அரியலூர் இலையூர் காசி விஸ்வநாதர் கோவில் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு UPDATED : டிச 19, 2025
அரியலுார்: அரியலுார் மாவட்டம், இலையூரில் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் மூலவரான லிங்கம் மரகதமாகும்.

நேற்று முன்தினம் மாலை, பிரதோஷத்தையொட்டி லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், அதே கிராமத்தை சேர்ந்த குருக்கள் கலியபெருமாள், 81, கோவிலை பூட்டி, சாவியை தலைக்கு அடியில் வைத்து அங்கேயே உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது சாவியை காணவில்லை. கோவிலில் கதவு திறக்கப்பட்டு, மரகத லிங்கம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
பெரம்பலுார் எஸ்.பி., விஷ்வேஷ் பா.சாஸ்திரி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., ரவிச்சக்கரவர்த்தி, ஹிந்து சமய அறநிலைத்துறை ஜெயங்கொண்டம் செயல் அலுவலர் சிவனேயசெல்வன் உள்ளிட்டோர் கோவிலில் ஆய்வு செய்தனர். போலீசார், சிலையை திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.
அரியலூர் இலையூர் பழமை வாய்ந்த சிவன் கோவிலில்.. பல கோடி மதிப்பு மரகத லிங்கம் கொள்ளை
https://www.dailythanthi.com/news/tamilnadu/emerald-lingam-worth-crores-of-rupees-stolen-from-a-thousand-year-old-temple-1196145




No comments:
Post a Comment