Saturday, November 29, 2025

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி அருகே 3 ராணுவ தளங்கள்

 படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இந்த இடம் தான் Chicken neck எனப்படுகிறது...

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் ஒரே வழி...
இதை துண்டித்துவிட்டால் இந்தியா இரண்டாகி விடும்..எனவே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது...
சில மாதங்களுக்கு முன் வங்கதேச இடைக்கால தலைவர் யூனஸ் இந்த இடத்தை குறிவைத்து பேசினார்..
CAA போராட்டத்தின் போது தேசவிரோதமாக பேசிய ஷர்ஜீல் இமாம் சிறையில் இருக்கிறார்...
அவருடைய ஜாமீன் மனு சென்றவாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்த நபர் பேசிய 8 நிமிட வீடியோ பேச்சை நீதிபதிகளுக்கு இணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ போட்டுகாட்டிஉள்ளார்..
அதில் இந்த மேப்பில் உள்ள Chicken neck பகுதியில், முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதால் இதை இஸ்லாமிய இளைஞர்கள் கைப்பற்றி அசாமையும் வடகிழக்கையும் இந்தியாவில் இருந்து துண்டிக்க வேண்டும் என பேசி உள்ளார்...
இதைப்போல பல ஆவேச வெறிஉரைகள் ...அவ்வளவும் தேசவிரோத பேச்சுகள்.....
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை மத்திய அரசு விழிப்போடு கண்காணிக்கிறது...

சிலிகுரி அருகே 3 ராணுவ தளங்களுக்கான பணிகள்  ஆரம்பம்!: வங்கதேசம், சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா




மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிலிகுரி. சிறிய வழித்தடமாக இருந்தாலும், இது நாட்டின் மிக முக்கியமான பகுதி. இப்பகுதியை, 'கோழியின் கழுத்து' என்று அழைப்பர்.

வரைபடத்தில் பார்க்கும்போது, கோழியின் கழுத்து போன்று இருப்பதால், இவ்வாறு அழைக்கப்படுகிறது. சிலிகுரியில் உள்ள இந்த 22 கி.மீ., நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது.

அச்சுறுத்தல் இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவுடன் நெருக்கம் காட்டும் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, சிலிகுரிக்கு அருகே சில மாதங்களுக்கு முன் இரண்டாம் உலகப் போரின் போது கைவிட்ட விமான தளத்தை சீரமைத்தது. இது, இப்பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.


இந்நிலையில், நம் ராணுவம் சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இவை, மேற்கு வங்கத்தின் சோப்ரா, பீஹாரின் கிஷன்கஞ்ச், அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமைகின்றன.

இந்த ராணுவ தளங்கள் வெறும் முகாம்களாக மட்டும் இருக்காது; போருக்கான உத்திகளை வகுக்கும் முழு கட்டுப்பாடு மையங்களாக இருக்கும். படைகளை விரைவாக குவிக்கவும், உளவுப் பணிகளுக்கு பயன்படும் வகையிலும் உருவாக்கப்படுகின்றன.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: எந்த சூழலிலும் சிலிகுரி கழுத்துப் பகுதி எதிரிகளால் துண்டிக்கப்படாதவாறு, பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் நம் ராணுவம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.


வங்கதேச இடைக்கால அரசு, சீனா - பாகிஸ்தான் நாடுகளுக்கு நெருக்கமாகி வருகிறது. சீனாவிடம் இருந்து, 'ஜே -- 10 சி' போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முயற்சிக்கிறது.

எச்சரிக்கை மணி ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் உற்பத்தியிலும் சீனாவுடன் அந்நாடு இணைந்து செயல்படுகிறது. மேலும், நம் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், 'ஜெ.எப்., 17' போர் விமானம் வழங்கி வங்கதேசத்துக்கு உதவியுள்ளது.

இது போன்ற நடவடிக்கை, நம் நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் எச்சரிக்கை மணியாக அமைந்தது.

இதன் காரணமாகவே, தற்போது சிலிகுரியை சுற்றி மூன்று ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் நம் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தின் சோப்ராவில் அமைய உள்ள ராணுவ தளம், வங்கதேச எல்லையிலிருந்து 1 கி.மீ.,க்கும் குறைவான துாரத்தில் உள்ளது.

இதன் மூலம் அந்த நாட்டை கண்காணிக்கவும், போர் சூழலில் பதில் நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் முடியும்.

ரபேல் போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு கவசங்களை இந்தப் பகுதியில் குவிக்க முடியும்.

இதனால், பலவீனமாகக் கருதப்பட்ட சிலிகுரி கழுத்துப்பகுதி இனி வலுவானதாக மாறும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.




No comments:

Post a Comment

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ரஷ்யா, சீனா என பல நாடுகளில் மசூதிகள் இடித்து ஆக்கிரமித்தவை சில

ரஷ்யாவின் Derbent பகுதியில் இருந்த மிகப் பழமையான Juma மசூதி சோவியத் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ...