திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் முஹைத்தீன் காதர் சாஹிப் ஜமாஅதுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தை கடந்த 1993 ஆம் ஆண்டுமுதல் 2002 ஆம் ஆண்டுவரை (10 ஆண்டுகள்) முதல் ஐந்து வருடத்திற்கு வருட வாடகை ரூபாய் 5000-ம் என்றும் எஞ்சியுள்ள 5 வருடத்திற்கு வருட வாடகை ரூபாய் 6000-ம் என்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்திற்கு வாடகையாக கொடுத்து உள்ளனர் ஜமாஅத் நிர்வாகம்
முதல் 5 வருட வாடகை தந்த பிறகு வாடகை தராததால் கட்டபொம்மன் போக்குவரத்து கழக மேலாளரை அணுகி வாடகை கேட்டு உள்ளனர் ஜமாஅத் நிர்வாகிகள் ,
இது அரசு புறம்போக்கு சொத்து என்று கூறி வாடகை தர மறுக்கவே திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது ஜமாஅத் நிர்வாகம்
கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தினர் தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, ஊர் நிர்வாகத்தில் பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் ஊர் மக்கள் உதவியோடு போராடி 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றமும் ஜமாஅத் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளது !
இருப்பினும் மசூதி நிலத்தை காலி செய்வதில் தொடர்ந்து பல இடையூறுகள் கொடுக்கப்பட்டு காலி செய்வதற்கான ஒவ்வொரு நிறைவேற்ற மனுவும் (Execution Petition) முறியடிக்க பட்டும் செய்வதறியாமல் தவிக்கிறது ஜமாஅத் நிர்வாகம்
இந்த நேரத்தில் தற்போது சபாநாயகராக உள்ள மு. அப்பாவு அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருடன் இணைந்து பல உள்ளடி வேலைகள் செய்து பட்டா திருத்தம் செய்து இது அரசு புறம்போக்கு என்றும் இது தனி நபர் சொத்து என்றும் முன்னுக்கு பின் முரணாக பேசி ஜமாஅத் நிர்வாகத்தை பின்னடைவு செய்து வருகிறார்..
இதனை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்து 2024 ஆம் வருடம் மீண்டும் ஜமாஅத் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு பெற்றும் இரு வாரங்களில் காலி செய்து விடவேண்டும் என வழங்கப்பட்ட தீர்ப்பையும் நிறைவேற்ற விடாமல் இடையூறு செய்கிறார் சபாநாயகர் அப்பாவு அவர்கள்
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மசூதி இடத்தில் கழிப்பறைகள் கட்டி நமது புனித பூமியை அசிங்க படுத்தியுள்ளார்,
ஜமாஅத் வழக்கறிஞர் மற்றும் சில நலன் விரும்பிகளின் ஆலோசனையின் படி இராதாபுர வட்டார அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்கள் மற்றும் இமாம்கள் ஆதரவோடு நமது அல்லாஹ்வின் (மசூதி) இடத்தை அபகரிக்கும் முயற்சியை எதிர்த்து சுவரொட்டிகள் அடிக்க திட்டமிட்டு இருகின்றனர் ஜமாஅத் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது..
அம்மா பட்டினம் ரஹ்மத் நகர் மசூதி உட்பட முஸ்லிம் பகுதிகளை இடிப்பதும் மறுபுறம் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் முஹைத்தீன் காதர் சாஹிப் ஜமாஅதுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா ?
சமுதாய அமைப்பு தலைவர்கள் எல்லாம் அண்ணா அறிவாலய அடிமைகளாக மாற்றி கொண்டு இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் திமுக அரசு உடனடியாக தலையிட்டு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் முஹைத்தீன் காதர் சாஹிப் ஜமாஅதுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தை ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் ..
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹீம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்..
No comments:
Post a Comment