Monday, October 26, 2020

சங்க இலக்கியத்தில் சதி - பெண்கள் உடன்கட்டை ஏறுதல்

 பண்டைத் தமிழரிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். ணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும்.



புறநானூறு பாடல் 246:–

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

 பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத, பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவி யர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.

.... பெண்டிரும்

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!

என்று புறநானூற்றின் 62-ஆம் பாடல் சாற்றுகிறது.


https://www.akavizhi.com/p/blog-page_11.html

வீராபாண்டியில் சதிக்கல் கண்டுபிடிப்பு. கணவன் இறந்தவுடன் மனைவியையும் உடன் கட்டை ஏற வைக்கும் சதியில் இறந்த மனைவியின் நினைவாக வைக்கப்படும் சதிக்கல் (சதிமாதா வழிபாடு) அது. கல்லின் மேற்புறம் சந்திரரும் - சூரியரும் இருந்தால் அது சொர்க்கத்தைக் குறிக்கும். சில கற்களில் கூடுதலாக ஏதேனும் ஒரு கடவுளின் சிற்பமும் இணைந்திருக்கும். கணவனோடு உடன் கட்டை ஏறும் பெண் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை சிற்பங்கள் விளக்குகின்றன. ஒரு வீரனின் மனைவி, அவன் உடலோடு சேர்த்து எரிக்கப்பட்டதன் நினைவாக நிறுவப்பட்ட கல் அது.


4 # கம்பம் அருகிலுள்ள புதுப்பட்டியில் வீரக்கல் மற்றும் சதிக்கல் கிடைத்துள்ளது. கம்பம் சாலையில் அமைந்துள்ள சாலையோர வழிபாட்டிடத்தில் இவ்விரு கற்களும் இருந்தன.
உசாத்துணை
3.http://puram400.blogspot.com/ 
5. https://www.akavizhi.com/p/blog-page_11.html


 
வரலாற்றில் உடன்கட்டை ஏறுதல் !
தமிழ் நாட்டின் சில பகுதியில் தீப்பாஞ்சம்மன் என்ற பெயரில் சிறிய அம்மன் கோயில்களை பலரும் பார்த்தீருப்பீர்கள் .அவைகள் உடன்கட்டை எனும் கணவனுடன் உயிர்நீத்த மனைவிகளின் நினைவை ப் போற்றும் வகையில் அமைந்த வழிபடு இடங்களாகும்
உடன்கட்டைஎனும் சதி என்பது வடநாட்டு பழக்கம் என்ற கருத்தும். ராஜபுத்திரர்கள் இடையே மட்டும் உள்ள பழக்கம் என்றும் எண்ணினால் அது தவறு.ஆகும் .இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால்போரின் தோல்விக்குப்பிறகு பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்திய ப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார் என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர் அது உடன்கட்டை ஏறுதல் அல்ல இது அச்சத்தால் வந்த வழக்கம் .
ஆனால் தொலகாப்பியர் காலத்தகத்திற்கு முன்பே இந்தப்பழக்கம் தமிழர் பண்பாட்டில் இருப்பது தொலகாப்பிய குறிப்பில் இருந்து தெரிய வருகிறது
1. மூதானந்தம் - கணவன் இறந்த பொழுதே மனைவியும் உயிர் நீத்தல்.
ஒன்றுபட்ட அன்பினால் ஏற்பட்ட சாக்காடு.
2. பாலை நிலை - கணவன் சிதையில் ஏறி மனைவியும் எரியுண்டு இறத்தல்.
உடன்கட்டையேறும் வழக்கம்.
3. தாபத நிலை - உடன்கட்டையேறாது, பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து, அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக் கைம்மை நோன்புற்று உடலை வருத்தி வாழ்வர்.
4. முதுபாலை - கணவனை இழந்து தனி நின்று புலம்பும் மனைவி.
5. தபுதார நிலை - மனைவியை இழந்து தனித்து நின்று துயருறும் கணவன்.
இவ்வாறு தொலகாப்பியத்தில் வகைப்படுத்தப்படுகிறது .
'பல்சான் றீரே! ப ல்சான் றீரே!
செல்லெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே !
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்
புரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல் எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே!' (பாடல். 246)
எத்தனை உருக்கமான செய்திகளை , அந்த நாளைய பெண்டிரின் நிலையை புறநானூறு தெரிவிக்கிறது பாருங்கள் !.
பெருங்கோப்பெண்டு என்பவர் பூதப்பாண்டியன் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போரில் மாண்டான். 'எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து' எனக் கூறிக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்பட்டாள்.
'நின் கணவனுடன் நீயும் சென்று வருக! என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே!
வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டு,
பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்து, கைம்மை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம்!
ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம் என் கணவன் இறந்து பட்டனன். ஆதலால், எமக்கு அத்தீயே தாமரைக் குளத்து நீர்போல இன்பம் தருவதாகும்'
என்று கூறிப் பாலை நிலையில் நின்று, சிதையிற் பாய்ந்து எரிந்து கருகி இறந்து விட்டாள் பெருங்கோப்பெண்டு.என்கிற அரசி .!
தமிழக வரலாற்றிலும்குறிப்பாக சோழர் வரலாற்றில் உடன்கட்டை ஏறிய அரசிகளைப்பற்றிய செப்பேடு குறிப்புகள் உண்டு .
மாமன்னர் ராஜராஜனைப் பெற்றவள் வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினாள். என்ற குறிப்பு உண்டு "..
.அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க சுந்தரச்சோழன் விண்ணுலகெய்தினான்... எனது கணவர் சுந்தரர் அழகு மிக்கவர். ஆதலின் தேவப்பெண்களெல்லாம் அவரை விரும்புவர். அதற்கு நான் உடன்படேன்... வீரராகிய தன் கணவர் இறந்துபட அப்ஸரப் பெண்களெல்லாம் அவரை அங்கே அணைத்து விடுவார்களோ என்று பயந்து அவர் அருகிலேயே எப்பொழுதும் உடன் இருக்கச் சென்றாள்'' என்று திருவலங்காட்டுச் செப்பேடுச் செய்யுட்கள் குறிப்பதாக செப்பேட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு மட்டுமா, மாமன்னர் ராஜேந்திரன் மாண்டதும் அவரின் ஒரு மனைவியான வீரமாதேவி என்பவர் உடன்கட்டை எரிய வரலாறும் கல்வெட்டாக கிடைத்துள்ளது .
கணவன் இறந்ததும் ஒருங்குடன் உடன் மாய்ந்த பெண் டிர் புதைக்கப்பட்ட இடத்திற் கோட்டம் கட்டும் வழக் கம் பண்டைக்காலத்தில் இருந்தது. இன்னர் இன்ன இடத்திலே புதைக்கப் பட்டுளார் என்பதையும் அக் கோட்டங்கள் அறிவித்தன. இச்செய்தியைப் பின்வரும் மணிமேகலை பாடல் அறிவிக்கும்:
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணத்துப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலக் கோட்டம்.'
இந்தகட்டுரை ஒரு விவாதப்பொருளுக்காக எழுதியதல்ல! .வரலாற்றில் இடம்பெற்ற சில செய்திகளையும் , தமிழர் பண்பாட்டில் நிலைபெற்றிருந்த வழக்கங்களைப் பற்றிய இலக்கிய குறிப்புகளை நினைவூட்டலுக்கு மட்டுமே .
அண்ணாமலை சுகுமாரன்
18/10/18 Repost18/10/2024
படங்கள் இணையத்தில் இருந்து பெற்றவை நன்றி !





No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...