Thursday, October 22, 2020

ஏசுவின்படி பெண்கள் எல்லாரும் வேசிகளா- பைபிளில் பெண்ணீய அடிமைத்தனத்தின் உச்சம்

 “இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.”- மாற்கு 10: 7-9

 “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்” – மத்தேயு 5:32


ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்வு கசப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். குடும்ப வாழ்வில் விரக்தியுற்ற நிலையில் உள்ள பெண்ணுக்கு விவாகரத்து உரிமையை மறுத்தால் முடிவு விபரீதமாகிவிடும். இன்று தினந்தோறும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பிடிக்கின்ற செய்திததான் “இளம் பெண் தற்கொலை” என்பது. இந்த தற்கொலைகளின் பிண்ணனியில் விவாகரத்து உரிமை மறுக்கப்பட்டு, “கல்லானலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்கின்ற காலாவதியான தத்துவம் திணிக்கப்பட்டமைதான் காரணம் என்பதை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

பைபிளை இறைவேதமாக நம்புகின்ற மக்களை அதிகமாக கொண்ட மேற்குலக நாடுகளில்தான் இன்று அசுர வேகத்தில் விவாகரத்துக்கள் நடைபெறுகின்றன. இது பைபிளின் போதனை நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நிரூபித்து நிற்கின்றது.

ஆதிபாவத்தின் அவமானச் சின்னம் பெண்
கிறிஸ்த்தவ அன்பர்களால் புனித வேதமாக நம்பப்படுகின்ற பைபிளின்; ஆதியாகமம் எனும் ஆகமத்தின் மூன்றாம் அதிகாரம் ஆதிபாவம் குறித்து இவ்வாறு விபரிக்கின்றது.

6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்க, இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

மேலுள்ள பைபிள் வசனங்கள் என்ன கூற வருகின்றது. கிறிஸ்த்தவ நம்பிக்கையின் படி இவ்வுலகினில் பிறக்கின்ற பாலகர்களெல்லாம் பாவியாக பிறப்பதற்கும், ஆதாம் தவறிழைப்பதற்கும் காரணமாக இருந்தவள் பெண்தான் என பைபிள் விபரிக்கின்றது.

ஆதிபாவத்திற்கு காரணமானவள் பெண்தான் என்கின்ற இந்த நச்சுக் கருத்து பெண்களை இழிவாக கருதக் கூடிய, பெண்களை அடிமைகளாகவும், அவமானச் சின்னமாகவும் கருதக் கூடியவர்களால் பைபிளில் இடைச் செருகல் செய்யப்பட்ட சம்பவம் என்பதை குறித்த சம்பவமே உணர்த்தி நிற்கின்றது.

ஒரு வாதத்திற்காக ஆதாம் தவறிழைப்பதற்கு ஏவாள்தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இன்றைய 21ம் நூற்றாண்டில் வாழ்கின்ற பெண்கள் எவ்வாறு ஏவாளின் பாவத்திற்கு பொறுப்பாவார்கள்?

ஏனெனில், பைபிள் கூறுகின்றது.
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்”
எசக்கியேல் 18:20

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
உபாகமம் 24:16

“பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.”
எரேமியா 31:29, 30

ஒன்று கிறிஸ்த்தவ அன்பர்கள் ஆதிபாவத்தில் இன்றைய அப்பாவி பெண்களுக்கு எவ்வித பங்குமில்லை என்கின்ற பேருண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது எசக்கியேல், உபாகமம், எரேமியா வசனங்கள் தேவனுடைய வார்த்தை கிடையாது என்று பைபிளில் இருந்து நீக்க வேண்டும்?

மேலும், ஏவாளின் தவறுக்காக பெண்கள் பிரசவ வேதனையை உணர்கின்றார்கள் என்றால், கிறிஸ்த்துவுக்காக தங்களை அர்ப்பணித்துள்ள கன்னியாஸ்திரிகள் அல்லவா வேதனையை அதிகமாக உணர வேண்டும்? கன்னியாஸ்திரிகளின் விடயத்திலும், குழந்தைப் பாக்கியமற்ற பெண்களின் விடயத்திலும் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே?

