சீனாவிடம் நாம இழந்தது செமிகண்டக்டர் உற்பத்தி துறையை அடுத்து கப்பல் கட்டும் உற்பத்தி தொழிலை.
எப்படி செமிகண்டக்டர் உற்பத்தியில் நமது அரசும் தனியார் நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகிறதோ அது போன்றே கப்பல் கட்டும் தொழிலும் கவனம் பெற்று வருகிறது.
இந்தியாவின் அடுத்த உற்பத்தி மெகா கருப்பொருளாக கப்பல் கட்டுமானம் மாறி வருகிறது என்பது ஒரு மகிழ்ச்சிக்குறிய செய்தி.
ரூ. 69,725 கோடி முதலீட்டிற்கு அதாவது கப்பல் கட்டும் தொழிலை மீட்டெடுப்பதற்கான முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ. 44,700 கோடி புதிய மேம்பாட்டுத் திட்டங்களும் அதில் அடங்கும்..
உலகளவில் கப்பல் கட்டும் தொழிலில் உள்ள தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் $2 பில்லியன் முதலீடுகளுடன் இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலில் நுழைகின்றன.
சரி... சீனாதானே உலகின் கப்பல் கட்டும் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நாடு... அதுவுமில்லாமல் உலகளாவிய கப்பல் கட்டும் தொழிலின் சுமார் 65% சீனாவோடது. அப்ப ஏன் இந்தியாவை இந்த உலகளாவிய நிறுவனங்கள் கப்பல் கட்டும் தொழிலில் முதலீடு செய்வதற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான விடை...
சீனாவின் கப்பல் கட்டும் தளங்கள் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகையால் தற்போது உலகளாவிய நிறுவனங்கள் கப்பல் கட்டும் தொழிலுக்கு புதிய நாடுகளை தேட ஆரம்பித்து விட்டது. அதுவுமில்லாமல் கப்பல் போக்குவரத்தும் உலகளவில் அதிகமாக வருவது ஒரு அருமையான தரவு.
உலக கப்பல் போக்குவரத்தில் சொந்தமாக கப்பலின் எண்ணிக்கையில் இந்தியா எங்கயிருக்குன்னு பார்த்தா வெறும் 2% மட்டுமே சொந்தமாக வைத்திருக்கிறது.
இந்த இடைவெளிதான் இந்தியாவிற்கு கப்பல் கட்டும் தொழிலில் அற்புதமானதொரு வாய்ப்பு.
இதனால் பொருளாதாரத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் என்ன பலன் இருக்குன்னு பார்த்தோமானால்...
ஒரு நேரடி கப்பல் கட்டும் வேலை கூடுதலாக 6 வேலைகளை உருவாக்குகிறது.
துணைத் தொழில்கள் 60% முதல் 65% மதிப்பு கூட்டலைப் பெறுகின்றன.
உலகளாவிய கப்பல் கட்டுமானம் 200 பில்லியன் டாலர் சந்தையாகும்.
இந்த துறையில் இந்தியாவை அடுத்த உலகளாவிய மையமாக நிலைநிறுத்த மத்திய அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது.
இதன் மூலம் ஒரு புதிய தொழில்துறை சுழற்சி தொடங்குகிறது.
செமி கண்டக்டர் துறையில் முன்னதாக சீனாவிடம் நாம் கோட்டை விட்டாலும் சமீப காலத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் துறையின் வலுவான ஆதரவால் வேகமெடுக்க ஆரம்பித்தது போல இந்த துறையும் வேகமெடுக்கும் என்பது எனது கணிப்பு.
எப்படி சீனா அசுர பாய்ச்சலில் உலகின் உற்பத்தி துறையில் கோலாச்சுகிறதோ அவ்வாறே இந்தியாவும் வெகு வேகமாக உற்பத்தி துறையில் முன்னேறி வருகிறது.
இதில் நமது பொறியியல் மாணவர்களுக்கான தரவு...
இனி வரும் காலங்களில் இந்தியாவில் உற்பத்தி துறை கோலாச்சப் போகிறது. ஏகப்பட்ட வேலைகள் கண்டிப்பாக உண்டாகும். அதுவும் மத்திய மற்றும் உயர் பதவிகளில் உற்பத்தி துறையில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கப் போகிறது. ஐ.டி துறையை விடுத்து உற்பத்தி துறை பக்கம் தங்களது கவனத்தை செலுத்துவது நமது பொறியியல் மாணவர்களுக்கு தேவையான ஒன்று.
இதை காப்பி பேஸ்ட்டோ இல்லை பதிவை பகிருங்கள் நண்பர்களே... தமது பொறியியல் மாணவர்களுக்கு வெளிச்சம் கிட்டட்டும்

No comments:
Post a Comment