Wednesday, December 3, 2025

கார்த்திகை தீபம் -கொல்லிமலை கார்த்திகை கல்வெட்டு பொஆ.7 ஆம் நூற்றாண்டு

 அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
கார்த்திகை தீபம்


பொ. 7ம் நூற்றாண்டிலேயே விளக்கீடு தொன்மையான விழா தான்

♥️ - கொல்லிமலை கார்த்திகை கல்வெட்டு
"தொல் கார்த்திகை நாள் விளக்கீடு..." (சம்பந்தர் தேவாரம் பொஆ.7 ஆம் நூற்றாண்டு)
உத்தம சோழரின் பதினாலாவது ஆட்சியாண்டில் (கி.பி 984) மழபெருமாள் என்பவரின் மருமகளும் அணிமூரி நாடாழ்வாரின் தேவியாருமான கணலை தாதியர் என்பவர் திருவறப்பள்ளி உடையார்க்கு கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழாவுக்காக திருவிளக்கும், தகளி எனும் அகல்விளக்கு வைக்கவும் மலைக்கல் எனும் அளவுக்கல்லால் கொல்லிமலை நாட்டார் வசம் பொன்னை தானமாக அளித்துள்ளார்.
“கோப்பரகேசரிபற்மற்கு யாண்டு பதி நாலாவது மழபெருமாள் மருமகள் கணலை தாதியார் அணிமூரி நாடாழ்வார் தேவியார் திருவறப்பள்ளி உடையார்க்கு திருக்கார்த்திகைத் திருநாளுக்குத் திருவிளக்கும் தகளிக்கும் கொல்லிமலை நாட்டார் வசம் வைத்த பொந் மலைக்கல்லால் இருகழஞ்சு இத்தந்மம் இறக்குவாந் வழி யேழேச்சம் மறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீ பாதம் என்தலைமேலின…”

No comments:

Post a Comment

கார்த்திகை தீபம் -கொல்லிமலை கார்த்திகை கல்வெட்டு பொஆ.7 ஆம் நூற்றாண்டு

  அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் கார்த்த...