Sunday, November 16, 2025

போலி நந்தினி நெய் தயாரித்து பெங்களூரு அனுப்பிய திருப்பூர் நிறுவனம்- பிடித்தது கர்நாடக போலீஸ்

 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்... கலப்பட நெய் !: திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை: 4 பேர் அதிரடி கைது


 

பெங்களூரு: தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான, 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக கே.எம்.எப்., வினியோகஸ்தர் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனப்படும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், 'நந்தினி' பெயரில் போலியான மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கே.எம்.எப்., ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை துவங்கியது.

அப்போது, பெங்களூரு சாம்ராஜ்பேட், நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள ஒரு குடோனில், போலியான கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்படையினருக்கு தகவல் கிடைத்தது. கே.எம்.எப்., ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
குடோனில் அட்டை பெட்டிகளில், 'நந்தினி' பெயரில் இருந்த, 8,136 லிட்டர் கலப்பட நெய், நான்கு வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குடோன் சாம்ராஜ்பேட்டை  சேர்ந்த மகேந்திரா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:

கே.எம்.எப்., வினியோகஸ்தரான மகேந்திரா, கே.எம்.எப்.,பில் இருந்து அசல் நெய் வாங்கி, திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

கர்நாடக மாநில அரசு 46 தூய்மை( மிஷின் விலை 2.5 கோடி ) இயந்திரங்களை ₹613 கோடி செலவில் ஏழு ஆண்டுகளுக்கு வாடகை.

  கர்நாடக மாநில அரசு வியாழக்கிழமை, ₹613 கோடி செலவில் 46 இயந்திர துடைக்கும் இயந்திரங்களை ஏழு ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது...