Sunday, December 7, 2025

வீரக்(நடு)கற்களை 'பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்' இல்லை என்பதை மாற்றி, என அறிவிக்க வேண்டும் .




// நடுகல்லை நடுகல் என்று தெரியாமல் வழிபடுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். போரில் நேரிட்டுப் போரிட்டு மரணமடைந்த வீரன் யோகத்தினால் வீடுபேறடைந்த ஒரு துறவிக்கு ஸமமானவன் என்று பராசர ஸ்ம்ருதி கூறுகிறது.

த்வாவிமௌ புருஷௌ லோகே ஸூர்யமண்டல பேதினௌ

பரிவ்ராட் யோகயுக்தஸ்ச யுத்தே சாபிமுகோ ஹத:

என்று யோகத்தினால் இயைந்த ஒரு துறவியும் போரில் நேரிட்டு நின்ற வீரமரணமடைந்த ஒருவனும் ஸூர்யமண்டலத்தை உடைத்துக் கொண்டு வீடுபேறடைவர் என்கிறது ஸ்ம்ருதி. ஒரு யோகியை வழிபடுவதைப் போல வீரனை தெரிந்தோ தெரியாமலோ வழிபடுவதில் தவறென்ன....//

வீரஸ்வர்க்கம்

போர்களத்தில் தம் தாய் நாட்டைக் காக்கும் முயற்சியில் ஒரு போர் வீர் மரிக்கிறார் . இந்த மரணம் “ அகால மரணம் ” என்ற வகையில் சேராது , இறந்த பின் அவர் உயிர் விண்ணுலகத்தில் உள்ள வீரஸ்வர்க்கம் – என்ற இடம் சேரும் என நம் ஆன்றோர் நூல்கள் கூறுகின்றன . “ தன்னைக் கொல்ல வந்த ஒரு பசு மாட்டையே ஒருவன் கொல்லலாம்” என நம் அறநூல்கள் சொல்கின்றன . இவ்வாறு பிறர் உயிரைக் காக்கும் முயற்சியில் ஒருவன் இறப்பான் என்றால் , அவன் உயிர் அசுத்த ஆவியாக்கழியாமல் , உடனே வீரச்செயல் – ஸ்வரங்களில் ஒன்றான வீரஸ்வர்க்கம் புகும் . வீரஸ்வர்க்கம் புகுந்த ஒருவன் / ஒருத்தி க்கு நடுகல் எடுத்து ஊரார் வழிபாடு இயற்றுவர்

நடுகல் வழிபாடு என்பதில் ஹிந்து சமயக் கூறுகள் , முன்னோர் வழிபாடு ( ‘ தென்புலத்தார் ’ என்று இதனை சிறப்பித்துக் கூறுகிறார் திருவள்ளுவர் ) , இயற்கை வழிபாடு என எல்லாம் கலந்துள்ள ஒரு பண்பாட்டுக் கருவூலம் . அதனைப் போற்றுவது ஸநாதன வழிமுறையே . மேலே எழுதிய வண்ணம் நம்முடைய ஸமிருதிகளில் கூட இது போற்றப் படுகிறது .

ஸநாதன தர்மத்தின் பண்பாட்டுச் சின்னங்களை – நடுகற்களை – ‘ பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் ‘ , என அறிவித்து , உரிய மரியாதைகள் தந்து உடனே தமிழக அரசும் , தமிழக தொல்லியல் துறையும் ஆவன செய்ய வேண்டும் . 

முனைவர் பேராசிரியர் G சங்கர நாராயணன்

No comments:

Post a Comment

போடி திமுக நகராட்சித் தலைவரின் நிறுவனத்தில் ஏலக்காய் கிடங்கில் ED துறை சோதனை

போடி  திமுக நிர்வாகி  நகராட்சித் தலைவரின்  நிறுவனத்தில் ஏலக்காய் கிடங்கில் ED துறை சோதனை: பூட்டை உடைத்து தீவிர ஆய்வு போடியில் அமலாக்கத் துறை...