Monday, December 6, 2021

பாபுராயன் பேட்டை கோவில்

மிக அவசர தகவல், ஹிந்து முன்னணி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம் &நகரம்,பாபுராயன்பேட்டை,அருள்மிகு ஸ்ரீ விஜய வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை,நீதிமன்ற உத்தரவை மீறி, இந்து சமய அறநிலையத்துறை 8- 12 -2021,அன்று காலை 11 மணிக்க குத்தகை  விட அறிவிப்பு கொடுத்துள்ளது,  அதை கண்டித்து இந்து முன்னணி சார்பாக 7 -12- 2021
 காலை 9-30,மணிக்கு ஆட்சீஸ்வரர் ஆலய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது மாவட்ட, ஒன்றிய, நகர&கிளை  பொறுப்பாளர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்.     என்றும் தேசிய&           தெய்வீகப் பணியில்,   
       இரா. பாலசுப்ரமணியம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர்

பராமரிப்பின்றி இருக்கும் பழங்கால கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - அலட்சியத்தில் அறநிலைத்துறை! By : Shiva  |  2 May 2021
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அச்சரப்பாக்கம்திற்கு அருகிலுள்ள பாபுராயன்பேட்டை என்னும் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ விஜய வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் உடனடியாக அதனை புனரமைத்து மூன்று கால பூஜைகள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இந்த கோரிக்கையை சத்குரு சமூக வலைதளங்களில் தொடங்கி வைத்த கோவில் அடிமை நிறுத்து என்ற ஹேஸ்டாக்கில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 இந்த வரதராஜ பெருமாள் கோவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் இதற்கு சொந்தமாக அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும். இந்த நிலங்களை அப்பகுதியைச் தெரிந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு கோவிலை பராமரித்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கோவில் வரலாறு : 
கிருஷ்ணாஜி பண்டிட் எனும் பக்தர் காஞ்சி வரதராஜப்பெருமாளின் சீரிய பக்தராக இருந்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியை சேர்ந்த திவான் ஆவார். இவரது மகனான பாபுராயன் தந்தையைப் போன்றே பெருமாளிடம் பக்தியுடன் திகழ்ந்துள்ளார். காஞ்சி வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளின் தரிசனம் காண்பதைத் தவறாத பழக்கமாகக் கொண்டிருத்த இவர் ஒரு நாள் வீட்டில் வழிபாடு முடிந்து வர தாமதமாகவே பெருமாளைத் தரிசனம் செய்ய இயலாமல் போக வருந்தி உண்ணாமல் நீரருந்தாமல் வருத்தத்தில் இருந்துள்ளார்.
 மூன்றாம் நாள் பாபுராயனின் கனவில் வந்த வரதராஜப் பெருமாள் தெற்கில் தமக்கு ஒரு திருக்கோயில் அமைக்கும் திருப்பணியை செய்தால், அங்கிருந்து தினமும் தரிசனம் தருவதாக உறுதி கூறினார். 
மறுநாள் மீண்டும் கனவில் நாளை இங்கு வரும் கருடனைத் தொடர்ந்து பின் செல்ல கோயில் கட்டும் இடத்தைக் காணலாம் எனக் கூற அதன்படி அடையாளம் காணப்பட்டு கட்டப்பட்ட திருத்தலமே பாபுராயன்பேட்டை ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் என்று வரலாறு கூறுகிறது. 

 ஐந்து கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களுடன் இருந்த இந்த திருக்கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகளி அலட்சியப் போக்கால் காலப்போக்கில் சிதிலமடைந்து பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. 

2013ஆம் ஆண்டு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பக்தர்களால் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அதிக அளவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
 எனவே இந்த கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவில் அழிவதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாற்றை நாமே அழிக்கின்றோம் என்றுதானே அர்த்தம்?
செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு: 12 வாரத்தில் முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
2020-09-11 https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=616314
 
  சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான நடைமுறைகளை 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் ஸ்ரீவிஜயவரதராஜ பெருமாளுக்கு புராதன கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் உள்ள உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், தூண்கள், கல்மண்டபம், குளம், விமானங்கள், கோபுரம் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து, திருப்பணிகளை மேற்கொண்டு கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த கோரி வக்கீல் பி.ஜெகன்நாத் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஜி.கே.முத்துக்குமார், அறநிலையத்துறை தரப்பில் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதில், அறநிலையத்துறை தரப்பில், புராதன கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அந்த அனுமதி கிடைத்த பிறகு குடமுழுக்கு குறித்து முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், குடமுழுக்கு நடத்துவதற்கான நடைமுறைகளை 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Madras High Court
B.Jagannath vs The Commissioner on 4 September, 2020
                                   W.P. No. 9692 of 2020