ஏவாளின் பாவத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஏனைய உயிரினங்களும் பிரசவத்தின் போது வேதனையால் துடிப்பது பைபளின் போதனைக்கு எதிராக அல்லவா உள்ளது?

கர்த்தரின் சாபத்தின் (?) அடிப்படையில் உலகில் எங்குமே பாம்புகள் மண்ணைத் தின்பதைக் காணோமே?

இவர்களது விடயத்தில் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே?

எனவேதான், ஆதிபாவமும், அதற்கு காரணமான சம்பவமும் உண்மைக்கு புறம்பானது என்பதை பின்வரும் பைபிள் வசனம் தெளிவுபடுத்துகின்றது

“ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும், நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. அந்த தீர்க்கதரிசி அதை துணிகரத்தினாலே சொன்னான். அவனுக்கு நீ பயப்படவேண்டாம்”- உபாகமம் 18:22

பைபிளின் பெண்களுக்கெதிரான படையெடுப்பு
கிறிஸ்த்தவ அன்பர்களால் புனித வேதமாக நம்பப்படுகின்ற பைபிள் மோசே கர்த்தரின் கட்டளைப்படி மேற்கொண்ட படையெடுப்பை பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். (31:17)

கணவனோடு குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பெண்கள் எல்லோரையும் கொன்று விட்டு, குடும்ப வாழ்வில் ஈடுபடாத பெண்பிள்ளைகளை விட்டு வைக்க வேண்டுமாம். எதற்கெனில்,

ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். (31:18)

“உங்களுக்காக” அதாவது மோசேயின் படையினர் அனுபவிப்பதற்காக (!) விட்டு வைக்க வேண்டுமாம், இவ்வாறு படையினரால் காவு கொள்ளப்பட்ட கன்னிப் பெண்கள் எத்தனை பேர் என்று பைபிள் புள்ளி விபரம் தருகின்றது.

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம் பேர் இருந்தார்கள். (31:35)

எண்ணாகமம் அதிகாரம் 31

இத்தகைய போதனைகளை கர்த்தரின் வார்த்தையாக நம்பக் கூடிய மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக அல்லவா உள்ளது?

எனவே, நிச்சயமாக இந்த வசனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளாக இருக்க முடியாது. நீதிமானாகிய கர்த்தர் அப்பாவிப் பெண்களுக்கு எதிரான இந்த அத்துமீறல்களை நிச்சயம் ஏவி இருக்கமாட்டார். மாறாக, பெண்களை போகப் பொருளாக கருதுபவர்களால்தான் இவ்வாறெல்லாம் சிந்திக்க முடியும்.

தரந்தாழ்த்தப்படும் தங்கை உறவு
தாவீது ராஜாவுக்கு தாமார் எனும் மகளும், அப்சலோம் எனும் மகனும் இருந்தனர். அப்சலோம் என்பவன் தனது சகோதரி தாமார் மீது மோகங்கொண்டு, திட்டமிட்டு சகோதரியை தனிமைப்படுத்தி தவறான உறவு கொள்ள முயற்சிக்கின்றான். அதற்கு சகோதரி தாமார் சகோதரன் அப்சலோமுக்கு அளித்த பதிலை பைபிள் பின்வருமாறு விபரிக்கின்றது.

“நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.”
பார்க்க 2 சாமுவேல், அதிகாரம் 13, வசனம் 1-13

சகோதரன் சகோதரியை கற்பழிக்கின்ற இந்த உயரிய போதனை (?) 2ம் தீமோத்தேயு கூறுகின்ற வேதநூலின் நான்கு நோக்கங்களுக்குள் எந்த நோக்கத்திற்குள் உள்ளடங்கும் என்பதற்கப்பால், “தந்தையிடம் பேசு, சகோதரன் நீ என்னுடன் தவறான உறவு வைத்துக் கொள்வதற்கு தராமல் தந்தை மறுக்கமாட்டார்” என்று சகோதரி கூறுகின்றாள்.

