Wednesday, November 26, 2025

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல் - துபாய்க்கு தப்பியோடிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

Siva

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (14:56 IST)
இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஒன்றின் முக்கிய குற்றவாளி என கருதப்படும் பவன் தாக்கூர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
 
நவம்பர் 2024 இல் டெல்லியில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 2,500 கோடி மதிப்பிலான 82 கிலோ கொகைன் மற்றும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 282 கோடி மெத் போதைப்பொருள் கடத்தலுக்கு இவரே மூளையாக செயல்பட்டுள்ளார்.
 
நீண்டகாலமாக ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்ட தாக்கூர், சட்டவிரோத வருமானத்தை மறைக்க, பல நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் பணமோசடி செய்துள்ளார்.
 
போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் இவர் மீது சர்வதேச 'சில்வர் நோட்டீஸ்' வெளியிட்டது. அமலாக்கத்துறை இவரது 118 போலி வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.
 
கடந்த ஆண்டு போதைப்பொருள் பிடிபட்டதும் துபாய்க்கு தப்பி சென்ற தாக்கூர், அங்கிருந்தபடி தனது நெட்வொர்க்கை இயக்கினார். இந்த நிலையில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் Bunker காணொளி. 4–5 அடி தடி சுவர்களைக் கொண்ட ஒரு பெரிய நிலத்தடி அமைப்பு

  அல்-ஃபலா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 4–5 அடி தடிமனான சுவர்களைக் கொண்ட ஒரு பெரிய நிலத்தடி அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் இது ...