Saturday, November 29, 2025

Telegram போன்ற ஆப்கள் – இனி ஆக்டிவ் SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு

Telegram போன்ற ஆப்கள் – இனி ஆக்டிவ் SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு
இந்த ஆப்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களின் மொபைலில் SIM கார்டு இருக்க வேண்டியது கட்டாயம். SIM இல்லாமல் ஆப்கள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
சில ஆப்களில், பயனர் முதல் முறையிலே OTP மூலம் லாகின் செய்துவிட்டால், பிறகு SIM கார்டை அகற்றினாலும், மாற்றினாலும், ஆப்கள் தொடர்ந்து வேலை செய்கின்றன. இதை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
SIM கார்டு இந்தியாவில் இல்லாவிட்டாலும், SIM கார்டு முடக்கப்பட்டாலும், அல்லது வேறு இடத்தில் இருந்தாலும், ஆப் இயங்குவதால், குற்றவாளிகள் தங்கள் இருப்பிடத்தை மறைத்து மோசடி செய்ய வாய்ப்பிருப்பப்பதாகக் கருதும் அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தற்போது விழித்துக்கொண்டுள்ளது.
அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், 120 நாளில் DoT-க்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது



 

No comments:

Post a Comment

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ரஷ்யா, சீனா என பல நாடுகளில் மசூதிகள் இடித்து ஆக்கிரமித்தவை சில

ரஷ்யாவின் Derbent பகுதியில் இருந்த மிகப் பழமையான Juma மசூதி சோவியத் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ...