Saturday, October 17, 2020

யாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்

எபிரேய பைபிள் தொன்மம் என்பது கிறிஸ்துவ விவிலியத் தொன்மத்தில் பழைய ஏற்பாடு, இக்கதிஅக்ளின் அடிப்படி இஸ்ரேலிற்கு மட்டுமான யாவே எனும் தெய்வம் அந்த பகுதிய ஆட்சி செய்யும் உரிமையை ஆபிரகாம் எனும் அன்னியர் வம்சத்திற்கு தந்து வளர்க்கிறார் என்பதே ஆகும்.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர்,   21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

அந்த மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்ய தூண்டும் ரத்த வெறி கொலைகார தெய்வம் யாவே கர்த்தர் ஆகும். 

உபாகமம் 20:13 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்நகரைக் கைப்பற்ற உங்களை அனுமதிக்கும்போது, நீங்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொல்லவேண்டும். 14 ஆனால் நீங்கள் ங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். 15 நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக. 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். 
இங்கே மண்ணின் மைந்தர்களை கொலை செய்து பெண்களை அனுபவிக்க வைத்துக்கொள் எனும் அந்த தெய்வம் அதில் கன்னிப்பெண்களை பங்கு கேட்டும் பெற்றுக் கொண்டாராம்  

எண்ணாகமம் 31:31 மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர். 32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும், 33. 72,000 பசுக்களையும் 34 61,000 கழுதைகளையும், 35. 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)  

40. வீரர்கள்  16,000 கன்னிப் பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 கன்னிப் பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர். 41 கர்த்தர்  ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளை யெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

யாவே - கர்த்தர் யார்?? 

உபாகமம் 32:8 உன்னதமான தேவன் எல்யோன் பூமியில் ஜனங்களைப் பிரித்து     ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.     இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். 9 இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே கர்த்தர், இஸ்ரேல்  ஜனங்களே யாவே பங்கு,    யாக்கோபு (இஸ்ரவேல்) யாவேக்குச் சொந்தம்.


ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள்11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிறநாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

இஸ்ரேல் தொல்லியல்துறை கடந்த 150 ஆண்டுகளாய் நடந்த அகழாய்வுகள்படி கானான் பகுதியில் மக்கள் தொகை குடியேற்றமே மிகவும் குறைவு, யூதேயா, இஸ்ரேல் என நாடுகள் எனும்படி இருந்ததே இல்லை. இஸ்ரவேலர்கள் என்போர் கானான் மண்ணின் பழங்குடிகளே, பைபிள் முழுவதும் மனிதக் கற்பனை கட்டுக்கதை


No comments:

Post a Comment

Pakistan Parliament discussions