இந்த விரசமான போதனையை சகோதரனும், சகோதரியும் ஒன்றாய் அமர்ந்து பக்திப் பரவசத்தோடு படிக்க முடியுமா? பெண்களை போகப் பொருளாக கருதியவர்கள், சகோதரத்துவம் என்கின்ற உன்னதமான உறவை எந்த அளவுக்கு ஆபாசமாக, அசிங்மாக சித்தரித்திருக்கின்றார்கள்.

கிறிஸ்த்தவ அன்பர்களே! தயவு செய்து சிந்துத்துப் பாருங்கள்.

மாதவிடாய்
பெண்ணினத்தை இழிவு செய்யும் வகையில் கிறிஸ்த்தவ அன்பர்களால் புனித வேதமாக நம்பப்படுகின்ற பைபிளில் மாதவிடாய் குறித்து இடைச் செருகல் செய்யப்பட்ட வசனத்தை நோக்குவோம்.

“சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.
(லேவியராகமம் 15:19-24)

பெண்களுக்கு ஏற்படக் கூடிய இயற்கை உபாதையான மாதவிடாய் குறித்து பைபிள் எவ்வாறெல்லாம் விபரிக்கின்றது? மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை தீட்டு என்ற பெயரில் குடும்பத்தை விட்டு, வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பது நியாயம்தானா? கிறிஸ்த்தவ அன்பர்களே! சிந்தியுங்கள்.

பைபிளின் பெண்களை இழிவுபடுத்தக் கூடிய இந்த போதனையை பின்பற்றக் கூடியவர்கள் சாதாரணமாக பஸ்களில் கூட பிரயாணம் செய்ய முடியாதே? ஏனெனில், பஸ்களில் ஏறி, இறங்குகின்ற பெண்கள் பஸ்ஸை தீட்டுபடுத்தியிருப்பார்கள் அல்லவா?

சிந்தியுங்கள் சகோதரர்களே! மாதவிடாய் பெண் மீது கணவனது கைபட்டுவிட்டாலும் அவன் தீட்டுப்பட்டவனாகி விடுவான். அவள் உட்கார்ந்த இருக்கையின் மீது உட்காருபவர்கள் தீட்டுப்பட்டவர்களாகி விடுவார்கள்.

மாதவிடாய் பெண்ணைத் தொட்டாலும் தீட்டு. அவள் தொட்டதை தொட்டாலும் தீட்டு. பெண்களை இழிவுபடுத்தக் கூடிய இந்த போதனை நடைமுறைச் சாத்தி யமானதுதானா?

அசிங்கப்படுத்தப்படும் அப்பா- மகள் உறவு
30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடே கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடே கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.

31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள் வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள் வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

இந்த அருவருப்பான, அசிங்கமான சம்பவத்தை தந்தையும், மகளும் ஒன்றாய் உட்கார்ந்து பக்தியுடன் படிக்க முடியுமா? பெண்களை எந்த அளவுக்கு வக்கிரமாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவுக்கு வக்கிரமாக சித்தரித்துள்ளார்கள். நிச்சயமாக இந்தப் போதனை (?) இல்லை! இல்லை! இந்த ஆபாச கற்பனை (!) நிச்சயமாக கர்த்தர் கூறியது கிடையாது. பெண்களுக்கெதிரான கீழ்த்தரமான சிந்தனை கொண்டவர்களால் புனையப்பட்ட சம்பவமாகவே இது இருக்க முடியும்.

யூத தாய்மார் விபச்சாரிகளா?
“இந்தப் பொல்லாத “விபசார சந்ததியார்” அடையாளம் தேடுகிறார்கள். யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4

யூதர்களில் சிலர் இயேசுவிடம் வந்து அடையாளத்தை காட்டுமாறு கேட்டதற்கு சம்பந்தமில்லாமல் விபச்சார சந்ததியார்- என்று கூறுவதன் மூலம் யூதர்களின்- பரிசேரியரின்- தாய்மார்களை விபச்சாரிகள் என்று திட்டுகின்றார் இயேசு.

பொதுவாக பைபிள் முழுக்க பெண்களை இழிவுபடுத்தக் கூடிய, விபச்சாரிகளாக சித்தரிக்க கூடிய வசனங்கள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை அவதானிக்கலாம்.

