ராகுல்காந்தி ஹரியானா கதை சில்லறைத்தனமானது- ஹரியானா ஓட்டுத் திருட்டு புகார். ஒரே பெண் புகைப்படத்தை வைத்து 2 பூத்துகளில் 223 ஓட்டுகள் என்கிறார்.
அரசியல் அறிவுபடி ஒவ்வொரு வாக்காளர் வந்தபின் எல்லா கட்சி பூத் ஏஜென்ட் சரி பார்ப்பர். பூத் முகவர்கள் (ஏஜென்ட்) வந்தவரை சரி பார்த்து (இவர் கட்சி உட்பட) சரியான நபர் என ஏற்ற பின், கையில் மை வைக்க, அதிகாரி வோட்டு மிஷினில் வோட்டு போட அனுமதி தருவார்.
கையில் மை வைத்த பின்பு ஓட்டர் இன்னொரு ஓட்டு போட முடியாது.
ஒவ்வொரு ஓட்டு போடும் வாக்காளர் பெயர், நம்பர்களை எல்லா கட்சி பூத் முகவர்கள் நான் எல்லா தேர்தலிலும் பார்த்து உள்ளேன்
இந்த இரண்டு பூத்தில் இவர் கட்சி பூத் முகவர்கள் குறித்து வைத்ததுபடி இதில் எத்தனை ஓட்டு போடப்பட்டது எனப் பார்த்து சொல்லி இருக்க வேண்டும்.
வாக்காளர்கள் இடம் பெயர்தல், மரணம், வீடு மாறுதல் எனப் பல மாற்றங்கள் நிகழும், இவற்றை மாநில அரசின் ஊழியர்கள் - பெருமளவில் ஆசிரியர்கள் கொண்டே சரி பார்ப்பர்; இது போல தவறுகள் உள்ளது என்பது சிஸ்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டுகிறது
ராகுல் பேச்சு தெளிவாக SIR(Special Intensive Revision of voter list) தேவை என்பதும், இன்னும் தெளிவாக - அனைத்து ஓட்டர் ID- ஆதார் - மொபைல் இணைப்பு தேவை என்பதை உறுதி செய்கிறது. ஆனால் ராகுல் SIR எதிர்த்து வழக்கு போட்டுள்ளது ஏன்?
ராகுல் -இது போன்ற ஒரே புகைப்படம்- பல ஓட்டுகளை தேர்தல் கமிஷன் கணினி AI செயற்கை அறிவு தொழில் நுட்பத்தால் நீக்கலாம் என்றார். இது சட்டப்படி செய்ய வாய்ய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை.
அதைக் கூறாது வெறும் கூச்சலும், இதை எழுத்து பூர்வமாக புகார் தர மறுப்பது, இளைஞர்களை வீதிக்கு அழைப்பதும் அற உணர்வு உள்ளவர் எவராலும் ஏற்க இயலாது.

No comments:
Post a Comment