Friday, December 17, 2021

பெண்கள் சுன்னத் என சோமாலியாவில் பெண்ணுறுப்பை தைத்து விடுவார்களாம்

 

வாரிஸ் டைரி

 

வாரிஸ் டைரி Waris Dirie (சோமாலி: Waris Diiriye, அரபு: واريس ديري‎) (பிறப்பு 1965) என்பவர் சோமாலியவைச்சேர்ந்த மாடல், நடிகை, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். 1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.  ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார்.

வாழ்க்கை
 

வாரிஸ் டைரி, சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்தார். வறுமை தாண்டவமாடும் அந்த நாட்டில் மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் பெண் குழந்தைகளின் பணி. 


மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸுக்கு பெண் உறுப்பு சிதைப்பு என்னும் கொடூரத்தைச் சந்திக்க நேர்ந்தது. 

அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கடவுளின் விருப்பம் இதுதான் என்றார் அம்மா. ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அம்மாவுக்குக் கலக்கத்தை உருவாக்கியது.

மறுநாள் அதிகாலை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். பழைய பிளேடால் அவரது உறுப்பு சிதைக்கப்பட்டது. உயிரே போனதுபோல அப்படி ஒரு வலி. ரத்தம் பெருகி ஓடியது. 
முட்களால் தையல் போட்டுவிட்டுச் சென்றார் மருத்துவச்சி. பல நாட்கள் வலியால் துடித்த வாரிஸ், கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். வாரிஸை 13 வயதில் 60 வயதை தாண்டியவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருநாள் அதிகாலை. பணம், துணி, உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல். வெற்றுக் கால்களுடன் வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தார் வாரிஸ். இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டே இருந்தார்.
பல துன்பங்களுக்கு ஆட்பட்டு 300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்ந்தார் வாரிஸ். அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டார். 
 
லண்டனில் உள்ள உறவினருக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருந்தபோது, தானே வருவதாகச் சொன்னார் வாரிஸ். அங்கே சில ஆண்டுகள் பணிபுரிந்தார் பிறகு மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்துகொண்டு, அங்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

சுயசரிதை

தன்னுடைய வாழ்க்கையைப் ‘பாலைவனப் பூ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் வாரிஸ். 1 கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது.

பின்னர் 2009இல் திரைப்படமாகவும் வெளிவந்து உலகம் முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்தது



  1.  Stellan Consult Limited (2008). "Desert Flower". Parents (265–270): 76.
  2. ↑ 2.0 2.1 Mary Zeiss Stange, Carol K. Oyster, Jane E. Sloan, ed. (2011). Encyclopedia of Women in Today's World, Volume 1. SAGE. பக். 402. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4129-7685-5.
  3.  "Messengers of Peace and Goodwill Ambassadors at the United Nations". Un.org. பார்த்த நாள் 2014-04-17.
  4.  UNFPA Goodwill ambassador, Waris Dirie, wins award UNFPA – United Nations Population Fund, April 17, 2001.
  5.  Katja Hofmann (2008-02-09). "Model Liya Kebede to star in 'Flower'". Variety.com. பார்த்த நாள் 2014-04-17.                                                                                           சடங்கு என்ற பெயரில் பெண்ணின் பிறப்புறுப்பைத் தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 9) தெரிவித்துள்ளது. https://minnambalam.com/public/2018/07/10/60

No comments:

Post a Comment