Thursday, December 16, 2021

இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைவது என்பது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று- HRCE Minister Sekar Babu

** முன்குறிப்பு: 1920களிலேயே பாவாடை பிரிட்டிஷ் கூட்டம் அவர்களது அடிமை நீதிக்கட்சியைக் கொண்டு கோவில்களை அரசு கையகப்படுத்தும் இந்து அறநிலைய துறையை கொண்டு வந்தது. இது முதல் தவறு, முதல் கோணல். அன்று முதல் இன்று அரை எல்லாமே கோணல் தான் ***
பட்டியலினத்தவரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், 1947இல் கொண்டு வரப்பட்டது 'கோவில் நுழைவு அங்கீகார சட்டம்' (Temple entry authorization act) . அதை காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசந்திர ரெட்டியார் கொண்டு வந்தார்.
அந்த 1947சட்டத்தில், 'யாரெல்லாம் கோவிலுக்குள் நுழையலாம்?' என்று சொல்வதோடு, 'யாரெல்லாம் நுழைய முடியாது?' என்பதையும் சொல்கிறது. பிரிவு 3(ஏ) படி, 'இந்துக்கள் அல்லாதோர் நுழைய கூடாது (Non Hindus not allowed)' என்கிறது.
அந்த சட்டத்தில் கருணாநிதி தான் முதல்வராக இருந்த 1970இல் கை வைக்கிறார், 4(ஏ) என்ற பிரிவை கொண்டு வந்து, 'இந்து அல்லாதோரும் கோவிலுக்குள் போகலாம்' என.
கருணாநிதியின் இந்த செயலை - திருத்தத்தை - எதிர்த்து ராமேஸ்வரத்தை சேர்ந்த திரு கல்யாண் தாஸ் என்பவர் நீதிமன்றம் செல்ல, 05.07.1972இல் நீதிபதி தாயி ராம்பிரசாத் ராவ் (J Tayi Ramprasad Rao) தீர்ப்பு வழங்கினார். 11 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு.
அந்த வழக்கில் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த, பாஞ்சராத்ர ஆகமத்தில் தேர்ந்த ஒரு வைஷ்ணவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சைவ விற்பன்னர் ஒருவரும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 'இந்துக்கள் அல்லாதோர் வந்தால் கும்பாபிஷேகம் பண்ண வேண்டும்' உள்ளிட்ட பரிகாரங்களை தெரிவித்திருக்கிறார்கள். அதே வேளையில், இராமேஸ்வரத்திலிருந்து ஒரு குருக்கள், "எல்லா மதத்தவரும் கோவிலுக்குள் நுழையலாம்" என்று சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி அரசு வழக்கறிஞர், "கோவிலுக்குள் மதச்சார்பின்மையை கொண்டு வரும் நோக்கத்தில் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது (It is intended to subserve the ideal of secularism)" என்று சொல்லியிருக்கிறார்... 😖 😖
நீதியரசர் தீர்ப்பில், "எப்படி வழிபட வேண்டும் என ஆகமம் உள்ளிட்டவற்றால் ஒரு விதிமுறை வகுக்கப்பட்டிருக்குமானால், அது நாகரீக வளர்ச்சியின் காரணமாகவோ, சமுதாயத்தின் அழுத்தம் காரணமாகவோ, பகுத்தறிவு சிந்தனையின் காரணமாகவோ எந்தக் காரணங்களைக் கொண்டும் நீதிமன்றம் உட்பட யாருமே அதில் தலையிட முடியாது" என்று கூறியிருக்கிறார்.
அவர் தன் தீர்ப்பில், 1954இல் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை குறிப்பிடுகிறார், "மதம் என்பது நம்பிக்கை. வழிபாட்டு முறை, விழாக்கள், அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் என பலவற்றை உத்தரவாக பிறப்பிக்கலாம், வழிகாட்டலாம் - அவர்கள் என்ன சாப்பிடலாம், உடுத்திக் கொள்ளலாம் என்பது உட்பட," என.
"எனவே, கோவிலை மதச்சார்பற்றது என்று கூற முடியாது"
நீதியரசர் தன் தீர்ப்பில் மேலும் ஒரு 1972 உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மேற்கோள் காட்டியிருக்கிறார், "ஆகமங்கள் விரிவான விதிமுறைகளை கொடுத்திருக்கின்றன. எப்படி கோவில் கட்ட வேண்டும், மூலவர் எங்கே இருக்க வேண்டும், பிற தெய்வங்கள் எங்கே இருக்க வேண்டும், மக்கள் எங்கே இருந்து வழிபட வேண்டும் என்பதையெல்லாம் ஆகமங்கள் தெரிவிக்கின்றன."
