூகத்துப் பெண்களையே மிகக் கீழ்த்தரமாகப் பேசுவதைக் கேட்டு மகிழ்வார்கள் என்று எண்ணுகிறார்.

  உண்மையில் இந்தப் பேச்சைக் கேட்கும் எல்லா சாதியார்களுமே, திருமாவளவன்மேல் அருவருப்பே கொள்கிறார்கள். தன் சமூகத்துப் பெண்களை இகழும் ஒருவரை யார்தான் மதிப்பார்கள் ?

பின் குறிப்பு: இந்த ஸ்லோகங்களை திருமாவளவன் சொன்னதால், அந்த ஸ்லோகங்களை மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் ஸ்லோகங்களை எடுத்துக் கொண்டு திருமாவளவன் வந்தால், மனு ஸ்ம்ருதியும் அதன் உரையாசிரியர்களும் என்ன சொன்னார்கள் என்கிற உண்மைகள் சொல்லப்படும்.

To know more, please read: http://indiafacts.org/author/ramanuja-devanathan/

பின் குறிப்பு:

இந்துப் பெண்கள் விபச்சாரிகள் என்று மனு ஸ்ம்ருதியில் சொல்வதாக அம்பேத்கார் எங்கே குறிப்பிட்டார் ?

ஐரோப்பிய வரலாற்றை காப்பி அடித்து, அம்பேத்கார் எழுதிய Revolution and Counter-Revolution in Ancient India என்கிற பகுதியில் மனு ஸ்ம்ருதியில் அப்படி இருப்பதாக அம்பேத்கார் பொய் சொல்கிறார்.

இந்த லிங்கில் போய் 141ம் பக்கம் பார்த்தால் அம்பேத்கார் அப்படிச் சொன்ன பொய்யை காணலாம்.

http:// drambedkar.co.in/wp-content/uploads/books/category1/6revolutionandcounterrevolution. pdf

[ டிஸ்க்ளெய்மர் 1: விரிவாக, விளக்கம் சொல்ல தற்போது எனக்கு நேரம் இல்லை. கிடைத்துள்ள 3 மணி நேரத்துக்குள், சுருக்கமாக இங்கே தருகிறேன். அதனால், விரிவாகச் சொல்லாததற்கு என்னை தயை செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். சொற்பிழை, எழுத்துப் பிழைகளையும் மன்னித்து விடுங்கள். பொருள்ப் பிழை இருந்தால், தயை செய்து சுட்டி திருத்த உதவுங்கள்.

டிஸ்க்ளெய்மர் 2: இங்கே “திருமாவளவன்” என்று நான் குறிப்பிட்ட அனைத்தும் அம்பேத்கார் சொன்னவை. ஆனால், அம்பேத்கார் என்கிற பெயரை பயன்படுத்த பாஜகவினருக்கு அரசியல் சார்ந்த சங்கடங்கள் இருப்பதால் திருமாவளவன் பெயரை பயன்படுத்துகிறேன். ]

No comments:

Post a Comment

Pakistan Parliament discussions