இயேசுவின் பாட்டி அந்தஸ்த்தைப் பெறும் தாமார் விபச்சாரி என்று பைபிள் அறிமுகம் செய்கின்றது. (பார்க்க மத்தேயு 1:3, ஆதியாகமம், அதிகாரம் 38)

“தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்”(மத்தேயு 1:6)

இயேசு “தாவீதின் குமாரன்” என்று பைபிளில் அறிமுகப்படுத்தப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற தாவீது ராஜா உரியா என்கின்ற அந்நியனின் மனைவியினிடத்தில் சூழ்ச்சியாக தவறான உறவின் மூலம் சாலமோனைப் பெற்றதாக பைபிள் விபரிக்கின்றது. இந்த சாலொமோனின் வழித்தோன்றலிலேயே இயேசு தோன்றியதாக மத்தேயு 1:6 விபரிக்கின்றது.

இந்த சாலொமோனும் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களுடன் உறவு கொண்டு அவர்கள் மீது அதிகமாக மோகம் கொண்டிருந்ததாக பைபிளின் 1 இராஜாக்கள் அதிகாரம் 11, வசனம் 2 கூறுகின்றது. மேலும், இந்த சாலொமோனுக்கு 700 மனைவிமார்களும், 300 வைப்பாட்டிகளும் இருந்ததாக பைபிள் விபரி;க்கின்றது.

இது தவிர, இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் “ராகாப்”. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.

இவ்வாறாக, பைபிளில் விபச்சாரிகள் நிறைந்து காணப்படுவதை அவதானிக்கலாம். இது தவிர, இயேசு தனது தாயை எவ்வாறெல்லாம் அவமதித்தார் என்று பைபிள் விபரிக்கின்றது.

“திராட்சரசங் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு “ஸ்திரீயே! எனக்கும் உனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லை” என்றார் ”
யோவான் 2:3-4

இயேசுவின் தாய் மரியாள் கலிலேயாவில் நடந்த திருமண வைபமொன்றில் வைத்து தனது அருமைக் குமாரர் இயேசுவைப் பார்த்து திராட்சை இரசம் தீர்ந்து விட்டது என்று கூறியதற்கு, திருமண சபையில் வைத்து இயேசு தன் தாயை எவ்வாறு அவமானப்படுத்துகின்றார், கேவலப்படுத்துகின்றார் என்பதையே மேலுள்ள பைபிள் வசனம் விபரிக்கின்றது.

மேலும், கிறிஸ்த்தவ அன்பர்களால் இறை வேதமாக நம்பப்படுகின்ற பைபிள் இயேசு தன் தாயாரை அவமானப்படுத்திய மற்றொரு சம்பவத்தை பின்வருமாறு விபரிக்கின்றது.

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். – மத்தேயு 12 : 56 – 50    https://www.islamkalvi.com/?p=7616 

பைபிள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள்..!!!

கிறிஸ்தவர்களே இன்று இதை நீங்கள் கடைபிடிப்பீர்களா..!!!! இன்றைய நவீன உலகிற்கு இது சாத்தியமாகுமா..!! அப்படியானால் எப்படி இது இறைவேதம் ஆக முடியும்..?????

லேவியராகமம-15 அதிகாரம்
________________________________________
19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

21. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

22. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

23. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

24. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
----------------------------------------------------------------------------------------------------

மாதவிடாய் என்பது கர்த்தரால் பெண்களுக்கு நியமிக்க பட்ட விதி. இந்த காலத்தில் உடல்உறவு கொள்ள வேண்டாம் என்றால் அது பொருந்தும் ஆனால் பாவம் அந்த பெண் உட்கார்ந்தால்,உறங்கினால்,தொட்டால் தீட்டு... இது கொடுமையிலும் கொடுமை... உனக்கு
தேவையான போது மட்டும் அவளுடன் கூடி விட்டு அவளுக்கு இப்படி ஒருநிலை வந்து அவளை கவனிக்க கணவன் தேவை படும்போது மட்டும் அவளை தீட்டு என்று ஒதுக்கி வைக்க சொல்வது அறிவுக்கு பொருந்துகின்றதா..!!!

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...