அரிதான நெய்தல் நில நடுகல்
இந்திய சனாதன மெய்யியல் - தமிழர், அதன் கிளைமரபில் இந்த பூமி வாழ்க்கை போது தான் பிறந்த குடி நிலையில் அடக்கமாக வாழ்ந்தால் சொர்கம், எனும் தேவர் உலகம் கிடைக்கும், பாவம் செய்தால் நரகம்.
வீர மரணம் அடைந்தவர் சொர்கம் செல்வர் என வீரக் (நடு) கற்கள் நிரூபிக்கின்றது.
செயற்கரிய செயல் செய்து இறந்தோரை, தெய்வ நிலை அடைந்தவர்என ஏற்று நடுகல் எழுப்புவது இந்தியா முழுவதும் உள்ள நம் மரபு. சங்க இலக்கியத்தில் (பொமு.100- பொஆ 700) ஐந்து வகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய நிலங்களில் நடுகல் குறித்த குறிப்பும் உள்ளது. கல்வெட்டு மற்றும் சிற்பம் எழுப்பும் மரபு தோன்றிய பின் பரவலாக அனைத்து திணைகளிலும் நடுகற்கள் கிடைக்கிறது. இதில் பாலை நிலம் எதுவென இன்றும் விவாதத்திற்குரியது. இத்திணைகளில் நெய்தல் நிலத்தில் நடுகல் வழிபாடு நடந்ததற்கு இலக்கிய சான்றும் கல்வெட்டு சான்றும் இல்லை.
கோவா மாநிலத்தில் இத்தகைய நடுகற்கள் கிடைக்கின்றது. கடற்போரில் இறந்த வீரர்களுக்கு இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது.
தெற்கு கோவா மாவட்டம், சால்செட் தல்லிகாவில் உள்ள மால்கொண்டெம் கிராமத்தில் இந்நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்படைப் போரில் ஒரு வீரனின் மரணத்தை நினைவுகூரும் இந்த நேர்த்தியாக செதுக்கப்பட்ட நினைவுக் கல், அலங்கரிக்கப்பட்ட இரண்டு அடுக்குகளாக சித்தரிக்கப் பட்டுள்ளது.
கீழ் பலகையில், வீரன் தரையிலிருந்து அல்லது தண்ணீரிலிருந்து எழுந்து எதிரியை இடது கையில் உள்ள கத்தியால் எதிரியினைத் தாக்குவது போலவும், வலது கையினால் மற்றொரு ஆயுதத்தினை தாங்கியிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் இடது கை பழக்கம் உள்ளவன் போலும். கப்பலில் சக்கரங்கள் உள்ளன, இந்நடுகல்லில் இது ஒரு தனித்துவமான அம்சமாகும். கப்பலின் கீழே ஒரு நிற்கும் மனிதன் ஒரு வாத்தியத்தினை பிடித்தபடி நிற்கிறான். மேல் அடுக்கில் உள்ள சிற்பங்கள் வீரன், சொர்க்கத்தில் அரியணை ஏறுவதை சித்தரிக்கிறது, அதன் அருகே அப்சரஸ்களின் கூட்டம் ஒன்று உள்ளது, அவர்களில் இருவர் தலையில் ஒரு குடையையும், வீரன் அருகில் இரண்டு அப்சரஸ்கள் சாமரங்களுடன் உள்ளனர். சூரியனும் சந்திரனும் அதன் மேல் காட்டப்பட்டுள்ளன.
உத்திர கன்னடா என அழைக்கப்படும், உடுப்பி, மங்களூர், காசர்காட், பனவாசி பகுதிகள் கடம்பர்களின் ஆளுகைப் பகுதிளாகும். 11ம் நூற்றாண்டில் கோவா பகுதியை மையப்படுத்தி ஒரு புது கடம்பர் மரபு தோன்றுகிறது. இவர்களை கோவா கடம்பர்கள் என அழைக்கின்றனர்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ கொடுங்கோலர் போர்த்துகீசியர்களின் 16ம் நூற்றாண்டு வருகைக்குப் பின்னர் கடம்பர்கள் கட்டிய பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இக்கோவிலின் கற்கள் பசால்ட் பாறையால் உருவாக்கப்பட்டதால் விரைவாகவே அவர்களால் அழிக்க முடிந்தது. தம்டி-சுர்லா எனும் ஒரு கோவில் மட்டும் இன்று எஞ்சியுள்ளது. இக்கோவிலும் இதுபோன்ற நடுகற்களுமே கோவா-கடம்பர்களின் வரலாற்றினை நினைவு கூர்கிறது.

Tamdi Surla Mahadev Temple – a Monument that escaped Portugese Roman Catholic Plunder
The temple reflects the later chalukyan and Hoysala architectural features and expresses synchronisation of faith in the 13the century. The temple is facing east and stands on a simple raised platform, consists of an inner sanctum which houses the shrine and an outer courtyard(mukhmandapa) which is supported with four prominent pillars having exquisite architecture. There is the Nandi which is the sacred bull facing the inner shrine in a seated position, but the head is missing which I found quite interesting. The roof of the outer courtyard is again carved exquisitely and reflects the efforts gone into beautifying this simple architecture.
No comments:
Post a Comment