தலித் - பிராமண காதலும்
இடைநிலை சாதிகளின் சூழ்ச்சியும்
ஒரு நாள் அந்த அரசியல்வாதி தூங்கும் போது உயிர் பிரிகிறது. அவருடைய திருமணத்தில் விருப்பம் இல்லாத சில உதவியாளர்கள் அவரது மனைவி விஷம் வைத்ததாக வதந்தி பரப்புகின்றனர்.
கொட்டும் மழையில் ஒரு நாள் வீட்டில் இருந்து அவர் துரத்தபடுகிறார். 34 வருடங்களுக்கு பிறகு அரசியல்வாதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
1990ல் அவரை தேடி சென்று அழைத்து வருகிறார் ராம் விலாஸ் பாஸ்வான். தனது திருமணம் பற்றிய நினைவு குறிப்புகளை மராத்தியில் எழுதுகிறார்.
இன்னொரு 32 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாகிறது. அந்த புத்தகத்தின் பெயர் "பாபாசாகேப்: அம்பேத்கருடன் எனது வாழ்க்கை"(2022).
அந்த அரசியல்வாதி இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய அண்ணல் அம்பேத்கர். அந்த பெண்மணி அவரது காதல் மனைவி சவீதா அம்பேத்கர்.
2) ராம் விலாஸ் பாஸ்வான் ஒரு பிராமண பெண்ணை காதலித்து 1983ல் இரண்டாவது திருமணம் செய்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள். மகன் பெயர் சிராக் பாஸ்வான்.
2020 ல் ராம் விலாஸ் பாஸ்வான் இறக்கும் வரை யாரும் அவர் மனைவி பற்றி தவறாக பேசவில்லை. அவரது மறைவுக்கு பிறகு அவர் மகன் அரசியலுக்கு வருகிறார்.
இப்போது மீண்டும் ஒரு சதிகார கூட்டம் வருகிறது. சிராக் பாஸ்வான் எடுக்கும் ஒவ்வொரு அரசியல் முடிவுக்கும் அவரது பிராமண தாயை குற்றம் சுமத்தியது.
இந்த சதிகாரர்களுக்கு OBC லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு இணையாக சிராக் பாஸ்வான் அரசியலில் வளர்வது பிடிக்கவில்லை.
அதனால் இப்படி ஒரு மட்டமான கதை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
3) இளவரசன் மரணத்துக்கு காரணமான வன்னியர் திவ்யாவை இவர்கள் யாரும் திட்டுவதில்லை.
கவின் கொ*லக்கு காரணமான நாடக காதல் மறவர் சாதி சுபாஷினியை இவர்கள் யாரும் திட்டுவதில்லை.
கோகுல்ராஜ் வழக்கில் பொய் சாட்சி சொன்ன கவுண்டர் சாதி பெண்ணை இவர்கள் யாரும் திட்டுவதில்லை.
இவர்களுடைய நோக்கம் பிராமண பெண்களை மட்டும் அவதூறு செய்வது.
ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் தான் ஆணவ கொ*லகள் நடப்பதில்லை.
அப்போது அது எந்த கூட்டம் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
4) அண்ணல் அம்பேத்கரின் அரிய புகைப்படங்களை தேடி தொகுப்பதை தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றுக்கொண்டவர் விஜய் சுர்வாடே.
1970 களில் கல்லூரி மாணவரான சுர்வாடேவை அழைத்து சில கடிதங்களை காட்டுகிறார் சவீதா. இவை தனக்கும் அம்பேத்கருக்குமான காதல் கடிதங்கள். பார்க்கவும் ஆனால் படிக்க கூடாது என அறிவுறுத்தினார்.
2003ல் சவிதா அம்பேத்கர் மறைவுக்கு பிறகு அந்த கடிதங்களை சேமிக்கிறார் சுர்வாடே. 1948-49 களில் எழுதப்பட்ட அந்த கடிதங்களில் அம்பேத்கர் தனது காதலியை "சாரு" (சாரதா கபீர்/சவீதா அம்பேத்கர்) என குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை அம்பேத்கர் உடல்நிலை மோசமாகிறது. அப்போது தானும் அங்கே வந்துவிடவா என கேட்கிறார் சவிதா.
அதற்கு அம்பேத்கர் "இல்லை. சரியல்ல. திருமணத்துக்கு முன்பு அப்படி செய்ய கூடாது. என் மக்கள் என்னை கடவுளாக பார்க்கின்றனர். மேலும், என் அரசியல் எதிரிகளுக்கு அது விமர்சிக்க வாய்ப்பாக அமையும். " என எழுதியுள்ளார்.
அம்பேத்கரே நினைக்காத ஒன்று அவர் மறைவுக்கு பிறகு அவர் மனைவியை பற்றி அவரது உதவியாளர்களே அவதுறு பரப்புவார்கள் என்பது.
5) 1972 ல் அன்னை சவீதா அம்பேத்கரிடம் அந்த கேள்வியை கேட்கிறார் விஜய் சுர்வாடே: "நீங்கள் பாபாசாகேப்புக்கு விஷம் தந்தீர்களா?"
சவீதா அம்பேத்கர் சத்தமாக சிரித்துவிட்டு கூறுகிறார்: "புதிதாக கேட்க ஏதும் இல்லையா? இதை நான் பல வருடங்களாக கேட்டு வருகிறேன்."
அவருடன் பணியாற்றிய அனுபவத்தில் ஒன்றை புரிந்து கொள்கிறார் சுர்வாடே.
"நான் இந்துவாக பிறந்தேன். ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்பது 1935 ல் அம்பேத்கர் எடுத்த சபதம். காந்தி முதல் ஹிந்து மகாசபா வரை கலக்கம் அடைய செய்த பிரகடனம் அது.
ஒருவேளை, சவிதா அம்பேத்கர் சதி செய்து இருந்தால் பௌத்த தீட்சை எடுப்பதற்கு முன்பே தடுத்து இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
அம்பேத்கருடன் சேர்ந்து சவீதா அம்பேத்கரும் பௌத்த தீட்சை பெற்றார்!
முடிவுரை: சொல்றவன் ஆயிரம் சொல்வான். கேட்கிற நமக்கு அதை ஆராய்ந்து பார்க்கும் அறிவு வேணும்.
https://velivada.com/2017/05/13/meet-vijay-surwade-living-encyclopedia-ambedkarism/
https://www.facebook.com/rockybhim/posts/pfbid025accCWSmemDkwcKCi6BEZcoQgo19VK57APyuAmq6iQ6uVoSzxzZ2nTRzPx6pueFsl?__cft__[0]=AZWJJ91KvSE2LL9jdE-ng2H92IMTVI3DbU2MYikBpRsQnXyKykgcDghfU9C6PnoL5XHGXVyzCzn0BTVn5mK7DAE1cqDN7H3_n6B0XOjw0l-gk8xbhXWQJaRCxxpkf66bob5qwUj05BUXKVIJxOAdyjY6Qcj-HI261nB4cT5mjSZKxA&__tn__=%2CO%2CP-R

No comments:
Post a Comment