Monday, December 1, 2025

உலக ஆயுத வர்த்தகம் ரூ.60.43 லட்சம் கோடி எட்டியது- அமெரிக்கா ஆதிக்கம்

உலகளவில் ஆயுத விற்பனை ரூ.60.43 லட்சம் கோடி எட்டியது: ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா நமது நிருபர் ADDED : டிச 02, 2025 

https://www.dinamalar.com/news/world-tamil-news/global-arms-sales-reach-rs-6043-lakh-crore-us-dominates/4097158

ஸ்டாக்ஹோம்: உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடான ஸ்வீடனை தலைமையிடமாக வைத்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்த மையம் சர்வதேச ஆயுத விற்பனை தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. 

இதன் ஆய்வறிக்கையை அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்: 

கடந்த, 2024-ம் ஆண்டில் உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வரலாற்றிலேயே அதிகபட்ச வருமானத்தைப் பதிவு செய்துள்ளன.

உலகின் முதல், 100 ராணுவ நிறுவனங்கள், மொத்தம், 679 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டி யுள்ளன.

கிழக்காசிய நாடான உக்ரைன் - ரஷ்யா, மேற்காசிய நாடான இஸ்ரேல் - காசா இடையே நீடிக்கும் போர்களால், ஆயுத தேவை பெருகியதே இந்த உயர்வுக்கு காரணம்.

இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட, 6 சதவீதமும், 2015ம் ஆண்டைவிட, 26 சதவீதமும் அதிகம். பல்வேறு நாடுகளின் ஆயுத தேவையைப் பயன்படுத்தி, ஆயுத விற்பனை நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன. ஆயுதங்களின் தேவை, ஆசியா - ஓசியானியா பகுதியை விட, ஐரோப்பாவில் அதிகரித்து காணப்பட்டன.

இதற்கு உக்ரைன் போர் காரணமாக கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தலாக பார்ப்பதாலும் அவற்றின் ஆயுத தேவை அதிகரித்துள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக அமெரிக்கா தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன்படி, ஆயுத விற்பனையிலும் அந்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதல், 100 இடங்களில், 39 நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இதன் வாயிலாக, 29.72 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன.

இதேபோல் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும், ஆயுத விற்பனையில் கடந்த ஆண்டு, 23 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆசிய - பசிபிக் பகுதியில் சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆயுத கொள்முதல் வெகுவாக குறைந்தன.

எனினும், ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சியை பெற்றுள்ளது. மேற்காசியாவில் இஸ்ரேல் நிறுவனங்களின் கையே ஓங்கியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இலங்கை, இந்தோனேஷியா & தாய்லாந்து -டிட்வா புயலில் 1,140க்கும் மேற்பட்டோர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடுகளை கபளீகரம் செய்த புயல்; இதுவரை  1,140க்கும் மேற்பட்டோர் பலி  நமது நிருபர் டிச 02, 2025 கொழும்பு:   இலங்கை, இந்தோனேஷிய...