Thursday, October 15, 2020

சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே செயல்பட்டார்

 புதிய ஏற்பாடு தொன்மத்தில் ஏசுவின் கதை கூறும் சுவிசேஷக் கதைகளில் சீடரை அனுப்புகையில் ஏசு சொன்னதாக உள்ளது.

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 – 13; லூக் 9:1 – 6)                                      மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 

ஏசு சீடரோடு இயங்கியபோது யூதரல்லாத ஒரு கிரேக்க பெண்ணிடம் ஏசு நடந்து கொண்ட இனவெறி கதை   

மத்தேயுசுவிசேஷக் கதையில் 

மாற்கு எழுதிய சுவிசேஷக் கதையத் தழுவியே மத்தேயுவும், லூக்காவும் தங்கள் சுவிசேஷத்தை வரைந்துள்ளமையால் இவை ஒத்த கதையமைப்பு (Synoptic Gospels) சுவிசேஷம் எனப்படும், ஆனால் லூக்கா சுவிசேஷக் கதாசிரியர் இந்தக் கதை எழுதவே இல்லை – ஏன் என ஒரு பைபிளியல் அறிஞர் நூல் அழகாய் விளக்குகிறது

ஏசு எல்லா யூதர்களையும் சமமாக பார்த்தாரா – அதையும் பார்ப்போம், யோவான் சுவியில் உள்ள கதையில்சமாரியர் எனப் படுபவரும் யூதர்களே, பழைய ஏற்பாடு கதைகளில் உள்ள மானசே & எபிராயிம் கோத்திரத்தினர், ஆனால் பொமு 110 போதான போரில் அரசியல் பிரிவால் பிரிந்தவர்கள், சமாரியர் யாவே கர்த்தர் கோவில் கெர்சிம் மலையில் உள்ளதே யூதர்களின் தொன்மையான ஆலயமும் ஆகும், இந்த போருக்கு பின் தான் எபிரேய நியாப் பிரமாணங்களில் ஜெருசலேம் ஆலயம் மட்டுமே எனும்படி மாற்றப்பட்டது என்பதை சாக்கடல் சுருள்கள் உறுதி செய்துள்ளன

ஏசுவின் போதனைகளை நாம் பார்த்தால்

மத்தேயு 5:19 ,“ஒருவன் மோசேயின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

மத்தேயு 23:2 2 ,“பைபிளிய யூதப் பாதிரியும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.


சுவிசேஷக் கதை நாயகர் ஏசு யூதர் அல்லாத கிரேக பெண்ணிடம் மட்டுமின்றி தன் யூத சகோதர்களையே இழிவாய் அருவருப்பாய் பேசுவதை காண்கிறோம். 

நாம் இவற்றை சுட்டிக் காட்டினால் உடனே லூக்கா கதையில் உள்ள நல்ல சமாரியன் கதை காட்டுவர் மழுப்பலாளர், இதைப் பற்றி பைபிளியலாளர் நூலில் கூறுவது


சுவிசேஷக் கதை முழுவதையும் ஆராய்ந்த ஏசு – கதை முழுவதும் யூதர்கள் உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இயங்கினார் என மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல் நூலில் காட்டுகிறார் 

ஏசுவின் பரலோக ராஜ்ஜியம் யூதர்களுக்கு மட்டுமே 

மத்தேயு 19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின்   பன்னிரெண்டு   ஜாதியினருக்கும்  (இனங்களுக்கும்) நீதி செய்வீர்கள்.

ஏசு கதைப்படி செத்தபின் அதே உடம்பில் உயிரோடு வந்து காட்சி தந்தார் எனக் கதை, அதே வழியில் உலக முடிவில் பரலோகம் பற்றிய காட்சி கதைகள் என வெளிப்பாடுகள் நூலில் 
வெளி 7:4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் ஜாதிகளிலிருந்து (இனத்திலிருந்து) அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.
வெளி14:1 சீயோன் மலைமீது நின்று கொண்டிருந்த   ஆட்டுக்குட்டியானவர் முன்பாக ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள்(ஒவ்வொரு யூத ஜாதி 12லிருந்து 12000பெண்களோடு உடலுறவு கொண்டு  தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள்.

சுவிசேஷக் கதை ஏசுவின் பரலோகத்தில் யூத ஜாதி 12ல் இருந்து பெண்ணை தொடாத 1,44,000 ஆண்களுக்கு மட்டுமே

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...