திமுக அரசு - சென்னை ஹைகோர்ட் கொலிஜீயம் தேர்வு மீது வழக்கு எதிர்மறை விமரசனம் (அவதூறு) பரப்புகிறது https://www.facebook.com/story.php?story_fbid=25969582229292135&id=100000011388459
ஆனால் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக் கொண்டு தமிழநாடு அரசு செய்தித்துறை என்பது தற்போது வெளிப்படையாகவே திமுக என்ற கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர எல்லாவிதங்களிலும் பாடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு அதிகாரிகளும் திமுக உறுப்பினர் அட்டை இல்லாத உறுப்பினர் போலவே செயல்பட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக நீதிபதி நிஷா பானு விசயத்தில் திமுக தவறான பாதையில் தைரியமாக சென்று வருவதை வழக்குரைஞர்கள் அனைவரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர்.
தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) கீழே கொடுக்கப்பட்ட தகவலை பிடிப் வழியாக அனைவருக்கும் அனுப்புகிறது. இது சார்ந்த விவாதங்களை முன்னெடுக்கின்றது. எனவே இதனைப் பரப்பி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றக் குழுவின் நீதிபதிகளாக பரிந்துரை, வழக்கறிஞர் வேட்பாளர்களை மட்டும் நீக்கக் கோரி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது வழக்கறிஞர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதில் மாவட்ட நீதிபதிகள் சேர்க்கப்படவில்லை.
அந்த வழக்கறிஞரின் பெயர் கே. கருப்பசாமி. அவரது முகவரி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள டொம்புச்சேரி கிராமம். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், அவர் ஒரு திமுக ஆதரவாளர். ஏ.கே. ராஜன் தான் இதனைத் தயாரித்து, கே. கருப்பசாமியை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். திமுக நீதிபரிபாலன முறையில் தற்கொலைக்குச் சமமான தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனப் பரிந்துரைகள் தொடர்பான வழக்கு
* சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நியமன பரிந்துரைகளை எதிர்த்து பொது நல வழக்கு.
* அரசமைப்புச் சட்ட மீறல் என குற்றச்சாட்டு.
* வழக்கறிஞர் அ. பிரேம் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
* இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற கலீஜியம் சமீபத்தில் மேற்கொண்ட நீதிபதி நியமன பரிந்துரைகள், அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நடைமுறைகளுக்கு முரணானவை என்றும், குறிப்பாக பரிந்துரை செய்த கலீஜியம் அமைப்பே சட்டப்படி சரியானதாக இல்லை என்றும் மனுவில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மூத்த மூன்றாவது நீதிபதி பங்கேற்பின்றி பரிந்துரை
* சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான நீதிபதி ஜெ. நிஷா பானு (J3) அவர்கள், கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பெற்றிருந்த போதிலும், அங்கு பொறுப்பேற்காத காலகட்டத்தில், சட்டப்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவே தொடர்ந்தார்.
* அத்தகைய நிலையில், அவரை கலீஜியத்தில் சேர்க்காமல், நான்காவது மூத்த நீதிபதியுடன் J3 என கலீஜியம் அமைத்து நீதிபதி நியமன பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பது, "Chief Justice + இரண்டு மூத்த நீதிபதிகள்" என்ற அரசமைப்புச் சட்ட அடிப்படை கோட்பாட்டை மீறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு - முக்கிய சட்ட ஆதாரம்
* இந்த வாதத்துக்கு ஆதாரமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி K. G. Balakrishnan, M.K. Sasidharan v. Hon'ble Chief Justice of India என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை மனுதாரர் மேற்கோளாக காட்டியுள்ளார்.
* அந்தத் தீர்ப்பில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாலும், அவர் புதிய நீதிமன்றத்தில் பதவி ஏற்கும் நாள் வரை, மாற்றம் செய்யப்பட்ட நீதிமன்றத்திலேயே நீதிபதியாகத் தொடர்வார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
* மேலும், "மாற்ற உத்தரவு வெளியான நாளிலேயே நீதிபதி பதவி விலகியதாகக் கருதினால், அவர் இடைப்பட்ட காலத்தில் எந்த நீதிமன்றத்திற்கும் சொந்தமில்லாத நிலை உருவாகும்; அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது" என்றும் கேரள உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
கலீஜியம் பரிந்துரைகள் - நீதித்துறை தனித்துவத்திற்கு ஆபத்து?
* மனுவில் பரிந்துரைக்கப்பட்ட நபர்களாக எம். கருணாநிதி, ஆர். ராஜேஷ் விவேகானந்தன், இ. மனோகரன், நா. ரமேஷ், ஜி. கே. முத்துக்குமார், எஸ். ரவீகுமார், சி. ஐயப்பராஜ், ந. திலீப் குமார், அ. எட்வின் பிரபாகர், கே. கோவிந்தராஜன், எம். கார்த்திகேயன், ரஜ்னிஷ் பாதியல் மற்றும் ஆர். அனிதா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
* இவர்கள் அனைவரும் அரசியல் பின்னணி அல்லது அரசியல் அமைப்புகளுடன், மத்திய அரசு மற்றும் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதும், இது நீதித்துறை தனித்துவத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
* நீதிபதி நியமனம் என்பது தனிநபர் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல; திறமை, நேர்மை, சுயாதீனம் மற்றும் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என்பதே அரசமைப்பின் அடிநாதம் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
* இதன் அடிப்படையில், தற்போதைய கலீஜியம் பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், சரியான கலீஜியம் அமைப்புடன் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடவும் மனுதாரர் கோரியுள்ளார்.
* இந்த வழக்கு, நீதிபதி மாற்றம், கலீஜியம் நடைமுறை மற்றும் நீதித்துறை சுயாதீனம் தொடர்பான முக்கிய அரசமைப்புச் சட்டக் கேள்விகளை மீண்டும் தேசிய அளவில் முன்வைத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் அவர்கள் தனபால் அவர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வருவதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தகவல் தெரிவிக்கின்றது.
ஆனால் உயர் நீதிமன்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு உடனடியாக விசாரிக்க தேவை இல்லை என்ற காரணத்தினால் இந்த வழக்கானது விடுமுறை காலத்தில் விசாரிக்கப்பட மாட்டாது என்பதாகவும் விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதாகவும் தெரிகிறது.
திமுக என்ற கட்சிக்கு #பென் என்ற நிறுவனம் மக்கள் தொடர்பு பணி செய்வது வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அது முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளவர் குடும்பத்தின் "சலவை எந்திரம்" என்பதால் அதனை மத்திய அரசு தான் கண்காணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment