மதத்தை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள்..
1. மு க ஸ்டாலின் 
நெல்லை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி. மேடையின் பின் புறம், திரையில் யேசுநாதர் பற்றி எதுவுமே இருக்கவில்லை. கருணாநிதி மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இவர்களின் பிம்பங்கள் விட்டு விட்டுக் காட்டப்பட்டன. கருணாநிதியின் பிம்பம் அங்கு எதற்கு? இது கிறிஸ்துமஸ் விழாவா அல்லது திமுக குடும்ப விழாவா?
வந்திருந்த கிறிஸ்தவப் பெரியவர்கள் முதல்வரை அளவுக்கு அதிகமாகத் துதி பாடி, தங்கள் தரத்தைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள்.
முதல்வர் பேசும் பொழுது அவருக்குப் பின்னால் யேசு சம்பந்தப்பட்ட பிம்பங்கள் காட்டப்பட்டன. இதை முதலிலேயே செய்திருக்கலாமே?
இதுவும் திமுகவின் முதல் குடும்பத்தை திருப்திப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது போல் தெரிகிறது. இதைச் செய்த கிறிஸ்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.
எந்த மதத்தையும் பாகுபாடின்றி அணுகி, அனைவரின் கோரிக்கைகளுக்கும் அரசு செவி சாய்த்திருப்பதாகச் சொன்னார் முதல்வர். எனக்கு திருப்பரங்குன்றம் தான் ஞாபகம் வந்தது. பொது மேடையில் பொய் சொல்வதே திமுகவினருக்கு வழக்கம் ஆகிவிட்டது.
யேசு பிறந்த நிகழ்ச்சியை திமுகவின் விளம்பர மேடையாக பயன்படுத்திக் கொண்டார் முதல்வர். விழா ஏற்பாட்டாளர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.
திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் எதிர்மறை எண்ணங்களை வெளியிடுவதை முதல்வர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதே வழக்கம் இயேசுவின் பிறப்பை கொண்டாடச் சென்ற இடத்திலும் தொடர்கிறது. அங்கு சென்று நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தாமல் மத்திய அரசை வசை பாடுவதற்கு என்ன அவசியம்?
மக்களுக்கு நல்ல உதாரணமாகத் திகழ வேண்டிய முதல்வரே மிகவும் மோசமான முன்னுதாரணமாக திகழ்கிறார்.
2. உதயநிதி 
சென்னையில் டான் போஸ்கோ ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சி. துணை முதல்வரும் தந்தை மாதிரியே இந்த மேடையைத் திமுகவின் பிரச்சார மேடையாக மாற்றிக் கொண்டார். திமுக மத்திய அரசின் மீது தொடர்ந்து வைத்து வரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டுப் பேச என்ன அவசியம், இயேசுவின் பிறப்பைக் கொண்டாட வந்த இடத்தில்? துணை முதல்வரின் பேச்சு அப்பட்டமான சிறுபான்மையினர் அரசியல் பேச்சு. இதை அவர் தவிர்த்து இருக்க வேண்டும். அதுதான் கண்ணியம்.
இது இந்தக் குடும்ப trait. நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. விழா ஏற்பாட்டளர்களும் அங்கு குழுமியிருந்த கிறிஸ்தவப் பெரியவர்களும் யோசிக்க வேண்டும்.
3. நடிகர் ஜோசப் விஜய்: 
மகாபலிபுரத்தில் நடிகர் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்மஸ் விழா. ஆரம்பம் சிறப்பாக இருந்தது. கோலாகலம், கொண்டாட்டம் எல்லாமே. பங்கேற்றவர்கள் இடையில் நல்ல bonding இருந்தது.
ஆனால், கிறிஸ்தவப் பெரியவர்கள் உரை நிகழ்த்த ஆரம்பித்தவுடன் அந்த விழாவின் பரிசுத்தம் அகன்று விட்டது. ஏதோ உலகை உய்விக்க ஏசுதான் விஜய்யை அனுப்பி வைத்திருப்பது போல, என்னென்னவெல்லாம் கதை கட்டினார்கள் அங்கு பேசியவர்கள் !
