Tuesday, November 18, 2025

வாக்காளர் சீர்திருத்தம் SIR - பங்களாதேஷ் மக்கள் தானாக வெளியேற்றம். ஆயிரக்கணக்கில் ஆதார்கள் குப்பை தொட்டியில் வீடியோ

எஸ்ஐஆர் பணியால் வந்த மாற்றம்; வங்கதேசத்துக்கு திரும்பி செல்லும் ஊடுருவல்காரர்கள் நமது சிறப்பு நிருபர் UPDATED : நவ 19, 2025

 

புதுடில்லி: மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வங்கதேச எல்லையில் கூட்டம் கூட்டமாக ஊடுருவல்காரர்கள் திரும்பி செல்வதை கண்டு பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கமே, ஒருவரே பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுப்பதோடு, உண்மையான வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணியாகும்.

பீஹாரைத் தொடர்ந்து தற்போது கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்கள், கோவா., புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற எஸ்ஐஆர் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று அசாமிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக எஸ்ஐஆர் கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து குடும்பம், குடும்பமாக அவர்கள் உடமைகளுடன், சொந்த நாட்டுக்கு புறப்படும் காட்சிகளை பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

இன்று எஸ்ஐஆர் பற்றி, விவாத மேடை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

இதில் பேசிய ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, எஸ்ஐஆர் நடவடிக்கையால் மக்களின் ஓட்டுரிமை காக்கப்படுகிறது என்பதை கள ஆய்வில் கண்டறிந்ததாக கூறினார்.


 


 

No comments:

Post a Comment

ஈவெரா- மணியம்மாள் திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

  ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம் ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்!-எழுதியவர்: கி.ஆ.பெ. விசுவநாதம் பதிவு: கதிர்நிலவன் தமிழன்      h...