Thursday, December 16, 2021

திருக்குறள் மேன்மையை உணர்த்த நூல் வெளியிட்ட அறிஞர் கண்ணுதல் ஜிஹாதிகளால் கொல்லப்பட்ட நினைவு நாள்

திமுகவில் செயல்பட்டு வந்தாலும் ஹிந்து ஒற்றுமைக்காகவும், ஹிந்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் இந்து சங்கம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி நடத்திவந்தார் கண்ணுதல் என்பவர்.  பின்னர் அதே காரணத்திற்காக கொலையும் செய்யப்பட்டார்.

 

 https://rationalisterrorism.wordpress.com/2010/02/11/tirukkural-muslims-oppose-christians-defame-but-tamils-keep-quite/

குரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது? குறளா? குரானா?” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துது.

கண்ணுதல் என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 

குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர் (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால் (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

“பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதி, அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல் என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை . 

கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். 


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சர தேவர் -- பார்வதி அம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர்தான் கண்ணுதல். 06.08.1945ம் ஆண்டு பிறந்தார்.
மயிலாப்பூர் பஜார் வீதியில் அப்பா நடத்தி வந்த பட்டாணி கடையை மகன் கண்ணுதல் தொடர்ந்து நடத்தி வந்தார்.
சராசரி உயரத்தை விட சற்று குட்டையான, ஒல்லியான உடல்வாகு கொண்டவர். ஆனால் நெஞ்சுரம், தெளிந்த சிந்தனை, நினைத்ததை செயலப்படுத்தும் போர் குணம் கொண்டவர் கண்ணுதல்.
கண்ணுதலுடன் பிறந்தவர்கள் திருவேங்கடம், கருப்பு என்கிற சுப்ரமணியன், குட்டி என்கிற , கடைசி தம்பி சினிமா இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். இவரின் இயற்பெயர் பழனி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காலமானார். இரண்டு சகோதரிகளில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் அறிமுக படுத்தப்பட்டது. முதன் முதலில் 04.11.1968ல் நடந்த குலுக்கலில் ரூபாய் ஒரு லட்சம் பரிசு கண்ணுதலுக்கு கிடைத்தது.
காந்திமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தன் ஊர்காரரான T R பாலு சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தாலும்கூட அதை வைத்து எந்த முக்கியத்துவத்தையும் தேடிக் கொள்ளவில்லை கண்ணுதல். ஆனால் திமுகவில் தீவிரமாக இயங்கி வந்தார்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மசூதியானது சில இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டது. இதனை கண்ணுதல் மிகக்கடுமையாக எதிர்த்தார். அந்தச் சமயத்தில் கீத்து கொட்டாயில்தான் மசூதி இயங்கி வந்தது. முஸ்லிம்களும் மூர்க்கத்தனமாக கண்ணுதலை எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் மசூதிக்கு நேர் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். அப்போது இந்து முன்னணியின் மாநில பொது செயலாளராக இருந்த சு. சிதம்பரம் இந்த உண்ணா விரதத்தில் கலந்துகொண்டு இந்து முன்னணியின் முழு ஆதரவைத் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக பல ஊர்களில் இஸ்லாமிய கும்பலின் பின்னணியில் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?என்ற பட்டிமன்றம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதை இந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்தது. இந்து சங்கம் சார்பில் கண்ணுதலும் எதிர்த்தார். இதே காலகட்டத்தில் குரானை உயர்த்தி மற்ற புத்தகங்களை தாழ்த்தி பேசியும், எழுதியும் வந்தனர்.

இதைப் பார்த்து கோபம் கொண்ட கண்ணுதல், 'உலக பொதுமறை குரானா? குறளா?' என்று சென்னை முழுவதும் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இதையே புத்தகமாகவும் அச்சடித்து வினியோகித்தார்.
இதனால் வழக்கம் போல செயல்பட்ட காட்டுமிராண்டி, அடிப்படைவாத கும்பல், 15.12.1991ம் ஆண்டு இரவு எட்டு மணியளவில் கச்சேரி சாலையில் துடி துடிக்க வெட்டிக் கொன்றது. அடுத்த நாள் அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. அதையொட்டி மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கண்ணுதலின் படுகொலையைக் கண்டித்து மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாங்கள் அனைவரும் கலந்து கொண்டோம்.
இந்து முன்னணியின் மாநில பொது செயலாளராக இருந்த சு.சிதம்பரம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 'மயிலாப்பூர் இளைஞர் இயக்கம்' என்ற பெயரில் உண்ணாவிரதமும் இதர போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
சு.சிதம்பரம் மற்றும் இந்து முன்னணியுடன் இணைந்து போராட்டங்கள் மற்றும் கண்ணுதல் குடும்பத்திற்கு நிதி திரட்டுதல் ஆகியவற்றை முன்னெடுத்து அப்போதைய அண்ணா நகர் தொகுதி பாஜக துணை தலைவராக இருந்தவர். வழக்கறிஞராகவும் தொழில் செய்தார். தற்போது சமுதாயத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளார். தன்னலம் கருதாமல், இந்து சமுதாய நலனை முன்னிறுத்தி அண்ணா நகர் தொகுதி துணை தலைவர் செய்த வேலை மறக்க முடியாதது.
வெட்டி படுகொலை செய்யப்படும் வரை கண்ணுதலுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் மற்றொரு ஸ்வயம் சேவகர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, V. P. சிங் என்று மூன்று பிரதமர்களை மிகக்கடுமையாக எதிர்த்தவர், கண்ணுதலை மிகத் தீவிரமாக ஆதரித்தார்.
படுகொலை செய்யப்பட்ட கண்ணுதலுக்கு முருகன் என்று ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். மகன் வட நாட்டில் வேலை பார்க்கிறார். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. கண்ணுதலின் பங்காளி (சித்தப்பா மகன்) தான் பாஜகவின் கலை அணி மாநில செயலாளரும், திரைப்பட நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக்கின் மிக நெருங்கிய நண்பரும், திரைப்பட தயாரிப்பாளரும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவரும், திரைப்படங்களில், நான் கடவுள் சினிமா உட்பட தற்போது வரை மிகவும் சிறப்பாக நடித்து வருபவருமான என் அன்பு அண்ணன் அழகன் தமிழ்மணி.
இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கண்ணுதலின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள்.
ஹிந்து என்று யார் சொல்லிக் கொண்டு சமுதாய வேலை செய்தாலும், அவர்கள் என்ன கட்சி என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜிஹாதிகள் கொலை செய்வார்கள் என்பதற்கு உதாரணம் கண்ணுதலின் கொலை.
அவர் நினைவைப் போற்றுவோம்.
Thanks -https://www.facebook.com/story.php?story_fbid=10158425195831709&id=567016708&m_entstream_source=feed_mobile&refid=28&_ft_=qid.-7233383806551329554%3Amf_story_key.-4675328475657654913%3Atop_level_post_id.10158425195831709%3Acontent_owner_id_new.567016708%3Asrc.22%3Aphoto_attachments_list.[10158425195601709%2C10158425195651709%2C10158425195711709%2C10158425195776709]%3Aphoto_id.10158425195601709%3Astory_location.5%3Astory_attachment_style.album%3Aview_time.1639570876%3Afilter.h_nor

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...