234 தொகுதிகளிலும் நாங்கள் உங்களுடன் இருப்போம்... நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்..... இப்படிப் போகிறது தனி மனித ஸ்துதி. இயேசுவைத் துதிப்பதை விட்டு, நடிகரை துதிப்பதே வேலை என்றாக்கிக் கொண்டார்கள்.
விஜய் உள்ளுக்குள் ரசித்தார், ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முகத்தைச் சீராக வைத்துக் கொண்டு கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
நடிகர் விஜய் அதிக நேரம் பேசாமல் ஐந்தே நிமிடங்கள் பேசியதுதான் இங்கு சிறப்பு.
முதலில் இந்த மேடையை
கிறிஸ்தவத்தைப் பரப்பும் மேடையாகப் பயன்படுத்திக் கொண்ட விஜய், இந்த நிகழ்ச்சியைத் தற்பெருமைக்காகவும் பயன்படுத்திக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தன்னை அந்த Biblical "ஜோசப்" உடன் மறைமுகமாக ஒப்பிட்டுக் காட்டி கிறிஸ்தவர்களின் ஆதரவைத் தேடினார் விஜய். ஆரம்பத்தில் அரசியல் கலப்பில்லாமல் நல்ல ஆன்மீக நிகழ்ச்சி போல் இருந்த மேடை, குறைந்த நேரத்தில் முற்றிலுமாக அரசியல் மேடையாகிவிட்டது வருத்தத்திற்குரியது.
4. ஆதவ் அர்ஜுனா
/ திருச்சி வேலுச்சாமி 
அருமனை கிறிஸ்த்மஸ் விழா. ஒரு நல்ல ஆன்மீக விழாவாக இருக்க வேண்டிய இதுவும் ஒரு அரசியல் விழாவாகத் தான் நடந்தது. ஆதவ் அர்ஜுனாவும் திருச்சி வேலுச்சாமியும் கிடைத்த வாய்ப்பைத் தங்கள் அரசியல் எண்ணங்களை வெளியேற்றப் பயன்படுத்திக் கொண்டார்கள். மாசுபட்டது விழா. மாசுபட்டது விழாவுக்கு வந்திருந்த கிறிஸ்தவப் பெரியவர்கள்.
5. நரேந்திர மோடி 

டெல்லியில் கதீட்ரல் church of The redemption சர்ச்சில் அமைதியாக உள்ளே சென்றார் பிரதமர். Minimum security. Minimum protocol. சர்வீஸ் நடந்து கொண்டிருந்தது. பிரதமர் வருகைக்காக நிறுத்தப்படவில்லை. முதல் வரிசையில் முதல் சீட். எல்லோருடனும் ஒருவராக அமர்ந்தார் பிரதமர். கேரோல்ஸ் பாடப்பட்டது. ரசித்தார் பிரதமர்.
பிரதமரை அழைத்து நிற்க வைத்து ஆசீர் வசனங்கள் படித்தார்கள் பாதிரிகள். நின்ற நிலையில் கைகூப்பி கண்களை மூடி பிரார்த்தனை செய்தார் பிரதமர்.
ஆசீர்வாதம் முடிந்ததும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, கூட்டத்தினரைப் பார்த்து, கூப்பிய கையுடன் வணக்கம் தெரிவித்து விட்டு அமைதியாக வெளியேறினார் பிரதமர்.
ஆலயத்தில் இருந்த ஆன்மீகச் சூழ்நிலைக்கு பிரதமர் வருகையால் பங்கம் ஏற்படவில்லை.
இது ஒரு 100% ஆன்மீக நிகழ்ச்சி.
இப்போது சொல்லுங்கள்.... மதத்தை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்று.
~ வாசுதேவன் பேட்டி
No comments:
Post a Comment