Thursday, October 15, 2020

இஸ்ரேலின் பிற்கால அரை சேக்கல் நாணயமும், ப்ரதர்.வெங்கடேசன் பொய், மோசடிகளும்

 இஸ்ரேல் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட அரை சேக்கல் நாணயம்- இது பொஆ முதல் நூற்றாண்டில் எழுந்த யூதர் – ரோமன் போருக்குப் பின்பாக எழுந்த யூதத் தூய்மை என்ற அடிப்படையில் ரோமன் காசுகள், யூத ஜெருசலேம் ஆலயத்தினும் பயன்படுத்தலைத் தவிர்க்க 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. இது யூதர்கள் வழிபடும் கர்த்தர் எனும் தெய்வம் யூதர்களுக்கு மட்டுமே, என்பது யூதரின் இனவெறியையும் உறுதி செய்யும்.

இஸ்ரேல் தொல்லியல் துறை இயக்குனர் நூல் மிகத் தெளிவாக பழைய ஏற்பாடு தொன்மக் கதைகளை முழுவதும் மனிதக் கற்பனை, பைபிள் கதை சம்பவங்கள்படியாக யூதேயா, இஸ்ரேல் என பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் இருந்ததே இல்லை எனத் தெளிவாக சொல்கிறது.

ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் எனும் பாதிரி, கிறிஸ்துவர் என்றாலே பொய் பித்தலாட்டம் செய்பவர் என்பதை அப்பட்டமாக நிருபிக்க போட்ட பதிவு

                                      

நண்பர் ப்ரதர் வெங்கடேசன் எனும் மை கோயம்புத்தூர் 20 வருடம் முன்பு இந்திய சர்ச் விடும் கதையான தோமா வருகை கப்சா என்பதை விவாதிக்கையில் ஆதாரம் கொடுத்தபின் ஏற்றது 


சுவிசேஷக் கதை ஏசுவின் காலத்திற்கு பின்பு – ரோமன் சீசர் காசை ஜெருசலேம் யூதர் தெய்வ ஆலயம் உள்ளே  – ரோமன் காசை பயன்படுத்தலை தடுக்க உற்பத்தி செய்யப்பட்டவை 



 ப்ரதர்.வெங்கடேசன் பைபிள் கதையின் ஜெருசலேமைப் பற்றி இந்தக் காசை வைத்து கப்சா விடுவதால் அவருக்கு கேள்வி யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?

 யூதாஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள்வென்றது யோசுவா

யோசுவா 10 : எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம்...யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர்.                       

இவர் காலத்திற்கு 200 வருடம் பின்பு கானானியர்கள் ஆள இப்போது தான் வென்றனர். ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள்வென்றது   யூதா கோத்திர மனிதர்கள்.  

நியாயாதிபதிகள் 1 :8யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். 

[ix] இல்லை மேலும் 200 வருடம் பின்பு ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா 

2 சாமுவேல் 5:4 தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

கிறிஸ்துவம் என்றாலே பொய்யர்கள் என்பதை அப்பட்டமாக நிருபிக்கும் சகோ.வெங்கடேஷ் கடவுளை நம்பாமல், வழி தவறி அன்னிய சர்ச் அடிமையாகி எவ்வளவு கீழ்த்தரமாய் இறங்கினார் எனக் காட்டியமைக்கு நன்றி. ஏசு கதை காசிலும் இதே பிரச்சனை தான்.


 






No comments:

Post a Comment