Thursday, December 30, 2021

திசையன்விளை சிஎஸ்ஐ சர்ச் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஸ்பெசல் கிளாஸ் பெயரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எச்.எம்... எச்சை செயலால் தலைமறைவு.!  By Vasu 

பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர், வழக்கு விசாரணைக்கு பயந்து தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் அரசு உதவிபெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஏராளமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு, சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சில மாணவிகள் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட நிலையில், ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருங்கி பழக முயற்சித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவியை அவ்வப்போது வாட்ஸப்பில் பேச கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதனால் மாணவி செய்வதறியாது பெற்றோரிடம் தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார். 

 

உடனடியாக மாணவியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சென்று தகவலை தெரியப்படுத்தவே, அவரின் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, திருநெல்வேலி திருமண்டல டயோசீசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர், தலைமை ஆசிரியர் புஷ்பராஜை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த தகவலை அறிந்த தலைமை ஆசிரியர் தலைமறைவாகவே, திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இவன் 3 மகள்களுக்குத் தந்தை என்பது கூடுதல் செய்தி...

No comments:

Post a Comment

-ஈ.வே.ராமசாமி நாயக்கர் பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது- உச்ச நீதிமன்ற தீர்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு -ஈ.வே.ராமசாமி நாயக்கர்  பேச்சு - செயல் பைத்தியக்காரத்தனமானது, தொடர்ந்தால் மாநில அரசு தடுக்க நடவடிக்கை