மத கலவரத்தை தூண்டியதாக எம்எம்லஏ.,வின் பதவி பறிப்பு!
https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-mla-km-shaji-has-been-disqualified-for-six-years-over-communal-pamphlets/articleshow/66560662.cms
கேரளா மாநிலம் வடக்கு கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அழிக்கோடு தொகுதி எம்எல்ஏ ஷாஜி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மத கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஷாஜியை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் நிகேஷ் குமார் இந்த வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஷாஜி மத ரீதியிலான பிரசச்சாரங்களில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சரம் செய்ததாக இருந்த ஆதாரங்களை உறுதிசெய்தனர். மேலும், தேர்தலில் ஷாஜி வெற்றி பெற்றது செல்லாது என்றும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை என்றும் உத்தரவிட்டனர். காலியான அழிக்கோடு தொகுதியில் மறுதேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

No comments:
Post a Comment