Sunday, December 19, 2021

ஆன்மா -உயிர் நிலையானது -மீண்டும் மீண்டும் பிறப்பதால் அது ஆன்மா

இந்த உலகில் பிறந்த மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையான உயிரைப் பெற்று இருக்கிறான். இந்த உயிரிற்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பு என்பது கூட்டிற்கும் பறவைக்கும் உள்ள தொடர்பே, அது வேறு கூட்டில் எப்போதும் போய் வாழ இயலும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   அன்புடைமை.  குறள் 80:
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவை, மனிதன் தன் ஊண் உடம்பிற்காக இன்னொரு உயிரைக் கொல்வது பாவம் என்பதை
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.                    புலான்மறுத்தல் :251
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?

உயிர் நிலையானது, எனவே அது ஆன்மா- மன்னுயிர்,  மாயா உயிர் என்பார் வள்ளுவர். 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.  கடவுள் வாழ்த்து. குறள் 10:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவி பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

உயிர் நிலையானது; மீண்டும் மீண்டும் பிறக்கும்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.            குறள் 339: நிலையாமை
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. உயிர் நிலையானது; மீண்டும் மீண்டும் பிறக்கும்.

உலகின் அனைத்து உயிர்களுக்கும் பெரிய அளவில் அறிவு உண்டு, மனிதனுக்கு மட்டும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.
//Remember, this is only the current outcomes of these brain battles – research is continuously being conducted which unveils ever more about the complex behaviours of other animals. Who knows, in the future, in discovering more about our animal neighbours, we may learn that our brains are not so special or superior after all.//
https://www.sciencefocus.com/nature/animal-brains-v-human-brains-let-the-battle-of-the-brains-commence/
தன் குட்டியை கடித்துத் தின்ற நாய்களை பழி வாங்க 250 நாய் குட்டிகளை கவ்வி மரத்திலிருந்து வீசிக் கொன்றது குரங்குகள். குரங்குகள் மாமிசம் உண்பதில்லை, அதனால் இப்படி பழி வாங்கின



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...