Friday, December 31, 2021

மகன்கள் பைபிள் கதை வணக்க மதம் மாறிட இறைவன் கோவிலுக்கு சொத்தை தந்தார்

மதம் மாறியபிள்ளைகள் தந்தை செய்த அதிரடி காரியம்! 2 கோடி ரூபாய் சொத்து முருகன் கோவிலுக்கு!

பிள்ளைகள் மதம் மாறியதால் தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக எழுதி வைத்துள்ள்ளார் முருகன் பக்தர் மு.வேலாயுதம். இது குறித்து அவர் தெரிவித்தது எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனர். 3 பேருக்கும் திருமணமும் ஆகி விட்டது. காதல் திருமணத்திற்காக 3 பிள்ளைகளும் மதம் மாறியதால் நானும் என் மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளானோம். என மனைவி இறந்துவிட்டார் இதனால் மனம் வருத்தமடைந்து எனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு எனது 2 கோடி ரூபாய் சொத்தினை தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன்.

நான் நன்கொடையாக வழங்கிய இச்சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.
 நானும் என் மனைவியும் தற்போது அந்த சொத்தில் ஒரு பகுதியில் குடியிருந்து வந்தோம் மனைவி மரணமடைந்து விட்டதனால்மீதப்பகுதியை அதாவது 2 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளோம்.
 
 மேலும் நான் பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அவர்கள் மதம் மாறியது தான் பிடிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...