                  IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

                        DATED : 04.09.2020

                           CORAM

                   THE HON'BLE MR.JUSTICE M.M.SUNDRESH
                            and
                   THE HON'BLE MRS.JUSTICE R.HEMALATHA

                        W.P.No.9692 of 2020


           B.Jagannath                   .. Petitioner

                             vs

           1.The Commissioner
            Hindu Religious and Charitable
              Endowments Department,
            Nungambakkam, Chennai-600034.

           2.The Joint Commissioner
            Hindu Religious and Charitable
               Endowments Department,
            Sauthvachari, Vellore-9

           3.The Assistant Commissioner
            Hindu Religious and Charitable
              Endowments Department (HR&CE),
            District Collectorate Campus,
            Kancheepuram-631 501.

           4.The Executive Officer,
            Hindu Religious and Charitable Endowments
             Department (HR and CE),
            Arulmigu Achiswarar Temple,
            Achirupakkam, Chengalpatu District.
           Page 1 of 5


http://www.judis.nic.in
                                       W.P. No. 9692 of 2020

           5.The District Collector,
            Chengalpattu District,
            Chengalpattu-603 111.

           6.The District Collector,
            Kanchipuram District,
            Kanchipuram-601 501.                 .. Respondents


              Petition filed under Article 226 of the Constitution of India praying to issue a writ of mandamus directing the respondent Hindu Religious and Charitable Endowment Department to reconstruct, repair the damages and perform Thirupani Renovation of Arulmighu Sri Vijaya Varadaraja Perumal Temple situated at Baburayanpettai Village in Kancheepuram now Present Chengalpattu District including the           renovation and reconstruction of the Inner and outer Praharams Pillars Kal Mandapams Temple Tank all the Vimanams and Gopurams and perform Kumbabishekam in accordance with the Vadakalai Vaishnavite Sampradaya and Customs within a reasonable time frame as fixed by this Court.
               For Petitioner     ..  Mr.B.Jaganath                             Party in person

               For Respondents     ..  Mr.R.Venkatesh,                              Government Advocate for R1 to R4
                              Mr.G.K.Muthukumar,                              Special Government Pleader
                      for R5 & R6

                       ORDER

(Order of the Court was made by M.M.SUNDRESH, J.) This writ petition has been filed by the petitioner, who appears as party-in-person seeking performance of thirupani renovation in the nature of kumbabishekam.

http://www.judis.nic.in W.P. No. 9692 of 2020

2. We have heard the petitioner/party-in-person, learned Government Advocate appearing for respondents 1 to 4 and the learned Special Government Pleader appearing for respondents 5 and

3. Learned Government Advocate appearing for the HR&CE Department submitted that the procedural compliance is required to be made through the District and State Level Committees. After compliance of the same, the performance of kumbabishekam will be considered.

4. Considering the aforesaid submission made, we direct the official respondents to undertake the exercise of performing the kumbabishekam within a period of twelve weeks from the date of receipt of a copy of this order.

5. The writ petition stands disposed of accordingly. No costs.

                                      (M.M.S., J.)  (R.H., J.)
                                          04.09.2020

           Index:Yes/No
           mmi/ssm
http://www.judis.nic.in W.P. No. 9692 of 2020 To

1.The Commissioner Hindu Religious and Charitable Endowments Department, Nungambakkam, Chennai-600034.

2.The Joint Commissioner Hindu Religious and Charitable Endowments Department, Sauthvachari, Vellore-9

3.The Assistant Commissioner Hindu Religious and Charitable Endowments Department (HR&CE), District Collectorate Campus, Kancheepuram-631 501.

4.The Executive Officer, Hindu Religious and Charitable Endowments Department (HR and CE), Arulmigu Achiswarar Temple, Achirupakkam, Chengalpatu District.

5.The District Collector, Chengalpattu District, Chengalpattu-603 111.

6.The District Collector, Kanchipuram District, Kanchipuram-601 501.

http://www.judis.nic.in W.P. No. 9692 of 2020 M.M.SUNDRESH, J.

and R.HEMALATHA,J.

mmi/ssm W.P.No. 9692 of 2020 04.09.2020 http://www.judis.nic.in

No comments:

Post a Comment

Pakistan Parliament discussions