தமிழக அரசின் புதிய சன்னி முஹம்மதிய மத தலைமை காஜி உஸ்மான் முகயித்தின் நியமனம்
சென்னை: தமிழக அரசின் தலைமை காஜியாக (சன்னி பிரிவு) என்.பி.உஸ்மான் முகயித்தின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக அரசால் காஜி சட்டம் பிரிவு–2-ன்கீழ் சென்னை மாவட்ட காஜியாக (சன்னி பிரிவு) என்.பி. உஸ்மான் முகயித்தின் கடந்த அக்.17 முதல் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட காஜியாக நியமிக்கப்படுபவர், தமிழக அரசின் தலைமை காஜியாக கருதப்படுகிறார். தற்போது தலைமை காஜியாக நியமி்க்கப்பட்டுள்ள என்.பி.உஸ்மான் முகயித்தின், வேலூர் ஜாமியா அல்-பாகியாத் ஸாலிஹாத் மதரஸாவின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமை காஜி விவகாரம் | உஸ்மான் முகயித்தின் -யார் இவர்? ஏன் எதிர்ப்பு?
https://www.youtube.com/watch?v=Q_tEr7MXfm4


No comments:
Post a Comment