Friday, December 17, 2021

தமிழ்த்தாய் வாழ்த்து

 

மனோன்மணியத்தில் கடவுள் வாழ்த்து பகுதியில் உள்ள 'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்பதைத்தான் நாம் தமிழ்த்தாய் வாழ்த்தாக கொண்டுள்ளோம்..வளத்தினை எல்லாம் தேவியின் வடிவமாக போற்றுவது ஹிந்துக்களின் பாரம்பரிய மரபு.தேசத்தை,மொழியை,நதியை எல்லாம் பெண் தேவியாக போற்றும் உன்னத பண்பையே இது காட்டுகிறது..
"நீரினை ஆடையாகக் கொண்ட இந்த நிலமென்னும் பெண்ணின், அழகு மிகுந்த முகம் இந்த பரத கண்டம்..அந்த முகத்தில் உள்ள பிறை நெற்றியில் சுடரும் குங்குமத் திலகமாகவும்,அதில் பரவும் வாசனையாகவும் திகழ்கிறது தமிழகம்"

இப்படி பாரதத்தையும் இந்த பண்பாட்டினையும்,மொழியையும் தெய்வீகமாகவே போற்றி வணங்கும் பாடலினைப் பாடி அகமகிழ்வதில் நமக்கென்றும் மாற்றுக் கருத்தே இல்லை..
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

No comments:

Post a Comment

Trump Is Now One Of America’s Biggest Bitcoin Investors

  Trump Is Now One Of America’s Biggest Bitcoin Investors The president’s crypto portfolio goes beyond World Liberty Financial and his memec...