Wednesday, December 22, 2021

இந்தியாவின் கல்வியை சிதைத்த கிறிஸ்துவ மெக்காலே கல்வி

இந்தியாவின் கல்வியை சிதைத்த கிறிஸ்துவ மெக்காலே கல்வி -

Sundar Raja Cholan

எல்.எப்.ரஷ்ப்ரூப்ஸ் என்ற வெள்ளையர் தன் 'இந்தியா' என்கிற புத்தகத்தில் தெளிவாக அதை விளக்குகிறார்.

|| 'மெகாலே'உள்ளிட்ட பல பிரமுகர்கள்,மேனாட்டு மனோபாவங்களில் இந்தியவர் பழகுவதால் ஜனசமூக ஆட்சிக்குரிய ஆலோசனைச் சபைகளை நிறுவவேண்டும் என்று கேட்பார்கள் என்றே எதிர்பார்த்தனர்.

கல்வித்திட்டத்தின் உட்கருத்து என்ன? கற்றறியவல்ல சாதியினர் ஆங்கிலக்கல்வி பயின்றபின்,அவர்கள் பெற்ற மேனாட்டுக் கல்வியின் நன்மையெல்லாம் மெல்ல மெல்ல பொதுமக்களின் வாழ்க்கையிலே பொசியுமாதலால்,நாளடைவில் அனைவரும் மேனாட்டு மனோபாவங்களை உடையவர்களாகி நாளடைவில் கிருஸ்த்தவர்களாகி விடுவார்கள் என்பதே. ||
தீர்க்கமாக இந்த கல்வித்திட்டத்தின் நோக்கமே இந்தியர்களும்,இந்தியத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமானது எனவே, அவர்கள் இயேசுவை ஏற்க வைக்க,இது ஒரு உபாயம் என்றே,மெக்காலே உள்ளிட்ட பலர் எண்ணியதாக சொல்கிறார் ரஷ்ரூப்ஸ். இதற்கும் மேலே அவர் தெளிவாக சில விஷயத்தை விவரிக்கிறார்.
|| இப்படி நினைத்தவர்களுக்கு சில விஷயம் புரியவே இல்லை.கல்வி அறிவுடைய ஜாதிகள் முற்காலத்தில் பாரசீகம் கற்றது போல இந்நாளில் ஆங்கிலம் கற்கிறார்கள்.ஆதலால் இவர்களது இந்தியத்தன்மை மாறிவிடவில்லை.தங்களா ஆள்கிற அந்நியரிடம் நட்போ,விஸ்வாசமோ வரவில்லை.வேலைக்கு லாயக்கான கல்வி என்று மட்டுமே நினைக்கிறார்கள்.கடைசியில்,தங்களை ஆளுவோருக்கு ஆள உரிமையில்லை என்று வாதாடுவதற்கு மட்டுமே இக்கல்வி பயன்பட்டது ||
ஆக ஆங்கில வழிக்கல்வி மூலமாக என்ன நடக்கும் என்று மெக்காலே உள்ளிட்ட பலர் நினைத்தார்களோ? அது அன்று நடக்கவில்லை என விளக்குகிறார் ரஷ்ரூப்ஸ்.
அடுத்தது,இந்த கல்வி முறையால் தலைப்பாகம் பெருத்தும்,கீழ்பாகம் சிறுத்ததும் போல பெரிய இடைவெளி வந்துவிட்டது என்று சொல்கிறார்.குறிப்பாக,இந்தியாவில் காணப்பட்ட கிராமப்புற கல்வி நிலையங்கள் முற்றாக ஒழிந்தன.அது மிகப்பெரிய சமநிலைக்குலைவை ஏற்படுத்திவிட்டது என்றும் சொல்கிறார்.
|| மேனாட்டு வழிகளிலே சென்று இந்தியா முன்னேற்றம் அடையும் என்று நினைத்தே பிரிட்டிஷார் இந்தியாவிற்கு மேனாட்டு கல்வியை அளித்தார்கள்.ஆனால் அவர்கள் கோரிய பயனை இந்தியா அடையவில்லை.இனியும் அடையாது என்றே தோன்றுகிறது. மேனாட்டு கல்வி அறிவாளி சமூகம் ஒன்றை உருவாக்கியது.இவர்கள் நாடெங்கும் பரவி இந்தியா ஆங்கிலமயமாவதை தடுக்கிறார்கள்.அது இந்தியமயமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ||


இதன் வழி அவர் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன்.இந்தியர்களுக்கு மேனாட்டு கல்வியை கொடுத்தாலும் அவர்களுக்கு நம் மீதோ,ஆட்சியின் மீதோ விஸ்வாசமில்லை.நம்மிடம் கற்ற கல்வியை வைத்து கிருஸ்த்தவராக மாறாமல்,ஆங்கிலேயேனை போல் நடக்காமல் இந்தியத்தன்மையை மேலும் வளர்க்கிறார்கள் என்று வருந்துகிறார்.
முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.மொஹலாயனோ,ஆங்கிலேயனோ யாராக இருந்தாலும் இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய வந்தவர்கள்.தங்களது ஆட்சிக்கு சாதமாக செய்த விஷயங்களில் பல நன்மைகள் மக்களுக்கு நடந்திருக்கும்.அதை விட பல தீமைகளும் நடந்திருக்கும் ஆனால் இதற்காக அவர்கள் மேல் நம் கண்ணாடிகளை மாற்றி மாற்றி போட்டுப் பார்க்க எதுவும் இல்லை.அவர்கள் அந்நியர்கள் தங்கள் சதியால்,வலிமையால் நம்மை ஆண்டு நடத்தியவர்கள்..அவ்வளவுதான்.
ரயில் தண்டவாளம் போட்டால் இந்திய அரசு இன்று செய்வது போல மக்கள் சேவைக்காகவா? அன்று ஆங்கிலேய அரசு போட்டது? அதன் தன் செளகரியத்துக்கு அமைத்துக் கொண்டது.இந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களை,கொன்றொழித்த மக்களை எண்ணிப் பார்த்தால் இவையெல்லாம் ஒரு பொருட்டா?
மற்றபடி எதன் மேலும் நாம் வெறுப்பு கொள்ளத் தேவையில்லை.வரலாற்றை திருத்தி எழுத முடியாது.ஆனால் நாய் போல வாலாட்டிக் கொண்டே இரு என்று இன்றும் வெள்ளைய ஆட்சிக்கு வால் பிடிப்பவர்களை பார்த்தால் எரிச்சலாக வருகிறது.உண்மையில் மெக்காலே யார் உருவாக வேண்டும் என்று நினைத்தாரோ அவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.பலரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது உண்மை.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...