"துணை ராணுவத்தை இறக்கி தேரை ஓட வைப்பேன்" கண்டதேவி கோயில் தேர் விவகாரம்- நீதிபதி ஆவேசம் By தந்தி டிவி 3 நவம்பர் 2023
https://www.youtube.com/watch?v=GHWlSP-QnYM
"மாநில அரசால் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால், மத்திய துணை ராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா? பல கோடி ரூபாய் செலவு செய்துதெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? என்றும் நீதிபதி புகழேந்தி கேள்வி 17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம்- நீதிபதி கேள்விhttps://www.thanthitv.com/news/tamilnadu/the-moment-when-egan-anegan-rises-in-the-form-of-fire-376386
ivagangai: 17 ஆண்டுகளுக்கு பிறகு! கண்டதேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்
புகழ்பெற்ற கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவகோட்டை அருகே கண்டதேவியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. மிகவும் பரபரப்பாக கருதப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபலமான தேர்திருவிழா
Kandadevi Temple : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் பழமையாகி பழுதானதன் காரணமாக 2006-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
நீதி மன்றம் உத்தரவில் திருவிழா
புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. தேர் வெள்ளோட்டம் நடத்த தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இக்கோயில் ஆனித் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருவாய்துறை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தைக்கு பின் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வடம் பிடித்து தேரை இழுக்க முடிவு செய்தனர். எனினும், கடந்தகால நிகழ்வுகள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 3000 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணிக்காக 16 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 55 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பரபரப்புக்கு நடுவே தேர் திருவிழா
கலவர தடுப்பு வாகனங்களும் நான்கு ரத வீதிகள் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்காக தேரை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. தேர் வடம் பிடித்து இழுக்க 4 நாட்டு பகுதிகளை சேர்ந்த அனைத்து சமூகத்தினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 600 நபர்கள் மட்டுமே தேர் வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படுவர். இதனால் மற்றவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க தேரோடும் வீதிகளில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டத்தை தொடங்கி 8 மணிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கண்டதேவி கோயில் தேரோட்டம் ; சிவகங்கையில் ஏ.டி.ஜி.பி அருண் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
No comments:
Post a Comment