மதுரைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவில்லை என்று விமான நிலையத்தில் ஒருவர் கூச்சல் போட்டதாக செய்திகள் வந்தது. பிறகு அவர் விளாத்திகுளம் திமுக எம் எல் ஏ மகன் என்பது தெரியவந்தது.
உண்மையில் அவர் அப்படி கூச்சல் போட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரை காவல்துறை இழுத்து சென்றது. மேலும் அவரை பேச விடாமல் வாயை பொத்தி இழுத்து போன வீடியோ வைரல் ஆனது.
இதனால் திமுக எம் எல் ஏ மகனே முதல்வருக்கு எதிராக பேசியிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை முதல் அனைவரும் இந்த விடியோவை பகிர்ந்தனர். இன்று செய்தித்தாளிலும் முதல்வரை எதிர்த்த திமுக எம் எல் ஏ மகன் என்று தான் செய்தி வந்திருக்கிறது.
ஆனால் நேற்று இரவு பேட்டி கொடுத்த இந்த நபர் அப்படியே யு டர்ன் அடித்து நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராகத்தான் நான் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். ஆக இடையில் என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் அவர் ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராகத்தான் பேசினார் என்றால் காவலர்கள் அவரை வாயை பொத்தி கொட்டி செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
சரி அப்படியே நீதிபதிக்கு எதிராக பேசியதால் அவரை கூட்டி சென்றார்கள் என்றால் அவர் மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். அதுவும் இல்லை. ஆக இது ஒரு நாடகம்??

No comments:
Post a Comment