"தெய்வங்களை குறிப்பிட்ட வகையில் வழிபடாவிட்டால், அந்த தெய்வங்கள் அங்கே இல்லாமல் போய்விடும் என்றும் ஆகமங்கள் தெரிவிக்கின்றன". தவறிழைத்தால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று தெரிவிக்கிறது.
"ஆகமத்துக்கு விரோதமாக செயல்பட்டால், கோவிலின் புனித தன்மையை நிலைநாட்ட, பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் (In fact, purificatory ceremonies have to performed for restoring the sanctity of the shrine) என்றும் தெரிவிக்கின்றது"
வடகலை - தென்கலை பிரச்சினை பிரிட்டிஷ் ராணி வரை போன விஷயத்தையும், அவ்விரு பிரிவினரின் பக்தியின் வீரியத்தையும் பிரிட்டிஷ் காலத்தில் குறிப்பிட்டதை குறிப்பிடுகிறது தீர்ப்பு.
1954இல் உச்சநீதிமன்றம் வழங்கிய இன்னொரு தீர்ப்பில், "It is well-known that there could be no such a thing as an unregulated and unrestricted right of entry in a public temple, for persons who are not connected with the spiritual functions thereof. It is a traditional custom universally observed, not to allow outsider, to the sacred parts of a temple. There are also fixed hours of worship and, REST for the idol, when no disturbance by any member of the public is allowed" ! [*** சபரிமலை வழக்கில் இதை மேற்கோள் காட்டினார்களா என்பது தெரியவில்லை ***]
நீதிபதி தாயி ராம்பிரசாத் ராவ் தன் 1972 தீர்ப்பில் சொல்கிறார், "இந்து கோவில்கள் வழிபாட்டு தலங்களே தவிர சுற்றுலா தலங்கள் இல்லை (It is nobody's case that non-Hindus ever had a right to enter Hindu temples, not for worship but for sight-seeing and as tourists. Hindu Temples are always treated as places of worship)".
அதோடு, "1947 சட்டமே இந்துக்களுக்கான சட்டம். அதில் எப்படி இந்து அல்லாதோரை நுழைக்க அந்த 1947 சட்டத்தின் குறிக்கோளே போய்விடுகிறது. எனவே, இப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டு வர முடியாது" என்றும் கூறுகிறார் நீதிபதி.
தீர்ப்பு: "இந்துக்கள் மட்டுமே நுழையலாம் என்பது சகிப்பின்மையை காட்டுவதற்காக அல்ல. அது அந்த மத நம்பிக்கையின் ஆழத்தை காட்டுவதே தவிர வேறில்லை."
[கோவிலுக்கு போகணுமானால், இந்துவாக மாறு!]
தீர்ப்பில் மேலும், "நீதிமன்றங்களோ சட்ட மன்றங்களோ வழிபாட்டுக்கான கோவில்களை பார்வைப் பொருளாக மாற்ற முடியாது"
தீர்ப்பில் மேலும்: "இந்து அல்லாதோர் இந்துக்கள் இல்லை. இந்துக்களின் (கோவிலில் நுழையும்) உரிமையை இந்து அல்லாதோர் கோர முடியாது. சட்டமியற்றும் அதிகாரத்தில் அரசும் இந்து அல்லாதோரை இந்துவாக நடத்த முடியாது. (A non-Hindu is not a Hindu. He belongs to a different class. He cannot claim the same privilege as a Hindu, regarding entry into a Hindu Temple. The legislature also cannot, in exercise of its rule making power, treat a non-Hindu as a Hindu). சூப்பர் தீர்ப்பு 🔥 🔥
பாண்டே: எனவே, இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைவது என்பது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று. மதச்சார்பின்மை பேசுவதற்கான இடமில்லை - கோவில், மசூதி, சர்ச் எல்லாம். அவை எல்லாம் மத சம்பந்தப்பட்டவையே. கோவிலில் போய், சாத்தான், பகுத்தறிவு என்றெல்லாம் பேச முடியாது. கோவிலுக்கு உள்ளே யார் வரலாம், எப்படி நடக்க வேண்டும் என்பதை ஆகமங்கள் சொல்கின்றன, அதை தீர்ப்புகளும் உறுதிபடுத்தியுள்ளன.

No comments:

Post a Comment

வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம்

  வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பத...