திருப்பரங்குன்றம் மலை மீது சித்தர் சமாதியையே முஹம்மதியர் ஆக்கிரமித்து சிக்கந்தர் தர்கா -இந்து அறநிலையத்துறை நூல்
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
சிக்கந்தர் பாதுஷா கல்லறை உள்ள மதுரை கோரிபாளையம் தர்கா - தமிழக அரசின் சுற்றுலாத் துறை
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .
ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது #ஜோதிலிங்கம் மற்றும் #வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது .
மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ?
இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது .
என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது .
1.போகர் 7000 சப்தகாண்டம்
2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு. நன்றி.







No comments:
Post a Comment