Friday, October 23, 2020

பட்டியல் சமூக மக்கள் பிரதிநிதிகளை இழிவு செய்யும் திராவிட தீண்டாமை, திருமா ஏன் போராடவில்லை


விசிக தலைவர் சர்ச் அடிமை திருமாவின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வார்டு உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள துணைத் தலைவர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.

இதுகுறித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் , "கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். அவர் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்," எனத் தெரிவித்துள்ளார்.

 
 














No comments:

Post a Comment