Thursday, December 30, 2021

இலங்கையில் துக்ளக்

துக்ளக் இதயாவின் சாணக்கியா பேட்டி: விடுதலை புலிகளை ஏன் எதிர்த்தார் ”சோ” .
** "பிடிபட்ட தமிழ் புலிகளை அம்மணமாக்கியது ஏன்?" **
இந்த 22 நிமிட காணொளியில், துக்ளக் இதயாவிடம், "துக்ளக்கில் மிக முக்கியமான விஷயமாக நீங்கள் கருதுவது...?" என்ற கேள்விக்கு அவரது பதிலில்.... @ https://youtu.be/C3UMxej7bgc?t=614 .
"2014இல் இலங்கை சென்று வந்து நான் துக்ளக்கில் எழுதிய கட்டுரை" என்கிறார். அந்த பயணத்தின் போது, இலங்கையில் இருந்த முன்னாள் புலிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பேட்டி கண்டிருக்கிறார். "அந்த கட்டுரை, தமிழகத்தில் வைகோ, திராவிட இயக்கங்கள், நாம் தமிழர் போன்ற கட்சிகள் புலிகள் பற்றி கட்டியிருந்த போலி பிம்பங்களை உடைத்தது. அந்தக் கட்டுரைக்கு இவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. அத்தனையும் அங்கிருந்த தமிழர்கள் தந்த பேட்டி. அங்கிருப்பவர்கள் தமிழீழம் வேண்டாமென்கிறார்கள். இவர்களோ தமிழீழம் வாங்கு என்கிறார்கள்."

அதோடு... @ https://youtu.be/C3UMxej7bgc?t=788 "பிடிபட்ட தமிழ் புலிகளை அம்மணமாக்கிவிடுவார்கள் என்று இவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதற்கு அங்கிருந்த இலங்கை அதிகாரி பேட்டி கொடுத்த போது சொன்னார், 'பொது மக்களை (இலங்கை தமிழர்களை) தங்கள் கவசமாக புலிகள் பிடித்து வைத்திருப்பார்கள். அங்கே தாக்குதல் நடத்த போகும் நாங்கள் அவர்களை சரணடைய சொல்வோம். அதைக் கேட்டு பல தமிழர்களும் சரணடைவார்கள். அப்படி வரும்போது, அவர்களோடு புலிகளும் வந்து, இடுப்பில் வைத்திருக்கும் பெல்ட் பாம்-ஐ வெடிக்க செய்து அத்தனை பேரையும் கொல்லுவார்கள். இறந்தவர்களில் பலரும் சரணடைய வந்த தமிழர்கள். ஒரு சில இலங்கை இராணுவத்தினரும் உயிரிழப்பார்கள். தமிழர்கள் தங்களை விட்டு போகக் கூடாதென்று கொன்ற இயக்கம் தான் அந்த புலிகள் இயக்கம். அப்படி பல முறை சம்பவம் நடந்த பிறகு, வருபவர்கள் புலிகளா இல்லையா என்று தெரிந்து கொள்ள, அவர்கள் குண்டுகள் மறைத்து வைத்திருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலை வந்தது. அதனால், அவர்கள் குண்டு ஏதும் கொண்டு வரவில்லை என்பதை உறுதி செய்ய உடைகளை களையச் சொல்லி உறுதி செய்த பிறகே அவர்கள் சரணை ஏற்றுக் கொண்டோம்.' என்று விளக்கம் சொன்னார். அதைக் கேட்ட பிறகு தான் அவர்கள் கோணம் பிடிபட்டது எனக்கு. 'அவர்கள் அப்படி வந்த பிறகு அவர்கள் நாங்கள் துணி கொடுத்து சரண் முகாம்களில் வைத்தோம்.' என்று விளக்கினார். இந்த மாதிரி வெளியே தெரியாத விஷயங்களை அங்கே போய் பேட்டி கண்டேன். அந்தக் கட்டுரையை சோ சாரே சிறந்த கட்டுரையாக கருதினார். அதை நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்".

 

No comments:

Post a Comment